சனி, டிசம்பர் 30, 2017

மார்கழிக் கோலம் 15

தமிழமுதம்

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்..(084)
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 15




எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ 
சில்லென்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன்வாய் அறிதும் 
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை 
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க 
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்... 
*
தித்திக்கும் திருப்பாசுரம்

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்
குணசீலம்
தாழ்ந்து வரங்கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் - தாழ்ந்த
விளங்கனிக்குக் கன்றெறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக் கீழ்க்கொண்ட அவன்..(2204)
-: பூதத்தாழ்வார் :- 

ஓம் ஹரி ஓம் 
***
நல்லதோர் வீணை


சிவதரிசனம்

திருத்தலம்
ஸ்ரீவாஞ்சியம்


இறைவன் - ஸ்ரீ வாஞ்சிநாதர்  
அம்பிகை - ஸ்ரீ மங்கலநாயகி 

தல விருட்சம் - சந்தனம்
தீர்த்தம் - குப்தகங்கை

யம பயம் நீங்கும் திருத்தலம்..


ஹரி பரந்தாமன் 
தன்னுடன் ஊடல் கொண்டு பிரிந்த 
திருமகளை ஆற்றுப்படுத்தி
  மீண்டும் அவளது திருக்கரம் பற்றிய திருத்தலம்..


இயமன் தனது மனக்கவலை நீங்கப்பெற்று
அம்மையப்பனைத் தனது தோள்களில் சுமந்த
திருத்தலம்..

நன்னிலத்துக்கு அருகில் உள்ள தலம்..
திருஆரூரில் இருந்து நகரப் பேருந்துகள் 
இயக்கப்படுகின்றன..
*

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு.

திருமூலத்தானம் - ஸ்ரீவாஞ்சியம்
வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
பொன்னி யன்ற சடை யிற்பொலி வித்தபு ராணனார்
தென்ன வென்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம்
என்னை ஆளுடை யானிடமாக உகந்ததே..(2/7)
*

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 13 -14


பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவு வார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
பொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பப்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்..

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்
சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதித் திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதித் திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்... 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

8 கருத்துகள்:

  1. காலை வணக்கம்.

    இனிய பாசுரத்தோடு தெய்வ தரிசனம். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. இன்றைய பாசுரம் கேட்கும்போதெல்லாம் எனக்கு இளையராஜாவின் இசையில் சுசீலாம்மா குரலில் ஏலே இளங்கிளியே பாடல் நினைவுக்கு வரும்.

    ஸ்ரீவாஞ்சியத்தில் எங்களுக்கு சேவைக்கட்டளை முன்பு இருந்தது. தொடராமல் விடுபட்டுப் போய்விட்டது.

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஜி
    இன்றைய தரிசனம் நலமுடன்...

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ஐயா!

    பாசுரம் தந்தது பக்திப் பரவசமே!
    தேசுலாவியது திவ்ய தரிசனமே!

    உளம் நிறைந்தது எனக்கும்!

    நன்றிகளுடன் நல் வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  5. பாடல்களைக் கண்டேன். வழக்கம்போல அருமை. குணசீலம், திருவாஞ்சியம் சென்றுள்ளேன் ஐயா. இன்று உங்கள் தளம் மூலமாக மறுபடியும் சென்றேன்.

    பதிலளிநீக்கு
  6. நேற்று எங்கள் வீட்டில் நீங்கள் கொடுத்திருக்கும் குறளமுதம்!! ஆம் விருந்து..இன்முகம் கொண்ட விருந்து!!

    யமபயம் நீங்கம் தல தரிசனம் இங்கு கண்டோம். திருவாரூர் கண்டதுண்டு. அருகில் இருக்கும் இத்தலம் சென்றதில்லை...ஸ்ரீவாஞ்சியம் இறை தரிசனமனும் கிடைக்கப்பெற்றோம். அழகு தரிசனம்!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. பைங்குவளைக் கார்மலரால் - தாமரை, பறவையினங்கள் சூழ்ந்த பொய்கையை, எம்பெருமான்/எம்பெருமாட்டிக்கு ஒப்புவமையாகப் பாடியுள்ளது சிறப்பு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..