***
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 17
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்...
ஓம் ஹரி ஓம்
சிவ தரிசனம்
திருத்தலம்
திருமறைக்காடு
திருமறைக்காடு
அம்பிகை - ஸ்ரீ யாழைப் பழித்த மொழியாள்
தல விருட்சம் - வன்னி
தீர்த்தம் - மணிகர்ணிகை
அகத்திய மாமுனிவருக்கு
அம்மையப்பன் - தமது
திருமணக் கோலம்
காட்டியருளிய தலம் ..
மணி கர்ணிகை தீர்த்தம் |
ஒன்றாகத் தங்கியிருந்த திருத்தலம்..
ஸ்ரீ துர்கா - திருமறைக்காடு |
பூட்டிக் கிடந்த கோயில் கதவுகளை
திருப்பதிகம் கொண்டு அப்பர் பெருமான் திறக்கவும்
ஞானசம்பந்த மூர்த்தி அக்கதவுகளை
அடைக்கவும் ஆயிற்று..
ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
***
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 17 - 18
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள் பால்
எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குஉண் சுருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்...
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்...
*
அன்பின் இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள் பால்
எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குஉண் சுருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்...
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்...
*
அன்பின் இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
துரை சகோ! இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதுளசியும் தன் வாழ்த்துகளைத் தெரிவிக்கச் சொன்னார்...
கீதா
எம்பெருமான் நந்தகோபாலன் மற்றும் அகத்தியருக்குத் திருமணக்கோலக் காட்சி கொடுத்த திருத்தலத்தையு அம்மை அப்பன் தரிசனமும் கண்டோம்..அழகான தரிசனம்..
பதிலளிநீக்குகீதா
ஹப்பி நியூ இயர் அண்ட் 17ம் நாள் வாழ்த்துக்கள் துரை அண்ணன்.
பதிலளிநீக்குஇன்றைய மார்கழி கோலம் சிறப்பு.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவணக்கம் ஐயா!
பதிலளிநீக்குஇனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
ஏற்றம் தரும் எழிற்கோலங்கள்.
நன்றிகள் பல ஐயா!
வந்து விட்டேன் உங்கள் அழகிய பதிவைப் படித்து மகிழ்ந்தேன் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
பதிலளிநீக்குமார்கழிக்கோலம் நன்று
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஜி
திருமறைக்காட்டின் சிறப்பை அறிந்தேன். அதிவீரராம பாண்டியர் வாக்கு இரண்டு நாட்களாய் ஒன்றே இடம் பெற்றிருக்கிறதே..
பதிலளிநீக்குஇந்த புதிய ஆண்டு மகிழ்வோடு அமைய எனது வாழ்த்துக்களும்...
பதிலளிநீக்கு