சனி, நவம்பர் 25, 2017

கனலில் கலந்த கனல் 2

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை 
தெருவினிலே விழலாமா..
தெருவினிலே விழுந்தாலும் 
வேறோர் கை தொடலாமா?..
*** 
 1303 - ல் மகாராணி ஸ்ரீமதி பத்மினி கனலுடன் கலந்தாள்..

இன்றளவும் ராஜபுதனத்து மக்கள் ஸ்ரீமதி பத்மினியைக் கற்புக்கரசியாக இதயத்தில் கொண்டு அவரைப் பற்றி எழுதியும் பாடியும் உருகுகின்றனர்..

ஆயினும் -
மகாராணி ஸ்ரீமதி பத்மினியின் தீக்குளிப்பு நடந்த
ஏறத்தாழ இருநூற்று நாற்பது ஆண்டுகளுக்குப் பின்

மாலிக் முகம்மது ஜெயாசி (Malik Muhammad Jayasi) என்னும் சூபி கவிஞர்
ராணி பத்மினியைப் பற்றி மக்கள் பாடும் பாடல்களைக் கேட்கிறார்..

அவருடைய மனம் நெகிழ்கின்றது..

மகாராணி பத்மினியின் வரலாற்றை -
பத்மாவத் - எனும் பெயரில் நெடுங்கவிதையாக -
அவாதி (Awadhi) எனும் மொழியில் 1540 ல் வரைந்தளிக்கின்றார்...

பத்மாவதி எனப்படுகின்ற மகாராணி ஸ்ரீமதி பத்மினியைப் பற்றிய
முழு கவிதைத் தொகுப்பு இது ஒன்று தான் என்றும் சொல்லப்படுகின்றது..


சித்தோர்க் கோட்டையில் நிகழ்ந்த துயரங்களுக்குப் பிறகு
இயல்பு நிலைக்குத் திரும்பிய நாட்டு மக்கள்
கோட்டையின் மேற்குக் கரையில் கோமுகி குளக்கரையில்
மகாராணி ஸ்ரீமதி பத்மினியின் நினைவாக
கோயில் ஒன்றினை அமைத்து போற்றி வழிபட்டனர்..

இன்றும் அந்தக் கோயில் அங்கே உள்ளது..

யுனெஸ்கோ உலக பாரம்பர்ய சின்னங்களுள் ஒன்றாக
சித்தூர்க் கோட்டையை  அறிவித்துள்ளது

கோட்டையிலுள்ள விஜய ஸ்தம்பம்

சித்தோர்கர் கோட்டையும் கோமுகி குளமும்

ராணி பத்மினியின் மாளிகை (புனரமைக்கப்பட்டது)
ராணி ஸ்ரீமதி பத்மினி தீக்குளித்த குண்டம்
அரண்மனையிலிருந்து செல்லும் ரகசிய வழி
1857 ல் வரையப்பட்ட ஓவியம்
சித்தூர் கோட்டையில் அக்னியில் கலந்த -
கற்புக்கரசிகளைக் கொண்டாடும் விதமாக சொல்லப்படும் தகவல் இது -

ஸ்வாமி விவேகானந்தர் காலத்தில் -
ஒரு கடிதத்தை எழுதி அதை மூடியபின்
அதன் மீது 74½ என்று எழுதி விட்டால்
அதனை அனுமதியின்றித் திறப்பவன்
74500 - பெண்களைக் கொன்ற பாவத்திற்கு ஆளாகின்றான்!..
- என்ற நடைமுறை இருந்ததாக விக்கிபீடியா சொல்கின்றது...

வழிபடும் தெய்வமாக ஸ்ரீமதி ராணி பத்மினி
அந்த அளவிற்கு சித்தூர் மகாராணி ஸ்ரீமதி பத்மினிக்கும்
அவருடன் உயிர்த் தியாகம் செய்த பெண்களுக்கும்
அன்றைய சமுதாயம் சிறப்பிடம் அளித்திருக்கின்றது.!..

- என்றால் வேறென்ன சொல்வது!..

