இன்று ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி...
வசுதேவ சுதம் தேவம் கம்ச சானூர மர்த்தனம்
தேவகீ பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
* * *
பெரியாழ்வார் அருளிய திருப்பாசுரங்களுடன்
ஸ்ரீ கிருஷ்ண தரிசனம்..
சீதக் கடல்உள் ளமுதன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாதக்கமலங்கள் காணீரே பவளவாயீர் வந்து காணீரே.. (23)
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகிழ்நகையீர் வந்து காணீரே.. (28)
மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீலநிறத்துச் சிறுபிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத்தலங் கள்வந்து காணீரே கனங்குழை யீர்வந்து காணீரே.. (34)
மண்ணும் மலையும் கடலும் உலகேழும்
உண்ணுந் திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு
வண்ணம் எழில்கொள் மகரக் குழையிவை
திண்ணம் இருந்தவா காணீரே சேயிழையீர் வந்து காணீரே.. (40)
முற்றிலும் தூதையும் முன்கைம்மேல் பூவையும்
சிற்றில் இழைத்துத் திரிதரு வோர்களை
பற்றிப் பறித்துக் கொண்டு ஓடும் பரமன்தன்
நெற்றி இருந்தவா காணீரே நேரிழையீர் வந்து காணீரே.. (41)
எண்ணெய்க் குடத்தை உருட்டி இளம்பிள்ளை கிள்ளி எழுப்பி
கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே
உண்ணக் கனிகள் தருவன் ஒலிகடல் ஓதநீர்
பூணித் தொழுவினில் புக்குப் புழுதி அளைந்த பொன்மேனி
காணப் பெரிதும் உகப்பன் ஆகிலுங் கண்டார் பழிப்பர்
நாணெத் தனையும் இலாதாய் நப்பின்னை காணில் சிரிக்கும்
மாணிக் கமேஎன் மணியே மஞ்சன மாடநீ வாராய்..(160)
தேனில் இனிய பிரானே.. செண்பகப் பூச்சூட்டிக் கொள்ள வாராய்!.. என்னை எங்கே அழைக்கிறாய் நீ?.. என் இதயம் எனும் இல்லத்திற்குத் தான்!... |
ஆநிரை மேய்க்கநீ போதிஅரு மருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன்கரிய திருமேனி வாட
பானையில் பாலைப் பருகிப் பற்றாதார் எல்லாம் சிரிப்ப
தேனில் இனிய பிரானே செண்பகப் பூச்சூட்ட வாராய்.. (182)
கறுத்திட்டு எதிர்நின்ற கஞ்சனைக் கொன்றான்
பொறுத்திட்டு எதிர்வந்த புள்ளின் வாய் கீண்டான்
நெறித்த குழல்களை நீங்க முன்னோடி
சிறுக் கன்று மேய்ப்பார்க்கு ஓர்கோல் கொண்டு வா
தேவ பிரானுக்குக் கோல் கொண்டு வா.. (174)
தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம்படு நாகத்தை வால்பற்றி ஈர்த்து
படம்படு பைந்தலை மேலெழப் பாய்ந்திட்டு
உடம்பை அசைத்தானால் இன்று முற்றும்
உச்சியில் நின்றானால் இன்று முற்றும்.. (215)
பற்றார் நடுங்கமுன் பாஞ்சசன் னியத்தை வாய்வைத்த போரேறேஎன்
பற்றார் நடுங்கமுன் பாஞ்சசன் னியத்தை வாய்வைத்த போரேறேஎன்
சிற்றாயர் சிங்கமே சீதைமணாளா சிறுகுட்டச் செங்கண்மாலே
சிற்றாடையும் சிறுபத்திரமும் இவைகட்டிலின் மேல்வைத்துப் போய்
கற்றாயரோடு நீகன்றுகள் மேய்த்துக் கலந்துடன் வந்தாய் போலும்.. (248)
தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம்மத் தளிதாழ் பீலி
குழல்களும் கீதமுமாகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டங்கண்டு
மழைகொலோ வருகின்ற தென்று சொல்லி மங்கைமார் சாலக வாசல் பற்றி
நுழைவனர் நிற்பனராகி எங்கும் உளம்விட்டு ஊண்மறந்து ஒழிந்தனரே.. (254)
குன்றெடுத்து ஆநிரை காத்த பிரான் கோவலனாய்க் குழலூதி ஊதி
கன்றுகள் மேய்த்துத் தன்தோழரோ கலந்துடன் வருவானைத் தெருவில்
