உடன்பட்டு இழிவுற்று
தலையில் மிதிபட்டு
வதைபட்டு உதைபட்டு
திரையில் பொய்ப்பட்டு
வயப்பட்டு விருப்புற்று
மனதில் மயக்குற்று
வீழ்ந்தானே தரையில்!..
தமிழன் பெருந்திரையில் உருக்கண்டு
வெறுந்தரையில் விருந்துண்டு தொலைந்தானே!..
பூம்பட்டுத் துகிலுடுத்து
புதுமஞ்சள் நெற்றியிலே
புதுமஞ்சள் நெற்றியிலே
செந்தூரத் துளியிட்டு
மைதீட்டி மலர்சூட்டி
நகைவிழியாள் காத்திருக்க
நரியலையும் நள்ளிருளில்
நரியலையும் நள்ளிருளில்
நுரைப்பதுமை தனைத்
தேடி வீழ்ந்தானே!..
தமிழன் தலைவாழை இலை மறந்து
சருகிலையில் விருந்துண்டு தொலைந்தானே!..
பொழுது அதுபோவதற்கு
என்று மனம் கொள்ளாது
அழுது அதுதுயரம் என்று
அடிமனதில் பெருஞ்சோகம்
தொழுது அந்த முகப்பூச்சில்
தன்பேச்சு தான் மறந்து
பழுது இருக்க வேர்
சிதைத்து வீழ்ந்தானே!..
தமிழன் தன்நிலையைத் தான் மறந்து
மாற்றானின் காலடியில் தொலைந்தானே!..
தாயவளை மறந்தான்
தந்தையினைத் துறந்தான்
கொண்டவளைப் பிரிந்தான்
கொடிபிடித்து அலைந்தான்
தலைவைத்த தன்மதியைத்
தான் தொலைத்து நின்றான்
தன்மானம் தனைக்
கெடுத்துக் கொண்டான்..
தமிழன் தான்கொண்ட பேர்அழித்து
பெருங்குழியில் தலைகீழாய் வீழ்ந்தானே!..
நீ வந்து நின்றாலே
வீடுயரும் என்கிறான்
நீ வந்து இருந்தாலே
நாடுயரும் என்கிறான்
எவன் வந்து ஆண்டாலும்
உழைக்கவேண்டுமே..
வியர்வையில் குளிக்க
வேண்டுமே...
கனவில் கண்ட சோறதுவும் பசியைத் தீர்க்குமா..
கண்ணிருக்க வழி தொலைத்தல் நியாயமாகுமா?..
தமிழன்தன் பெருமைதனை
உணர்தல் வேண்டாமா..
தாரணியில் தலைநிமிர்ந்து
வாழ்தல் வேண்டாமா..
கையிரண்டும் தோளிரண்டும்
விதியை மாற்றுமே..
வீரநடை வெற்றியாகிப்
புகழைக் கூட்டுமே..
தளர்விலாத வாழ்வில் இன்பத் தென்றல் வீசட்டும்..
உயர்க தமிழ் தமிழன் என்று உலகம் பேசட்டும்!..
* * *
அன்பின் கில்லர்ஜி
அவர்கள் தமது தளத்தில்
வழங்கிய பதிவினை
கீழுள்ள இணைப்பில் காணலாம்..
வழங்கிய பதிவினை
கீழுள்ள இணைப்பில் காணலாம்..
அந்தப் பதிவு தான்
இன்றைய பதிவுக்கு அடிப்படை..
இன்றைய பதிவுக்கு அடிப்படை..
அவர் தமக்கு நன்றி!..
வாழ்க நலம்..
***
ஒரு பதிவிலிருந்து கிடைக்கிறது மற்றொரு பதிவுக்கான கரு. கருவிலிருந்து வந்த விதை. கவிதை. அருமை ரசித்தேன் ஜி.
பதிலளிநீக்குஇணைத்திருக்கும் படம் என் பழைய டென்ட் கொட்டகை நினைவுகளைக் கிளறுகிறது. தஞ்சாவூர் ராஜேந்திரா தியேட்டர்!
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்.
நீக்குஇணைத்திருக்கும் படங்கள் இணையத்திலிருந்து பெற்றவை..
தங்கள் மீள்வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
தமிழனென்றுசொல்லடா தலை நிமிர்ந்துநில்லடா உங்கள் எழுத்து என்னைக் கவர்கிறது
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அன்பின் ஜி
பதிலளிநீக்குஅருமையான கவிதை உண்மைத் தமிழனுக்கு உரைக்கும் படியாய் சாட்டையடி வரிகள் நல்ல படங்களின் கோர்வை எனது பழைய பதிவை வைத்து எழுதிய கவிதை மழைக்கு வாழ்த்துகள்,
ஆனாலும் அந்தப் பதிவில் தங்களது கருத்துரை இல்லை இருப்பினும் அதைப் படித்து கவிதை எழுதியதற்கு நன்றி ஜி
அன்பின் ஜி..
நீக்குஅந்தப் பதிவிற்கு இதுவே கருத்துரை..
அப்போதே செய்திட எண்ணினேன்..
அடுத்தடுத்த வேலைகளால் தாமதமாகி விட்டது..
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
பழைய டென்ட் கொட்டகை படங்கள்
பதிலளிநீக்குஇளமைக்கால நினைவலைகளை கிளர்ந்தெழச் செய்கின்றன ஐயா
அன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
டெண்ட் கொட்டாய்ல நானும் படம் பார்த்திருக்கேன்...ம் அது ஒரு இனிய தருணம்...
பதிலளிநீக்குஅந்தாக்ஷரி மாதிரியான பதிவு செம
அன்புடையீர்..
நீக்குதாங்கள் சொல்வதைப் போல அவையெல்லாம் இனிய தருணங்களே..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
கடைசி பத்தியில் தரணியில் என்பதற்கு பதிலாக தாரணியில் என்றுள்ளது ஐயா. இதுபோன்ற கொட்டகைகளில் படம் பார்த்துள்ளேன். அந்நினைவு இப்போது எனக்கு வந்தது.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குகடைசிப் பத்தியில் தாரணி என்ற வார்த்தை பூமியைக் குறிப்பதாகும்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
கில்லர்ஜி அவர்களின் பதிவிலிருந்து விளைந்த தங்கள் கவிதை அருமையோ அருமை! நச்!!! ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு முத்து எனலாம்...சுடுகின்ற வரிகள்!!! ஆம் உண்மை இதுதானே!! விதையிலிருந்து வந்த கவிதை அருமை அருமை!!! தமிழும் விளையாடுகிறது ஐயா/சகோ! நாங்கள் மிகவும் ரசித்தோம்!!
பதிலளிநீக்குஅன்பின் துளசிதரன்...
நீக்குமனிதன் - இனியாவது இயற்கையை அழிக்காதிருக்கட்டும்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
கவிதை மிகவும் ரசிக்கும்படி அமைந்திருந்தது.
பதிலளிநீக்கு