சனி, அக்டோபர் 07, 2017

சொல்மாலை 3

இன்று புரட்டாசி மாதத்தின் 
மூன்றாம் சனிக்கிழமை..

இன்றைய பதிவில்
திருமங்கையாழ்வார் அருளிச் செய்த
திருப்பாசுரங்கள் திகழ்கின்றன..

ஸ்ரீ நரசிங்கப்பெருமாள் - தஞ்சை மாமணிக்கோயில்
ம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கரசு என்னுடை வாழ்நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர் செகுத்த எம்அண்ணல்
வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்..(0953)

குலந்தரும் செல்பம் தந்திடும் அடியார் படுதுயராயின வெல்லாம்
நிலந்தரஞ் செய்யும் நீள்விசும்பருளும் அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றுந் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலந்தருஞ் சொல்லை நான்கண்டு கொண்டேன் நாராயணா எனும் நாமம்..(0956) 

ஸ்ரீ வீரராகவப்பெருமாள் - திருவள்ளூர்
தையலாள் மேல் காதல் செய்தானவன் வாளரக்கன்
பொய்யிலாத பொன்முடிகள் ஒன்பதோடு ஒன்றும் அன்று
செய்த வெம்போர் தன்னில் அங்கோர் வெஞ்சரத்தால் உருள
எய்த எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே..(1059)

பந்தணைந்த மெல்விரலாள் பாவைதன் காரணத்தால்
வெந்திறல் ஏறேழும் வென்றவேந்தன் விரிபுகழ்சேர்
நந்தன் மைந்தனாக ஆகும் நம்பி நம்பெருமான்
எந்தை தந்தை தம்பெருமான் எவ்வுள் கிடந்தானே..(1061)

பந்திருக்கும் மெல்விரலாள் பாவை பனிமலராள்
வந்திருக்கும் மார்வன் நீலமேனி மணிவண்ணன்
அந்தரத்தில் வாழும் வானோர் நாயகனாய் அமர்ந்த
இந்திரற்கும் தம்பெருமான் எவ்வுள் கிடந்தானே..(1066)

கருடசேவை - புள்ளம்பூதங்குடி
ஸ்ரீ வல்வில் ராமன் - புள்ளம்பூதங்குடி
மையார் தடங்கண் கருங்கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்ததயிர்
நெய்யார் பாலோடு அமுது செய்த நேமியங்கை மாயனிடம்
செய்யார் ஆரல் இரைகருதிச் செங்கால் நாரை சென்றணையும்
பொய்யா நாவில் மறையாளர் புள்ளம் பூதங்குடி தானே..(1352)

வெற்பால் மாரி பழுதாக்கி விறல் வாளரக்கர் தலைவன்றன்
வற்பார் திரள் தோள் ஐந்நான்கும் துணித்த வல்வில் இராமனிடம்
கற்பார் புரிசை செய்குன்றம் கவினார் கூடம் மாளிகைகள்
பொற்பார் மாடம் எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே..(1351)

திரு அரங்கநாயகியுடன் நம்பெருமாள்
கைம்மான மழகளிற்றைக் கடல்கிடந்த கருமணியை
மைம்மான மரகத்தை மறையுரைத்த திருமாலை
எம்மானை எனக்கென்றும் இனியானைப் பனிகாத்த
அம்மானை யான்கண்ட தணிநீர்த் தென்னரங்கத்தே..(1398)

ஏனாகி உலகிடந்து அன்றிரு நிலனும் பெருவிசும்பும்
தானாய பெருமானைத் தன்னடியார் மனத்தென்றும்
தேனாகி அமுதாகித் திகழ்ந்தானை மகிழ்ந்தொருகால்
ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே..(1400)



பொய்வண்ணம் மனத்தகற்றிப் புலனைந்தும் செலவைத்து
மெய்வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை
மைவண்ணம் கருமுகில்போல் திகழ்வண்ண மரகதத்தின்
அவ்வண்ண வண்ணனையான் கண்டதென் னரங்கத்தே..(1406) 
*** 

நாடு நலம் பெறுதற்கு 
நாராயணன் திருவடிகள் காப்பு

ஓம் ஹரி ஓம் 
* * *

6 கருத்துகள்:

  1. படங்களுடன் திருப்பாசுரங்கள் அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஜி
    திருப்பாசுரங்கள் அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  3. நீண்ட நாட்களாக நான் வலைப்பக்கம் வரவில்லை. புரட்டாசி சனிகிழமையான் இன்று பெருமாள் தரிசனத்தோடு பின்னூட்டங்களைத் தொடங்கியிருக்கிறேன். எப்படியும் தங்கள் தளத்தில் இன்று பெருமாள்தான் இருப்பார் என்று தெரியும். வந்தேன். இருக்கிறார்! கண்டு மகிழ்ந்தேன். ஆழ்வார் பாசுரங்களையும் படித்து மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள்!

    - இராய செல்லப்பா சென்னையில் இருந்து.

    பதிலளிநீக்கு
  4. குலந்தரும் செல்வம் தந்திடும் பாசுரம் தமிழ் பாடத்திட்டத்தில் வந்திருந்தது. அப்புறம் நாலாயிரத் திவ்யப்பிரபந்தத்தில் முதல் ஆயிரம் கற்றுக் கொண்ட போதும் கற்றுக் கொண்டேன் திருமங்கையாழ்வார் பாசுரங்களை...

    இங்கு மீண்டும் வாசிக்கக் கிடைத்தது. மிக்க நன்றி சகோ

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இறை இலக்கியங்கள் பதிவுக்குத் துணை போகின்றன

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..