கண்டுஎன்றும் இவனையொப்பாரை நங்காய் கண்டறியேன் ஏடிவந்து காணாய்
ஒன்றும் நில்லாவளை கழன்று துகிலேந்திள முலையுமென் வசமல்லவே.. (257)
நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கைமீர்கள் இதுவோ ரற்புதம் கேளீர்
நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கைமீர்கள் இதுவோ ரற்புதம் கேளீர்
தூவலம்புரியுடைய திருமால் தூய வாயில் குழலோசை வழிய
கோவலர் சிறுமியரிளங் கொங்கை குதுகலிப்ப உடலுளவிழ்ந்து எங்கும்
காவலும் கடந்து கயிறு மாலையாகி வந்து கவிழ்ந்து நின்றனரே.. ( 275)
வெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்த் திருச்சக்கரம் ஏந்துகையன்
உள்ள இடம்வினவில் உமக்குஇறை வம்மின் சுவடுரைக்கேன்
வெள்ளைப் புரவிக்குரக்கு வெல்கொடித் தேர்மிசை முன்புநின்று
கள்ளப் படைத்துணை யாகிப்பாரதம் கைசெய்யக் கண்டாருளர்.. (334)
***
***
நல்லோரைக் காக்கவும்
தீயோரைத் தொலைக்கவும்
தீயோரைத் தொலைக்கவும்
இப்புவியில் அறத்தை நிலை நிறுத்தவும்
நான் யுகங்கள் தோறும் பிறக்கின்றேன்!..
-: ஸ்ரீ ஹரிபரந்தாமன் :-
-: ஸ்ரீ ஹரிபரந்தாமன் :-
ஓம் ஹரி ஓம்
* * *
காலை வணக்கம். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்...
நீக்குதங்களுக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்...
எஸ் பி பி குரல் மனதினில் ஓடிஏ, அப்படிப் பாடுவதாக நினைத்துக்கொண்டு வசுதேவ சுதம் தேவம் வரிகளை பாடினேன்!!!
பதிலளிநீக்குஇனிமை.. இனிமை...
நீக்குதமிழ் அமுத வரிகளுடன் மேலும் அழகிய படங்களுடன் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம். ரசித்தேன்.
பதிலளிநீக்குதங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குகஞ்சன்தான் கம்சனா?!!
பதிலளிநீக்குகஞ்சன் தான் கம்சன்..
நீக்குஇவனே தான் அவன்.. அவனே தான் இவன்..
பெரியாழ்வார் மட்டுமல்லாது சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாளும் கஞ்சன் என்றே குறிக்கின்றாள்..
அன்பிலும் அறிவிலும் அவன் கஞ்சன்..
அதனால் இருக்குமோ!..
கம்சன் - வடமொழி. அதனால் கஞ்சன் என்று தமிழில். இதுபோலவே, தேஜஸ் என்பது வடமொழி. தேசு என்பது தமிழில். வைஷ்ணவன் என்பது வடமொழி. வைட்டினவர் என்று தமிழ்ப்பாசுரத்தில் வரும். இராட்சசர்கள் என்பது வடமொழி. இராக்கதர்கள் என்று பாசுரத்தில் வரும் (காகம் இராக்கதன் மன்னர் காதலி கத்திரபந்து- இது க்ஷத்திரபந்து என்பதன் தமிழ் வார்த்தை) இதுபோல் பல வார்த்தைகளைக் குறிப்பிடலாம்.
நீக்குநெல்லை நான் சொல்ல நினைத்ததைச் சொல்லிட்டீங்க. பாசுரங்களில் நல்ல தமிழ்வார்த்தைகளைக் காணலாம். இப்போது தமிழ் தமிழ் என்று தமிழ்மொழிக் காப்பாளர்கள் பல வடமொழி கலப்புச் சொற்களுக்குத் தமிழ்ச் சொல் தேடி முயன்று என்னென்னவோ சொல்லிவருகின்றனரே பாசுரங்கள், தேவாரம், திருவாசகம், எல்லாம் தேடினாலே கிடைத்துவிடும்க்.
நீக்குகீதா
கஞ்சன் தான் கம்சன். சிலப்பதிகாரத்திலும் வரிப்பாடல்களில் வரும் ஸ்ரீராம். அழகிய பாசுரங்களுடன் கண்ணன் தரிசனம். இன்னிக்கு வேலைகளை முடித்துக் கொண்டு சாயந்திரம் வரப்பார்க்கிறேன். கிருஷ்ண ஜயந்தி வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅன்புடையீர்...
நீக்குதங்கள் இல்லத்தில் கலகலப்பாக இருக்கும் ...
அதிரசம் , சீடை , பால் பாயாசம் எல்லாம் அனுப்பி வைக்கவும்..