சித்தூர் கோட்டையில் நடந்த இந்த தீக்குளிப்பு ஒன்று மட்டும் தானா!...

சரித்திரம் வேறு சில நிகழ்வுகளையும் காட்டுகின்றது..

அவற்றுள் ஒன்று சித்தூர் நிகழ்வுக்கு முந்தையது..

அதுவே ஆதாரங்களின் அடிப்படையில் முதலாவது என்று கருதப்படுகின்றது..

தில்லையையும் ஆஜ்மீரையும் தலைநகராகக் கொண்டு
ஆட்சி செய்தவன் - ப்ருத்விராஜ் சௌகான்!..


இவனுடைய காதலி பேரழகி சம்யுக்தா!..
இவள் கன்னோசி மன்னன் ஜயச்சந்திரனின் மகள்...

ஜயச்சந்திரனுக்கு பிருத்வி ராஜனைப் பிடிக்கவில்லை..
எனவே மகளின் காதலை நிராகரித்து சுயம்வரம் நிச்சயித்தான்..

சுயம்வர மண்டபத்தின் வாசலில் பிருத்வி ராஜனைப் போலொரு
பதுமையை காவலுக்கு வைத்து அவனை அவமதித்தான்..

ஆனால் -
ஜயச்சந்திரனின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி விட்டு
தானே பதுமையாக நின்றான் - பிருத்வி ராஜன்..

இந்தச் செய்தி ரகசியமாக சம்யுக்தாவிற்குச் சென்றது...

காதல் சிறகினைக் காற்றினில் விரித்தாள்..


காவலாக நின்ற காதலனின் கழுத்தில் மாலையினை அணிவித்தாள்..

காதல் கிளிகள் குதிரையில் ஏறிப் பறந்தன..

அதிர்ந்து நின்ற ஜயச்சந்திரன் -
மகளின் மாங்கல்யத்தைப் பற்றிய கவலையில்லாமல் -
அன்றே நாள் குறித்தான் மருமகனின் முடிவுக்கு...

அதனால் தான் மாற்றான் முன் மண்டியிட்டு உளவு கூறினான்..
அன்பு மகளின் மங்கலத்தை அரக்கனாகி அழித்தான்..

1191 - ல் பிருத்வி ராஜனுடன் நடத்திய போரில் புறமுதுகிட்டு ஓடினான் -
கோரி முகம்மது.. 

இந்துஸ்தானத்தைக் கைப்பற்றும் வெறி அவனுள் திரும்பவும் மூண்டெழுந்தது..

1193 - 1194 - ல்
ஒரு லட்சத்து இருபதாயிரம் ஆட்களைக் கொண்ட பெரும் படையுடன் கோரி முகம்மது வந்தபோது அவனிடம் மருமகனைக் காட்டிக் கொடுத்தான் -
கன்னோசி மன்னன் ஜயச்சந்திரன்..

ராஜபுதனத்தின் தலைவர்கள்
நூற்றைம்பது பேர் பிருத்வி ராஜனுக்குத் தோள் கொடுத்தபோதும்
ஒதுங்கி நின்று உளவு சொல்லிய ஜயச்சந்திரனால் வீழ்ந்தான் பிருதிவி ராஜன்...

பிருத்வி ராஜனைச் சிறைப் பிடித்த கோரி முகம்மது
பிருத்வி ராஜனின் கண்களைக் குருடாக்கியதுடன்
சித்ரவதைக்கு உள்ளாக்கிக் கொன்றிருக்கின்றான்...

இதனையறிந்த மகாராணி ஸ்ரீமதி சம்யுக்தா 
அரண்மனைப் பெண்களுடன் அக்னியில் கலந்தாள்..

இச்சம்பவம் 1194 ல் நடந்துள்ளது..

மருமகன் என்றும் பாராமல்
காட்டிக் கொடுத்த ஜயச்சந்திரன் மட்டும் நிம்மதியாக வாழ்ந்தானா?..

அவனும் அந்த கோரி முகம்மதுவின் கையாலேயே அழிந்தான்.. 

