வெள்ளி, ஜூன் 08, 2018

அழகு.. அழகு 3

மற்ற தளங்களில் எல்லாம் -
அப்படி இப்படியென்று அதிரடிச் செய்திகள்...

நம்முடைய தளத்தில் அப்படியான
அதிரடிச் செய்திகளுக்கு வாய்ப்புகள் இல்லை..

எனினும் -

அடுத்த பதிவில் இருந்து தான் அதிரடி ஆரம்பம்....
(சும்மா.... சொல்றது தான்!..)

கணினியைக் குடைந்து, அதற்குள் -
பொதிந்திருந்த படங்களை ஒழுங்குபடுத்தி
அவற்றுள் சிலவற்றைத் தொகுத்தேன்..

இதோ, அந்தத் தொகுப்பு - தங்களுக்காக!...

ஹலோ... இங்கே முதல்ல கவனிங்க... 
இன்னும் காஃபி வரலை!...
வெளி நடப்பு செஞ்சிடலாம்... ஆனா, 
வெளில வெயில் அதிகமா இருக்கே!..
தலை கீழாய்க் கிடந்து 
தவமிருந்தாலும்!?..
காஃபி தரலேன்னா... நூல் கண்டை உருட்டிடுவேன்!...
போகணும்.... ன்னு தோன்றது...
ஆனா, எங்கே போறது.... ன்னு தெரியலையே!...
காஃபி இல்லே..ன்னா போனாப் போகுது... 
கொஞ்சம் கஞ்சித் தண்ணியாவது ஊத்துங்க.. அம்மா!..
ஏதோ சதி நடக்குற மாதிரி இருக்கு!?....
கமிஷன் வேணும்..ன்னு கேப்போமா!....
பிளாஸ்டிக் பை எல்லாம் ஒழிக்கப் போறாங்களாமே!..
கொஞ்ச நேரம் தூங்குனது தப்பா!?..
மணிய எடுத்து கட்டிட்டானுங்க!..
பொறுமையாக வரிசையில் நின்று சுண்டல் வாங்குவோர் சங்கம்
ஜன்னல் தெறந்து இவ்ளோ நேரமாச்சு..
இன்னும் ஒருத்தரையும் காணோமே!..
தேம்ஸ் கரை எங்கே...ம்மா இருக்கு?..
அது யாருங்க ஏணி வெச்சி ஏறி வர்றது!?.. 
என்னது?... 
துப்பாக்கியோட வர்றாங்களா!.. 
சும்மா... சும்மா... உம்மா கேக்கப்படாது!.. 
சரி..  வேலை வெட்டி ஒன்னும் இல்லை..
ஒரு குட்டித் தூக்கம் போடுவோம்!... 
 
அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லீங்கோவ்!...
***
படங்கள் வழக்கம் போல
அங்கும் இங்குமாக 
FB ல் கிடைத்தவை..

எங்கும் அழகு 
எதிலும் அழகு 

வாழ்க நலம்..
ஃஃஃ

52 கருத்துகள்:

  1. அனைத்துக்கும் பொருந்திய வசனங்களை மிகவும் இரசித்தேன் ஜி.

    கடைசி படத்தை நானும் ஒருமுறை பதிவிட்டு இருந்தேன்.

    பதிலளிநீக்கு
  2. ஆஹா காப்பில ஆரம்பித்து, என்னமா கற்பனை போகுது படங்களுக்கு....சூப்பர் ஐய்யா... காலை வேளையில மகிழ்வாக இருந்து

    பதிலளிநீக்கு
  3. குட்மார்னிங்... அதிரா வந்தாலே அதிரடிதானே? அப்புறம் தனியாக வேறு அதிரடி தேவையா என்ன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      அதுதானே...
      தனியாக வேறொன்று தேவையா!..

      நீக்கு
    2. துரை அண்ணன் .. மீ இல்லாத நேரம் பார்த்து இங்கின என்னைப் பற்றி ஆரும் பேசினவையோ?:))

      நீக்கு
    3. அதிரடி இல்லாத இடமும் உண்டோ...
      அதிரடி இல்லாமல் கலகலப்பு ஏது!..

