தமிழமுதம்
அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு..(032)
***
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 08
தித்திக்கும் திருப்பாசுரம்
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப்பறை கொண்டு
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவா என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!..
தித்திக்கும் திருப்பாசுரம்
ஸ்ரீராமன் - வடுவூர் |
வினையால் அடர்ப்படார் வெந்நரகில் சேரார்
தினையேனும் தீக்கதிக்கட் செல்லார் - நினைதற்
கரியானைச் சேயானை ஆயிரம்பேர்ச் செங்கட்
கரியானைக் கைதொழுதக் கால்..(2146)
-: பொய்கையாழ்வார் :-
ஓம் ஹரி ஓம்
சிவ தரிசனம்
திருத்தலம்
திருஆனைக்கா
திருஆனைக்கா
இறைவன் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்
அம்பிகை - அருள்தரு அகிலாண்டேஸ்வரி
தீர்த்தம் - காவிரி
***
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் 08
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
இன்றைய தரிசனம் நன்று வாழ்க நலம்.
பதிலளிநீக்குவணக்கம் ஐயா!
பதிலளிநீக்குஆண்டாள் திருப்பாவை அம்மையப்பன் காட்சிகள்
தூண்டியதென் உள்ளத்தைத் தொட்டு!
மனத்தை ஒன்றவைக்கும் அரிய காட்சிகள்!
நல்ல தரிசனம்!
நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!
தரிசனம் பெற்றேன்.
பதிலளிநீக்குஆஹா இன்று ஆனைக்கா தரிசனம். மிக்க நன்றி
பதிலளிநீக்குவடுவூர் என் மாமியார் ஊர் என்பதால் வடுவூர் ராமரை தரிசித்ததுண்டு அது போன்று திருஆனைக்காவும் தரிசனம் செய்ததுண்டு. சிவகாசிப்பக்கம் சென்றதில்லை...
பதிலளிநீக்கு8 ஆம் நாள் தரிசனமும் நன்று
கீதா