வியாழன், டிசம்பர் 28, 2017

மார்கழிக் கோலம் 13

தமிழமுதம்

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல..(037) 
***

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 13


புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் 
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் 
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய் 
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்நாளால் 
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்..
*

தித்திக்கும் திருப்பாசுரம்

ஸ்ரீ சௌரிராஜன் - திருக்கண்ணபுரம்
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்..(2182)
-: பூதத்தாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***

நல்லதோர் வீணை


சிவ தரிசனம்

திருத்தலம்
திருமயிலாடுதுறை


இறைவன் - ஸ்ரீ மயூரநாதர்
அம்பிகை - ஸ்ரீ அபயாம்பிகை

தல விருட்சம் - மா, வன்னி
தீர்த்தம் - காவிரி

ஸ்ரீ அபயாம்பிகை
அம்பிகை மயிலாக உருமாறி
ஐயனைப் பூஜித்த திருத்தலம்..

மயூர தாண்டவம் நிகழ்த்தப் பெற்ற
திருத்தலம்..
*
ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்


நிலைமை சொல்லு நெஞ்சே தவமென் செய்தாய்
கலைகள் ஆயவல்லான் கயிலாய நன்
மலையன் மாமயிலாடு துறையன் நம்
தலையின் மேலும் மனத்துளுந் தங்கவே..(5/39) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 09 - 10


முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் போத்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்தோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம்ஏலோர் எம்பாவாய்...

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டர்உளன்
கோதில் குலத்தான் றன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலார்
ஏதவரைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்...

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

7 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    ஸ்ரீஆண்டாள் திருப்பாவை நன்று.

    பதிலளிநீக்கு
  2. புள்ளின் வாய் பிளந்தானை கண்டோம்....

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு பாசுரம். கூடவே இறை தரிசனம். நன்றி.

    பதிலளிநீக்கு
  4. தமிழமுதம், அருளமுதம், பின்னொரு பாசுரம்.. ..

    அருமை. ஓம் நமச்சிவாய.

    பதிலளிநீக்கு
  5. பாடல்களை ரசித்தேன். மயிலாடுதுறை சென்றுள்ளேன், திருக்கண்ணபுரம் செல்லும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானையும், மயூரத் தாண்டவம் நிகழ்த்தப்பெற்றத் திருத்தல தரிசனமும் கண்டோம்..

    கீதா

    பதிலளிநீக்கு
  7. எது அவன் ஊர், எது அவன் பெயர், யார் உற்றார், யார் அயலார் - என்ன விளக்கம் என்ன விளக்கம்.

    முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழம் பொருளே, பின்னைப் புதுமைக்கும் போத்தும் அப் பெற்றியனே - எப்படிப் பாடியுள்ளார்கள். அருமை.

    திருப்பாவையும், தரிசனமும் அருமை

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..