இதற்குப் பிறகு 1303 ல் மகாராணி ஸ்ரீமதி பத்மினி..

சித்தூர் நிகழ்வுக்குப் பின் - அடுத்த சில மாதங்களில்
ஜெய்சால்மேர் கோட்டையை முற்றுகையிட்டிருக்கின்றான் - அலாவுதீன் கில்ஜி..

ஏழு மாத முற்றுகைக்குப் பின் ஜெய்சால்மேர் கோட்டை வீழ்ந்த நிலையில் அங்கே அக்னியில் கலந்தவர்களளின் எண்ணிக்கை 24,000..

இதன் பிறகு - 1528 மார்ச் மாதம் எட்டாம் நாள்
சித்தூர் கோட்டையில் மன்னன் ராணா சங்காவின் வீழ்ச்சிக்குப் பின் மகாராணி ஸ்ரீமதி கர்ணாவதி  செந்தழலுடன் கலந்தாள்..

இதற்குக் காரணமாக இருந்தவன் குஜராத் பகதூர் ஷா..

சித்தூர் கோட்டையில் நிகழ்ந்த மூன்றாவது நிகழ்வு இது..

செப்டம்பர் 1597 ல் முற்றுகையிடப்பட்டது..
பல மாதங்களாகியும் முடியவில்லை.. சித்தூர் அரசு வீழவில்லை..

இறுதியாக 1568 பிப்ரவரி 22 அன்று பீரங்கிகளால் தாக்கப்பட்டது...

உடைபட்ட கோட்டைக் கதவுகளின் வழியாக உள்ளே சென்று பார்க்கையில்
வீரமகளிர் வெந்தணலுக்குள் வேள்விப் பொருளாகி இருந்தனர்...

இதற்குக் காரணகர்த்தா -
இந்துக்களுடன் மண உறவு கொண்டிருந்த ஜலால் உத் தீன் முகம்மத் அக்பர்..


அந்நியனின் கைகளுக்கு அக்னியே மேல்!.. என்று
தம்மைத் தாமே தீக்குள் இட்டுக் கொண்டதீபங்கள்..

தீக்குள் வீழ்ந்த தாமரைகளைப் பற்றிய
வரலாறு இவ்வளவு தான் என்றில்லை..

கணக்குக்கு வந்தவை இவைதான்..
கைக்கு வராதவை எத்தனை எத்தனையோ!..


ஒரு கொடியில் ஒருமுறைதான்
மலரும் மலரல்லவா...
ஒரு மனதில் ஒருமுறைதான்
வளரும் உறவல்லவா!..

பொற்புடைய மங்கையரின் கற்புநிறை மனதை
காவியமாக்கிய கவியரசரின் காவிய வரிகள் அவை..

அன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே
மாற்றானின் நிழல் கூட - தம் மீது படுவதைத்
தாங்கிக் கொள்ளமுடிவதில்லை பாரதத்தின் மங்கையரால்!..

மங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே..
மணமகளைத் திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே!..
என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே..
இறுதிவரைத் துணையிருப்பேன் என்றதும் நீதானே!..

உத்தமப் பெண்களின் நாடி நரம்புகளில் எல்லாம்
ரத்தத்துடன் கலந்து ஓடுவது இந்த எண்ணம் தான்!..

எதை வேண்டுமாயினும் முற்றுகையிடலாம்.. முறியடிக்கலாம்..
இந்த எண்ணத்தை மட்டும் முறியடித்தார் இல்லை!..

நீரில் பூத்த தாமரையாய்ப் பெண்கள்..
எனினும் - கற்பெனும் திண்மையில்
செந்தீக்குள் செந்தாமரையாய்!..
***

இன்றைய பதிவிலும் இணையத்தில் திரட்டப்பட்ட புள்ளி விவரங்கள்..

சில தினங்களுக்கு முன் அன்பின் GMB ஐயா அவர்களுடைய 
கலாச்சாரமா சரித்திரமா - எனும் பதிவின் விளைவு தான் -

கனலில் கலந்த கனல் - எனும் பதிவுகள்...