தங்களுக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்...
அருமை
பதிலளிநீக்குநன்றி ஐயா
அன்புடையீர்..
நீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...
அழகிய படங்கள்
பதிலளிநீக்குகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் ஜி
அன்பின் ஜி...
நீக்குவருகைக்கு மகிழ்ச்சி...
தங்களுக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்...
அருமையான பாசுரங்களின் சேவையும் ..படங்களும் ..அற்புதம்
பதிலளிநீக்குகண்ணன் திருவடிகளே சரணம்..
தங்களுக்கும் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குதலைப்பு என்னைக்,
பதிலளிநீக்குகண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்
ஏழைக் கண்ணீருக் கண்டதும் கண்ணன் வந்தான்
பாடலை நினைவுபடுத்தியது.
ப்ரபந்தப் பாடல்கள் தேர்ந்தெடுத்துப் போட்டிருக்கீங்க." நாவலம்பெரிய தீவினில் வாழும் நங்கமீர்கள் ஈதோர் அற்புதம் கேளீர்" பெரியாழ்வார் திருமொழி முக்கியப் பாடல். ஆநிரை மேய்க்க நீ போதி அருமருத்து ஆவது அறியாய் பாடலும்தான்.
பிறகு வருகிறேன்.
அன்பின் நெ.த...
நீக்குதங்களது வருகைக்கு மகிழ்ச்சி...
தாங்கள் குறித்துள்ள இரண்டு திருப்பாசுரங்களையும் பதிவில் சேர்த்துள்ளேன்..
எம்பெருமான் தங்கள் வாயிலாக எடுத்துக் கொடுத்துள்ளான்...
அடியேனையும் அவன் கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றான் - எனும் போது மேனி சிலிர்க்கின்றது..
மீண்டும் வருக.. மேலும் கருத்துரைகளைத் தருக...
இதற்கு முந்தைய பதிவும்
தங்கள் கருத்துரையால் சிறக்கட்டும்...
பகிர்ந்த படங்கள் எப்போதும்போல் மிக அருமை. கண்ணனை அடிக்க அசோதை கோல்கொண்டு செல்வதும், வெண்ணெய் திருடுபவனை அசோதை கோலோடு தேடிவர, பலராமன் தூணின் பின்புறம் பதுங்குவதும் மிக அழகாக ஓவியத்தில் வரைந்துள்ளனர். படங்களை மிகவும் ரசித்தேன்.
நீக்குகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் ஐயா.
பதிலளிநீக்குதங்களுக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்...
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...
கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅழகான படங்கள். பாசுரங்களின் எளிமையும், தெளிவும் மனதை கவர கண்ணனின் திவ்ய தரிசனம் கண்டேன். ஆனந்தத்தில் அவனுடனேயே கரைந்து விட கூடாதாவென மனம் விரும்புகிறது. அழகான பாடல்கள். கண்ணனின் அன்பு மலரடியே சரணம். பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்ன்புடையீர்..
நீக்குதங்களுக்கு நல்வரவு..
இங்கே சொல்லியிருக்கின்றீர்களே -
ஆனந்தத்தில் அவனுடனேயே கரைந்து விடக்கூடாதாவென மனம் விரும்புகின்றது!.. - என்று..
இந்த வார்த்தைகள் தான் நிதர்சனம்!...
அன்பின் அழைப்பினை ஏற்று வருகை தந்து கருத்துரையும் வாழ்த்துரையும் தந்தமைக்கு மகிழ்ச்சி..
நெஞ்சார்ந்த நன்றி.
அத்தனைப் படங்களும் அழகு.
பதிலளிநீக்குபாசுரங்கள் பகிர்வும் அருமை.
காலை உறவினர் வீட்டு விழா, மாலை வீட்டில் சின்னதாக கண்ணன் வழிபாடு.
இப்போதுதான் பார்த்தேன் பதிவை.
விஸ்வரூப தரிசனம் கிடைக்கப் பேற்றேன்.
நன்றி.
வாழ்த்துக்கள்.
தங்கள் அன்பின் வருகையும்
நீக்குகருத்துரையும் வாழ்த்துரையும் மிக்க மகிழ்ச்சி...
தங்களுக்கும் நெஞ்சார்ந்த
வாழ்த்துகள்...
நன்றி...
அழகான படங்கள்.
பதிலளிநீக்குகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.
அன்பின் வெங்கட்..
நீக்குதங்களுக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்...
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...
கண்ணனைக் கண்டேன், மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
படங்களும் பதிவும் சிறப்பு ஐயா/ அண்ணா
பதிலளிநீக்கு