புதன், ஜனவரி 03, 2018

மார்கழிக் கோலம் 19

தமிழமுதம்

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் 
வானகமும் ஆற்றல் அரிது...(101) 
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 19



குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல் 
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல் 
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை 
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால் 
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்..
  *
தித்திக்கும் திருப்பாசுரம் 


பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால்
அணிந்தேன் உன்சேவடி மேலன்பாய் - துணிந்தேன்
புரிந்தேத்தி உன்னைப் புகலிடம் பார்த்து ஆங்கே
இருந்தேத்தி வாழும் இது..(2246)
-: பூதத்தாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்
***
நல்லதோர் வீணை



சிவ தரிசனம்

திருத்தலம்
திரு இராமேஸ்வரம்


இறைவன் - ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர்  
அம்பிகை - ஸ்ரீ தர்மசம்வர்த்தனி


தல விருட்சம் - கொன்றை
தீர்த்தம் - அக்னி தீர்த்தம்
*

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக் காப்பு



அணையலை சூழ்கடல் அன்றடைத்து வழி செய்தவன்
பணையிலங் கும்முடி பத்திறுத்த பழி போக்கிய
இணையிலி என்றும் இருந்த கோயில் இராமேச்சுரந்
துணையிலி தூமலர்ப் பாதம் ஏத்தத்துயர் நீங்குமே..(3/10)

மேற்குறித்த திருப்பாடலில் ஞானசம்பந்தப் பெருமான் 
சேது அணையைக் குறிப்பதைக் காணலாம்..
இவ்வாறே திருநாவுக்கரசு சுவாமிகளும்
கடலிடை மலைகள் தம்மால் அடைத்து
என்று போற்றுகின்றார்..

கோடிமா தவங்கள் செய்து குன்றினார் தம்மை யெல்லாம்
வீடவே சக்கரத்தால் எறிந்துபின் அன்பு கொண்டு
தேடிமால் செய்த கோயில் திருஇராமேச் சுரத்தை
நாடிவாழ் நெஞ்சமே நீ நன்னெறி ஆகுமன்றே..(4/61)
-: திருநாவுக்கரசர் :-
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருஅம்மானை
திருப்பாடல்கள் 01 - 02



செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய
பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு
தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான்
அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும் 

அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்..


பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார் 
ஆராலுங் காண்டற் கரியாற் கரியான் எமக்கெளிய
பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி
வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த
ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும் 

பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய்...  

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

  1. துளசி: வணக்கம்! வெகு நாட்களாகிவிட்டது. நேற்றுத்தான் உங்கள் எல்லா பதிவிகளையும் பார்த்தேன். இறைவன் தரிசனத்தை மிகவும் மனமாரக் கண்டு களித்தேன். சில தலங்கள் சென்றதில்லை. குறித்தும் கொண்டேன்.

    கீதா: துரை சகோ இனிய காலை வணக்கம். இதோ பதிவிற்குப் போய்விட்டு வருகிறேன்...துளசி நேற்று அனுப்பிய கருத்தை இப்போதுதான் பதிவிட முடிந்தது..

    பதிலளிநீக்கு
  2. முதல் படம் வெகு அழகு! அப்புறம் அந்தப் ப்ராகாரம் பார்த்ததும் அட இராமெஸ்வரம் போல் உள்ளதே என்று நினைத்து எந்த இடம் என்று பார்க்கப் போனால் திரு இராமேஸ்வரம்....அழகு!!! என்ன ஓர் அழகு! நேரிலும் கண்டதுண்டு!! இதுவரை இராமேஸ்வரம் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தேன் உங்கள் பதிவின் வாயிலாக திரு இராமேஸ்வரம் என்று அறிந்தேன்...அடைமொழியுடன்!!!

    திருவெம்பாவை முடிந்துவிட்டது...ஆருத்ரா தரிசனத்துடன்...!

    அதிவீரராமபாண்டியரின் சொல்லும் நன்று.

    ஸ்ரீ இராமலிங்கேஸ்வரரையும் தர்மஸம்வர்த்தினி தாயையும் கண்டு நல்ல தரிசனம். ஏனோ எனக்குச் சிறு வயது முதலே திரு இராமேஸ்வரம் மீது தனி ஈர்ப்பு. ஒரு வேளை ஒவ்வொரு முறையும் இலங்கையிலிருந்து கப்பல் வழி வந்த போது இக் கடலில் நீராடி, கோயில் சென்று வணங்கி வந்ததால் இருக்கலாம். அப்புறம் மகனுடன் சென்று வந்தேன். அதன் பின் செல்ல வாய்ப்பு வரவில்லை.

    மிக்க நன்றி சகோ

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ராமேஸ்வரம் கும்பாபிஷேக சமயத்திலும் சென்றிருக்கிறோம் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. ராமேஸ்வரம் சிறு வயதில் சென்ற இடம். மீண்டும் செல்லும் ஆவல் உண்டு.

    பதிலளிநீக்கு
  5. நானும் பலமுறை இராமேஸ்வரம் சென்று இருக்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ஐயா!

    கண்கொள்ளாக் காட்சிகளும் பதிகங்களும் மனதிற்கு
    அமைதியைத் தருகின்றன.

    காசிக்கு 2 தடவையும் விஷ்ணு கயாவிற்கு 1 தரமென இவருக்குக் கடமை ஆற்றச்
    சென்ற 2 வருடங்களில் மகனுடன் சென்று தரிசித்து வந்தேன்.
    இராமேஸ்வரம் இனித்தான் போக வேண்டும்.

    எனது வாழ்நாள் முடியுமுன் இராமேஸ்வரமும் இன்னும் வேறு கோயில்களுக்கும்
    சென்று தரிசித்துவிட வேண்டுமென்பது மனதில் ஆசை, எண்ணம். அதற்கும் அழைப்புக் கிடைக்கணும்.

    தங்களின் பதிவுகளை இயன்றமட்டும் காலையிலேயே பார்த்துத் தரிசித்துவிட்டால்
    அன்றைய நாளில் கோயிலுக்குப் போய் வணங்கிவிட்டதாக ஒரு மன நிறைவு கிட்டுகிறது!
    மிகச் சிறப்பு ஐயா!
    திவ்ய தரிசனம்!

    நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. மிக சிறப்பான தரிசனம்....

    பதிலளிநீக்கு
  8. படித்தேன், பணிந்தேன், ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..