அங்கே கருத்துரையில் மதிப்புக்குரிய கீதா சாம்பசிவம் அவர்கள்
சித்தூர் கோட்டையைக் கண்டு வந்த தகவல்களைப் பதிவு செய்திருந்தார்கள்..

எனக்கும் அங்கேயெல்லாம் சென்று காணவேண்டும் என்ற ஆவல் உண்டு..

முந்தைய பதிவில்
மதிப்புக்குரிய கோமதி அரசு அவர்கள் ராணி பத்மினியின் வரலாற்றைப் பள்ளியில் படித்த நினைவுகளைப் பதிவு செய்திருந்தார்கள்..

நானும் அப்படியே..
எங்கள் வரலாற்று ஆசிரியர்கள் இந்த நிகழ்வுகளைக் கண் கலங்க நடத்திய நாட்கள் எல்லாம் இன்னும் பசுமையாக உள்ளன..

நூலகத்தில் இந்த வரலாற்றை வாசித்த நாட்களும் நெஞ்சில் நிழலாடுகின்றன..

அன்றைக்கு இந்த அளவிற்குத் துல்லியமாகக் கிடைக்கவில்லையே - தவிர,
என்னை வழிநடத்தியவை இந்த வரலாறுகளே!..

பெண்கள் நமது கண்கள்.. பேணிக் காத்தல் வேண்டும்!.. - என்னும் உணர்வினை ஊட்டி வளர்த்தவை இத்தகைய வரலாறுகள் எனும்போது
பெருமிதமாகவும் இருக்கின்றது..

ஓம் சக்தி ஓம்..
*** 

14 கருத்துகள்:

  1. ஆரம்பத்திலேயே அழகான சுசீலாம்மாவின் பாடலோடு (கவியரசரின் பாடல் என்றும் சொல்லலாம்) தொடங்கி இருக்கிறீர்கள். பதிவின் பொருளோடு அழகாயிப் பொருந்துகிறது பாடல்.

    //அந்நியனின் கைகளுக்கு அக்னியே மேல் // - அழகான வரி. இந்த வரி மட்டுமல்ல பெரும்பாலான வரிகள் உணர்ச்சிக்குவியலுடன் அழகாய் வந்து விழுந்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஜி
    உணர்ச்சிப்பூர்வயான வரலாறு படிக்கும்போது சிலிர்க்கிறது.

    பதிலளிநீக்கு
  3. அன்பின் துரைசெல்வராஜ் அழகு தமிழில் உணர்ச்சி வசப்பட்டு ஒரு பதிவு எழுதி இருக்கிறார் அதில் என்பதிவு சரித்திரமா கலாச்சாரம என்பதற்குப் பதிலாக எழுதி இருப்பதாகக் கூறி இருக்கிறார் எனக்கு ஒரு சந்தேகம் அடிக்கடி எழுவதுண்டு பலரும் பதிவைப் படித்து உள்வாங்கிக் கொள்ளாமல் உண்ர்ச்சி வசப்படுகிறார்கள் என்றே தோன்று கிறது நான்சரித்திர ஆராய்ச்சி யாளன் அல்ல நானும் அங்கும் இங்கும் பார்த்து படித்து தெரிந்ததையே எழுதுகிறேன் ஆனால் உணர்ச்சி வசப்படுவதில்லை சில செய்திகளை நேர் செய்ய வேண்டி இருக்கிறது என்பதிவின் தொடக்கத்தில் விநாயகர் முருகன் பற்றிய தொடர்களையும் குறிப்பிட்டுள்ளேன் அவை பெரும்பாலும் கற்பனைகளே என்றும் சரித்திர அடிப்படை இல்லாதவை என்றும் கூறி அது போலவே இந்த பத்மாவதி கதையும் இருக்கலாம் என்றும் எழுதி இருக்கிறேன் நான் என்ன அந்தக் காலத்தில் இருந்தவனா நான் எழுதி இருப்பதற்கு ஆதாரமாக விக்கிபீடியாவைக் குறிப்பிட்டு இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. Several subsequent adaptions of the legend characterised her as a Hindu Rajput queen, who defended her honour against a Musliminvader. Over the years, she came to be seen as a historical figure, and appeared in several novels, plays, television serials and movies. However, while Alauddin Khalji's siege of Chittor in 1303 CE is a historical event, the legend of Padmini has little historical evidence and most modern historians have rejected its authenticity.
    Historicity