      நீக்கு
  4. முதல் படத்தில் இருப்பது அதிராவும் அஞ்சுவுமா?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // முதல் படத்தில்...//

      இப்படியும் அர்த்தம் வருகிறதா!...
      ஆனாலும் கொளுத்திப் போட்டாச்சு...

      நீக்கு
    2. ஹாஹா :) ஆமாம் ஸ்ரீராம் எனக்கு இடம் விடாம ஒரு குட்டி நடுநாயகமா இருக்கே அது அதிரா .ஓரத்தில் கோப்பையினை ஒட்டி பிடிச்சிருப்பது நான் :)

      நீக்கு
    3. முதல் படத்தில் இருப்பது.. ஆமா.. ஆமா.. ஸ்ரீராம்.. அதில் வெள்ளையா இருப்பது நானூஊஊஊ:)) மற்றது அஞ்சு.. அவட போட்டோவை ஃபோட்டோ ஷொப்ல போட்டு மினுக்கோ மினுக்கென மினுக்கி எடுத்தேன்ன்ன்ன்ன்:)).... இல்லாட்டில் அதிரா மட்டும் ஆகவும் கலரா எல்லோ தெரிவேன்.. ஹையோ எனக்கு என்னமோ ஆகுதேஎ... மீ ரன்னிங்:))

      நீக்கு
    4. அருமை...

      கோப்பைக்குள் குட்டிப் பூனைகள்...
      அந்தப் படம் தான் இந்தப் பதிவுக்குக் காரணம்...

      வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. படத்துக்குப் படம் கமெண்ட்களில் யாரை எல்லாமோ வம்பிழுத்திருப்பது போல இருக்கே...! காபி... கஞ்சி, துப்பாக்கி (துவக்கு)... ஹா... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  6. ரசனையான பதிவு. படங்களும் கமெண்ட்களும் ரசிக்க வைத்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பூனைப் படங்களும் அதற்கேற்ற வசனங்களும் அருமை.

    89ல சென்னைல, அமெரிக்கா ரிட்டேர்ன் மருத்துவத் தம்பதிகள் வீட்டுக்கு (அவங்க 30கள்தான்) கணினி சம்பந்தமாப் போயிருந்தேன். அவங்களைப் பூனைப் பைத்தியங்கள் என்றே சொல்லலாம். <நான் போனபோது அவங்க இல்லை. ஆனால் நான் அவங்க அறையில் கணினி வேலை இருந்ததால் சிலபல அறைகளுக்கும் செல்லவேண்டி இருந்தது). எங்கும் எதிலும் பூனை சம்பந்தமானவை. டேபிள் வெயிட், பேப்பர், சுவர் சித்திரங்கள், பொம்மைகள் என்று எதைப் பார்த்தாலும் பூனைகள். (உயிருள்ள பூனையை அப்போ பார்க்கலை. இன்னும் செட்டிலாகாத்துனால வளர்க்க ஆரம்பிக்கலையா அல்லது நான் பார்க்கலையான்னு தெரியலை.)

    நீங்களும் நடத்துங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..
      தங்களுக்கு நல்வரவு..
      மேலதிகமான செய்திகளைப் பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி...

      தங்கள் வருகையும் கருத்துரையும் உற்சாகம்.. நன்றி..

      நீக்கு
  8. தளம் மாறி வந்துவிட்டோமோ என்று நினைத்தேன். ரசனையை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. அருமையான படங்கள்... ரசித்தேன் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  10. பூனையார், (பூஸார்) படங்கள் எல்லாம் மிக அழகு.
    படங்களும், அதற்கேற்ற கருத்துக்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  11. படங்களும்...அதன் ரசைனையான விமர்சனமும்...

