வெள்ளி, ஆகஸ்ட் 10, 2018

அழகு தரிசனம்..

இன்று ஆடிமாதத்தின்
கடை வெள்ளி...

புண்ணியங்கள் எல்லாம்
ஒருசேரப் பொருந்தியிருக்கும்
பொன்னாள்..

இந்நன்னாளில்
அம்பிகையின் பொற்பாதங்கள்
என்றென்றும் நம் சிந்தையில்
பொருந்தியிருக்க வேண்டுவோம்..

ஆடிப்பூரத் திருவிழாக்கள்
நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில்
அழகிய படங்களை வழங்கிய
சிவனடியார் திருக்கூட்டத்தினர் தமக்கு
மனமார்ந்த நன்றி..

ஸ்ரீ அபிராமவல்லி
ஸ்ரீ அபிராமவல்லி
திருக்கடவூர
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே..(004)


ஸ்ரீ காந்திமதி
ஸ்ரீ காந்திமதி
திருநெல்வேலி
கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன்செய்த
புண்ணியம்எது என்னம்மே புவி ஏழையும் பூத்தவளே..(012)

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி
திரு ஆனைக்கா
ஸ்ரீ மட்டுவார்குழலி
திருச்சிராப்பள்ளி
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே..(024)

மாமதுரை ஸ்ரீ மீனாள்
ஸ்ரீ பர்வதவர்த்தனி
திரு இராமேஸ்வரம்
ஸ்ரீ நீலாயதாக்ஷி
ஸ்ரீ நீலாயதாக்ஷி
திரு நாகப்பட்டினம்
புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங் குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம்சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே..(041)

ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி
ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி
ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி
திரு ஐயாறு
நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகி யாதியுடையாள் சரணம் அரண் நமக்கே..(050)
***

ஓம் 
சக்தி சக்தி
சக்தி
ஓம்
ஃஃஃ

14 கருத்துகள்:

  1. திருக்கடையூர் அபிராமவல்லி தரிசனம் அதிகாலையில், ஆடியின் கடைவெள்ளியில்... நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அவர் மட்டுமா?

    அடுக்கடுக்காய் அம்மன் தரிசனம் அதிகாலையில் எமக்கு கிட்டிட வழி செய்தீர்கள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்!

    அன்னையின் தரிசனம் ஆடிவெள்ளிக்கு சிறப்பு.

    அம்பிகையைச் சரண் அடைந்தால் அதிக வரம் பெறலாம் .

    முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே

    எல்லோருக்கும் வரம் அருளட்டும் அன்னை பராசக்தி.

    பதிலளிநீக்கு
  4. உங்களால், எங்களுக்கு வீட்டிலிருந்தே தரிசனம். நன்றி.

    பதிலளிநீக்கு
  5. தரிசனம் தொடரட்டும் ஐயா...

    பதிலளிநீக்கு
  6. மனம் மகிழும் தரிசனம்...

    பதிலளிநீக்கு
  7. நல்ல தரிசனம். பாடல்களையும் படித்தேன். பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. இல்லாத்தில் இருந்தே அபிராமியை தரிக்க செய்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  9. தரிசனம் நன்று ஜி வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
  10. ஆடி வெள்ளியான இன்று தெய்வ தரிசனம் கிடைத்ததில் மகிழ்ச்சி. படங்கள் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. துளசிதரன் :அழகு தரிசனம் உண்மையிலேயே அழகு தரிசனம் தான் அருமையான அன்னையின் படங்கள்!

    கீதா: அக்கருத்துடன்...துரை அண்ணா அபிராமி அந்தாதியில் பல ரொம்ப ரிதமிக்காக இருக்கும்..மணியே மணியின் ஒளியே பாடலும், நாயகி நான்முகி பாடலும் ரொம்பவே அழகான பாடல்கள்...ரசித்தேன் பாடலையும் அழகு அன்னையையும்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..