    This building in Chittorgarh is purported to be Rani Padmini's palace, but it is a relatively modern structure.[22]
    Alauddin Khalji's siege of Chittor in 1303 CE is a historical event. Although the legend of Padmini is the best known story about the siege, it has little historical basis.[23] Most modern historians have rejected the authenticity of the legend.[24]

    பதிலளிநீக்கு
  5. ஒரு விஷயத்தை அறிவு பூர்வமாக அணுகுவது வெறு உணர்வு பூர்வமாக்ச அணுகுவது வேறு ராஜஸ்தானில் உணர்வு பூர்வமாக அணுகி வெட்டு குத்து என்று மிரட்டுகிறார்கள் அது எனக்கு உடன்பாடில்லை இறைக்கதைகளையே கற்பனை என்று நினைக்கும் நான் அதனால் எழும் சில பிரச்சனைகளை ஒட்டியே எழுதி வரும் எனக்கு இதுவும் கற்பனையினடிப்படையில் உணர்ச்சி வசப்படுவது போல் தோன்றியதாலும் அதற்கு காவி அரசுகள் தூபம்போடுவது போல் தோன்றியதாலும் அந்தப் பதிவை நான் எழுதினேன் எனக்கும் நம் மகளிர் மீது மரியாதையும் மதிப்பும் உண்டு என்னால் இப்பதிவு எழுதப்பட்டது என்று கூறி இருப்பதால் இத்தனை விளக்கங்கள் நானென்றைக்கும் எனக்குச் சரி என்றுபட்டதைச் சரி என்று சொல்லத்தயங்கியதில்லை நான் எழுதியதை சரியாக உள்வாங்கிக் கொண்டு என் பதிவுகளைப் படிக்கவேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  6. அன்பின் ஐயா....
    மிக அருமையானதொரு... விவரங்கள் நிறைந்த பகிர்வு.
    வரலாறுகளைப் படிக்கும் போது மெய்சிலிர்க்கிறது...
    அருமை...

    பதிலளிநீக்கு
  7. பள்ளியில், வகுப்பில் வரலாற்று ஆசிரியர் ஒரு பாடம் நடத்துவதைப் போல இருந்தது உங்கள் பதிவினைப் படிக்கும்போது. அந்த இடத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டீர்கள். நாம் இழந்தது எவ்வளவோ. இருப்பினும் நம் வரலாற்றுச்சுவடுகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டிய கடமையினை நீங்கள் அருமையாகச் செய்துவருகின்றீர்கள். உங்களின் இந்தப் பதிவு பல வரலாற்று நிகழ்வுகளை மிகவும் சிறப்பாக எடுத்துரைக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. மஞ்சளில் இருந்து பிங்கி எழுத்துவரை அத்தனை பாடல் வரிகளும் ஜீப்பர்ர்.. எத்தனை தரம் கேட்டாலும் அலுக்காது.

    சித்தூர் கோட்டை கேள்விப்பட்டதாககூடத் தெரியவில்லை.. என்ன ஒரு அழகிய கோட்டை, குகை பார்க்கவே .. ஒரு தடவை நேரில் சென்று பார்க்கோணும் போல இருக்கு.

    பதிலளிநீக்கு
  9. நல்ல பகிர்வு.

    பதிவில் குறிப்பிட்ட சில அரண்மனைகளை நேரில் கண்டதுண்டு. தீக்குளித்த பெண்கள் என்ணிலடங்காதவர்கள்.... சில வரலாற்று நிகழ்வுகளை ஒலி-ஒளி காட்சியாக அரண்மனைகளில் நடத்துவார்கள். நாமே அந்த இடத்தில் இருந்த உணர்வு வரும்.