    கவர்ந்தன மனதை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  12. அங்குமிங்கும் தேடிப்பிடித்து பூனைகள் படங்கள் துரைசாரின் பதிவா இது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  13. காகாகா, காfஇ, கஞ்சினு சொல்லி இருப்பதைப் பார்த்தாலே புரியுதே! க்ர்ர்ர்ர்ர்ர்! அம்பத்தூர் வீட்டில் குடித்தனமே இருந்ததுங்க! பிரசவம் பார்த்துப் பத்தியம் வடிச்சுப் போட்டு மருந்து கிளறிக் கொடுத்து எல்லாமும் பண்ணி இருக்கேன். இவை மட்டுமா? இதோட எதிரிங்களான "வள், வள்"ளும் தான்! எதையும் வளர்க்கலை. மோதிக்கப்புறம் வீட்டில் செல்லங்களே வேணாம்னு வைச்சுட்டோம்! எல்லாம் தானாக வந்து உறவு கொண்டாடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      பதிவின் நகைச்சுவையை ரசித்தமைக்கு நன்றி...

      எங்கள் வீட்டில் நாய்களைத்தான் அதிகம் வளர்த்தோம்...

      ஒருமுறை நாய் செய்த பிழையால்
      அந்தப் பழக்கம் விடுபட்டுப் போயிற்று...

      ஆனாலும் நாய்களும் பூனைகளும் வீட்டுக்கு வருவதும் போவதும் குறையவில்லை..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. நாங்களும்!

      எங்களுக்கும் இந்த அனுபவம் உண்டு..

      ஆனாலும் நாய் செய்த பிழை என்பதைவிட, அவசர அவசியங்களுக்கு அவற்றை தனியாக விட்டுச் செல்வதில் சிரமங்கள் இருந்தன.

      என் அப்பா அவர் சிறு வயதில் கிளி வளர்த்த கதையைச் சொல்லி இருக்கிறார். அவரே வளர்த்த பூனை அதி டிஃபன் செய்த பிறகு பூனை மேல் அவருக்கு ஒரு அலர்ஜி கடைசி வரை இருந்தது.. வீட்டுக்குள் நாயை அனுமதிக்கும் அவர் பூனையை அனுமதிக்க மாட்டார்! அவையும் தங்குவதில்லை என்பது வேறு! தயிர் சாதம் மட்டும் கிடைக்கும் இடத்தில் எந்தப் பூனை தாங்கும்!

      நீக்கு
    3. அன்பின் ஸ்ரீராம்...
      உண்மையில் பூனையிடம் கெட்ட பழக்கம் ஒன்று உண்டு...

      அது வாழ்விடத்துக்குத் தக்கவாறு மாறுபடும்...

      பூனை இயல்பாக வேட்டையாடும் பழக்கமுடையது..

      அது வேட்டையாடும் குருவியையோ எலி முதலானவற்றையோ
      தனது வீட்டிற்குள் தூக்கி வந்து விடும்..

      ஒருமுறை பக்கத்து வீட்டுக்குள் குற்றுயிராக ஒரு பாம்பைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டது..

      பூனையை பாம்புடன் விரட்டியடிக்க பகீரதப் பிரயத்தனம் செய்தனர்...

      எனவே அந்த விஷயத்தில் கவனம் தேவை...

      நீக்கு
  14. http://gsambasivam.blogspot.com/2011/05/blog-post.html பிரசவம் ஆன களைப்பு!

    பதிலளிநீக்கு
  15. முதல் பின்னூட்டத்தில் காஃபி, கஞ்சி எனப் படிக்கவும். பிழையைக் கவனிக்கலை! :)))))

    பதிலளிநீக்கு
  16. ஆஹா !!எல்லா மியாவ் குட்டீஸும் அழகோ அழகு இப்போ எனக்கு இன்னும் நாலைஞ்சி பூனை குட்டிகளை வளர்க்க ஆசையா இருக்கே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      >>> நாலைந்து பூனைக்குட்டிகளை வளர்க்க ஆசை..<<<

      நல்ல நெஞ்சங்களில் இப்படியான ஆசை எழுவது இயற்கை தானே!...

      கருத்துரைக்கு நன்றி... மகிழ்ச்சி..

      நீக்கு
  17. //நம்முடைய தளத்தில் அப்படியான
    அதிரடிச் செய்திகளுக்கு வாய்ப்புகள் இல்லை..//

    ஆமா ..ஆமா.. ஆமா.. சாமிப்போஸ்ட்டுகளில் வந்து கும்மி அடிச்சால் சாமி கண்ணைக் குத்திடாது?:) நீங்க எல்லோரையும் வம்பில மாட்டிவிடப் பார்க்கிறீங்க.. மீ வலு உசாராக்கும்:)) ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா..
      இப்படியான உஷார் பார்ட்டி...ந்னு தெரியாமல் போச்சே...

      நீக்கு
  18. அடுத்த பதிவில் இருந்துதான் அதிரடி ஆரம்பமோ?:) ஏன் துரை அண்ணன் ஏதும் குங்பூ.. கராத்தே கிளாஸ் க்குப் போகத் தொடங்கியிருக்கிறாரோ?:)) வாணாம் துரை அண்ணன் இந்த விபரீத ஆசை எல்லாம் வாணாம்ம்.. நீங்க சாமியாராவே இருங்கோ:)) அதுதான் உங்களுக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது.. ஹையோ ஹையோ வழி விடுங்கோ.. ஓவரா ஜிம் க்குப் போய் கால் சுழுக்கிடுச்சூஊஊஊ ஓடவும் முடியுதில்லை:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// இந்த விபரீத ஆசை எல்லாம் வாணாம்...///

      பெரியவங்க சொன்னா சரி..
      கேட்டுக் கொள்ள வேண்டியது தான்...

      நீக்கு
  19. பூஸ் என்றாலே பார்க்கப் பார்க்க அலுக்காதே:)).. விடிய விடியப் பார்த்துக் கொண்டே இருக்கலாஅம் விடிஞ்ச பிறகும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.. என்னா அழகு எத்தனை அழகூ.. கோடி அதிராவைக் கொட்டிய அழகூஊஊ ஹையோ ஏதோ ஒரு ஃபுளோல வந்திட்டுது மன்னிச்சுக்கோங்ங்ங்ங்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குட்டிப் பூனைகள் அழகுதான்..
      கொள்ளை அழகுதான்...

      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி..

      நீக்கு
  20. பூனைகள் அழகோ அழகு..... ரொம்பவே ரசித்தேன்.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  21. வணக்கம் சகோதரரே

    அழகான பூனைகள் படங்கள். ஒவ்வொன்றும் மிக மிக அழகாக இருக்கின்றன. அதற்கேற்ற மாதிரி அருமையாக தங்களின் வாசகங்கள். அனைத்தையும் மிகவே ரசித்தேன். கடைசியில் பதிந்த படம் எனக்கும் வாட்சபில் வந்து ரசித்துள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  22. அனைத்து படங்களும் மிக மிக அருமை அதற்கான தங்களது கமென்ட்ஸும் அருமை. ரசித்தோம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  23. காபி ஆத்த செல்லங்களுக்கு அந்தக் குயந்தை வரணுமோ?!!! அது சரி அந்த ரெண்டும் ஜெசியும் டெய்சியும் தானே…..ஹா ஹா ஹா

    வெயில்னா என்னா பேசாம யாரோட பெட்டிலியாவது நுழைஞ்சு தேம்ஸ்க்குப் போயிரலாம் அல்லது லண்டனுக்குப் போயிரலாம் அங்கதான் டெய்சிப் பிள்ளை இருக்காமே, ஜெசி மல்டி கருவாண்டி எல்லாம் இருக்காங்களாமே…வெள்ளாடலாம்…

    இது யாரையோ போல இருக்கே! தேம்ஸ்காராரோ?!!!! ஹா ஹா ஹா

    மிரட்டலைப் பாருங்க!!! இதுவும் அந்த அதிரடிதான்!!! இப்படி மிரட்டி மிரட்டியே அவங்க செக் பாவம் ஹா ஹா ஹா ஹா… நூல் கண்டை பிரிச்சு போட்டுருவேன்னு

    சரி வா நாம ரெண்டு பேரும் போயி அந்த டெய்ஸி ரொம்ப ஓடி ஓடி எல்லாரையும் விரட்டுதாம் அப்படியே போய் ஜெஸி கருவாண்டி மல்டி எல்லாம் ஒரு கை பார்த்துட்டு வரலாம்னு சொல்லுதோ…..