    பதிலளிநீக்கு
  10. அருமையான பகிர்வு...முதல் பாடல் வரிகள் நல்ல பொருத்தம் பதிவிற்கு. கோட்டை படங்கள் எல்லாம் என்ன அழகு! வாய்ப்புக் கிடைத்தால் பார்க்க வேம்ண்டும்..

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  11. கனலில் கலந்த கனல் - அருமை. எதற்குமே 'முழுமையான நிரூபணம்' என்பது கிடையாது. ஆனால் ஓரளவு நாம், நிகழ்ந்த நிகழ்வுகளைக் கொண்டு, எப்படி நடந்திருக்கும் என்று அனுமானிக்க முடியும். ராணி பத்மினி மட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான அந்தப்புர மகளிர், போர்களினால் இறந்துபட்டனர். ஏன்... திருவரங்கத்திலேயே 12,000 பேர், கோவிலைக் காக்கும் யுத்தத்தில் இறந்தனரே.

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  12. மிக அரிய பதிவு. எல்லாவற்றுக்கும் அந்த அந்தக் கோட்டைகளில் ஓலைச்சுவடிகளிலும், செப்புப் பட்டயங்களிலும் பொறிக்கப்பட்ட ஆதாரங்களைக் காணலாம். குதுப்மினார் அருகே உள்ள இரும்புத் தூண் சந்திரகுப்த விக்கிரமாதித்தனால் வைக்கப்பட்டது! அதிலே அந்த விஷயம் பொறிக்கப்பட்டும் இருக்கிறது. ஆனாலும் நம் மக்கள் குதுப்மினாரைக் கண்டு தான் வாய் பிளக்கிறோம். நம் அரசும் இதற்கு எவ்விதமான மதிப்பும் கொடுக்காமல் விட்டு வைத்துள்ளது!

    பதிலளிநீக்கு
  13. // அந்தத் தூண் விக்கிரமாதித்தன் நாட்டிய வெற்றித் தூண் என்றும் பாரதத்துக்கு வெளியே வாலிகர்கள் என்பவர்களை வென்று திரும்பியதற்காக விஷ்ணுபாதம் என்னும் குன்றில் இந்த வெற்றிச் சின்னம் அமைக்கப்பட்டது எனவும், பாரதத்துக்கு வெளியே சென்று வெற்றிக்கொடி நாட்டித் திரும்பியதால் அன்று முதல் விக்கிரமாதித்த சகாப்தம் ஆரம்பித்தது எனவும், அதன் பிறகு அவன் பேரனான சாலிவாஹனனும் அதே போல் வெளிநாடு சென்று வெற்றிக்கொடி நாட்டித் திரும்பியதால் அவன் பெயரில் சாலிவாஹன சகாப்தம் ஆரம்பிக்கப்பட்டது என்பதையும் அந்தத் தூணிலேயே குறிப்பிட்டிருந்தாலும் பின்னாட்களில் ஒரு புத்தகத்திலும் படித்துத் தெரிந்து கொண்டேன். இந்த சாலிவாஹன சகாப்தம் ஆரம்பித்து ஏறக்குறைய 1950 ஆண்டுகள் இருக்கலாம். அதன் பின்னர் எந்த மன்னனும் இப்படி அந்நிய நாட்டை வென்றதில்லை. ஆகையால் அதன் பின்னர் எந்த சகாப்தங்களும் ஏற்படவும் இல்லை. // ஆதாரங்களுடன் கூடிய இதையே நாம் புறக்கணிக்கிறோமே! ராணி பதுமனி(பத்மாவதி) பற்றிச் சொல்வதையா நம்புவோம்! போகட்டும்.

    வட மாநிலங்களில் இப்போதும், "ஜெயச்சந்திரன்" என்னும் பெயரை யாருக்கும் வைக்க மாட்டார்கள்! மற்றபடி நீங்கள் சொல்லி இருக்கும் விஷயங்களை எல்லாம் ராஜஸ்தானில் இருக்கும்போது ஆதாரங்களோடு பார்த்து ரசித்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  14. இந்தப் பதிவில் என் பெயரையும் குறிப்பிட்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..