    ஹா ஹா ஹா ஹா குயந்தை வந்தாத்தானே காபியும் கஞ்சியும்…ஹிஹிஹி

    ஹேய் அங்க பாரு இந்த டெய்சிப் பிள்ளை ஏதோ ஜதி செய்யுது….நம்ம அம்மா கூட சொல்லிட்டிருந்தாங்கல்ல….பூசார் வீட்டுல தோட்டத்துல ஒரு பெட்டி இருக்காமே அதை காந்தம் போட்டு எடுக்கணும்னு…..வா வா நாம முந்திக்குவோம்…

    நாங்க இந்த பேப்பர் பேக்ல ஒளிஞ்சுருக்கோம்னு அந்த டெய்சி, ஜெஸி க்ரூப்புக்குச் சொல்லிடாதீங்க……ஓகேவா…

    ஹா ஹா ஹா ஹா அதானே!!! ஹூம் தூங்கக் கூட விட மாட்டேன்றாங்கப்பா…

    ஹா ஹா ஹா ஹா…ஹையோ அண்ணா இந்தக் கூட்டம் பொறுமையா வாங்கும் சங்கத்துல சேர்ந்துருச்சா….நான் நினைச்சேன் அதிரடியா நுழையற கூட்டம்னுலா…

    ஆமாம் அதிரடியா எல்லாரையும் பின்ன தள்ளிட்டு நான் தான் ஃபர்ஸ்டூஊஊஊஊஊஉனு வந்தா யாரு வந்திருப்பாங்க எல்லாரும் விழுந்துஎ ழுந்து வர வேண்டாமா…ஹா ஹா ஹா ஹா
    ஹையையோ அதை மட்டும் கேக்காத அப்புறம் நம்மள தேம்ஸ்ல தள்ளி விட்டுருவாங்க………அம்மா நமக்குத்தான் நீச்சல் தெரியுமே……வா போய் ஒண்டிக்கு ஒண்டியா நமக்கும் ஆச்சு அதுக்கும் ஆச்சுனு டெய்சி பிள்ளைய, ஜெசிய பார்த்துட்டு வருவோம்…

    ஷ்ஷ்ஷ்ஷ்ச்…அம்மா குரல் கொடுக்காத….எப்படியோ தேம்ஸ்கு வந்தாச்சு…..அங்க பாரு அது பாக்கறத….

    அங்க பாரு அம்மா அது பயந்து போயிருச்சு நாம துப்பாக்கியோட வந்துருக்கோமோனு….அந்த வெள்ளை கொடிய எடுமா விரிச்சுருவோம்….

    ஹா ஹா ஹா ஹா ஹா)…அம்மா என்னம்மா நீ இப்படி சொல்லுற…நான் பாரு நம்ம குடும்பத்தை எப்படி தேம்ஸ்கு கூட்டிட்டு வந்துருக்கேன் என்னைப் பாராட்டாட்டாலும் ஒரு உம்மா தரக் கூடாதா

    ஹூம் ஏதோ மிரட்டுதே அப்ப சண்டை இருக்கும்னு நினைச்சு தேம்ஸ்கு வந்தா அதிரடி டுபாக்கூர்னு தெரியுது….இம்புட்டுத்தானா போர்!!! தூக்கம் போடுவோம்…

    கீதா



    பதிலளிநீக்கு
  24. துரை அண்ணா உங்க கமென்ட்ஸ் செம....நல்லாவே வம்புக்கிழுத்துருக்கீங்க...கீதாக்கா, பூஸார் எல்லாரையும் .ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  25. படங்கள் அத்தனையும் கொள்ளை அழகு அண்ணா ரொம்ப ரசித்தோம்....

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..