வியாழன், மே 11, 2017

அன்பு மழையில் அழகர்

வாத்யாரே.. திருவிழா இன்னும் எத்தனை நாள் நடக்கும்!..

கிட்டத்தட்ட திருவிழா நிறைவுக்கு வந்து விட்டது..


 நேற்று (10/5) அதிகாலை 6.30 மணியளவில் வைகையில் இறங்கினார் அழகர்...

கோவிந்தா.. கோவிந்தா!.. - ன்னு ஜனங்க கொண்டாடி நின்னாங்க!..

வைகையில் இறங்கிய அழகர் பெருமானை - வண்டியூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு அழைத்தார்..

வையாழி நடந்தது...
எதிர் மாலை சாற்று முறையானது...

அதற்குப் பிறகு அழகர் உச்சிப் பொழுதில் ராமராயர் மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார்..


அங்கும் கோலாகலமாக தீர்த்த மாலை வைபவம் நடந்தது..

அதற்குப் பிறகு இரவு பதினொரு மணியளவில்
வண்டியூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில் எழுந்தருளினார்..

இன்று (11/5) காலை வண்டியூர் கோயிலிலிருந்து பகல் பதினொரு மணியளவில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்திற்கு எழுந்தருளினார்...

அங்கே கருட வாகனத்தில் ஆரோகணித்து
மண்டூக மகரிஷியின் சாபம் தீர்த்தருளினார்...

இன்றைக்கு பகல் மூன்று மணிக்கு மேல் அங்கப் பிரதட்சணம் நடைபெறுகின்றது...

அதற்குப் பிறகு இரவு பதினொரு மணியளவில் ராமராயர் மண்டபத்திற்கு எழுந்தருள்கின்றார்...

அங்கே நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் தசாவதாரத் திருக்காட்சிகள் நிகழ்கின்றன...







நாளைக்கு பன்னிரண்டாம் தேதி
விடியற்காலையில் மோகினி அலங்காரத்தில் திருக்காட்சி..

மதியத்திற்குப் பிறகு அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலமாக புறப்பாடாகி வைகை ஆற்றின் திருக்கண் மண்டபத்தில் விடியற்காலை எழுந்தருள்கிறார்..

அங்கேயிருந்து கோரிப்பாளையம் வழியா தல்லாகுளம் கருப்பசாமி கோயிலுக்கு அருகே சேதுபதி மண்டபத்தில் எழுந்தருள்கின்றார்..

நாளை இரவு பூபல்லக்கில் அழகர் திருக்காட்சி அருள்கின்றார்..

நாளைக்கு மறுநாள் (13/05 ) அதிகாலை மூன்றரை மணிக்கு
அங்கிருந்து திருக்கோயிலுக்குப் புறப்படுகின்றார்..

பதின்மூன்றாம் தேதி இரவு அப்பன் திருப்பதி மண்டகப்படியில் திருக்காட்சி...

பதினான்காம் தேதி விடியற்காலையில் அழகர் மலையை அடைகின்றார்..

அங்கே பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு எதிரில் சிறப்பாக வரவேற்பு..

மறுநாள் உற்சவ சாந்தி.. மஞ்சள் நீர் சாற்றுமுறையுடன் திருவிழா இனிதே நிறைவடைகின்றது...

போன வருஷம் அழகர் தங்கிச் சென்ற திருக்கண்கள் 430...
இந்த ஆண்டு திருக்கண்கள் 433...

ஜனக்கூட்டம் இன்னும் மதுரையில குறையவில்லை...

அழகர் மலைக்குப் போய்ச் சேர்ந்தாலும்
ஜனங்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப கொஞ்ச நாளாகும்..

அந்த அளவுக்கு இந்தத் திருவிழாவில மெய் மறந்து இருக்காங்க...



மறுபடியும் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டது சந்தோஷம்..
மலர்.. எல்லாம் சரியா இருக்கா!..

எல்லாம் சரியா இருக்குங்க!..

புது மண்டபத்துக்குப் போய் வேணும்..ங்கற -
சாமான்கள் வாங்கிக்கிட்டு - நாமும் புறப்படுவோம்!...

ஓ... புறப்படலாம் வாத்யாரே!..
***


இந்த அளவில் மாமதுரையின் சித்திரைத் திருவிழா பற்றிய பதிவுகள் நிறைவு பெற்றாலும் - 

வண்ணமயமான படங்களுடன் - இன்னும் சில பதிவுகள் தொடரக்கூடும்...


கள்ளழகர் திருவடிகள் போற்றி.. போற்றி!..  
ஓம் நம சிவாய சிவாய நம 
***

7 கருத்துகள்:

  1. படங்கள் அனைத்தும் மனதைக் கொள்ளை கொண்டன. இன்னும் படங்கள் உண்டா!! ஆஹா! காத்திருக்கிறோம். மீண்டும் புகைப்படக் கலைஞர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! தகவல்களும் அருமை!

    சென்ற வருடம் தங்கிச் சென்றத் திருக்கண்கள் 430 இந்த வருடம் 433 //...அப்படியென்றால் ஆங்காங்கே சற்று இளைப்பாறிச் செல்வதுதானே ஐயா? ஓ அப்போ இந்த முறை வெயிலின் கடுமை அதிகமோ அதன் காரணமாகத்தான் தங்கிச் சென்றத் திருக்கண்கள் கூடியுள்ளதோ....

    திருவிழா நிறைவு பெற்றாலும் தாங்கள் சொல்லிய விதமும், புகைப்படங்களும்
    எங்கள் மனதில் இன்னும் இருக்கின்றன.....மிக்க நன்றி...

    தமிழ் விளையாடுகிறது!!!

    பதிலளிநீக்கு
  2. உங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு தெளிவான புகைப்படம் கிடைக்கிறது ஜி ?

    பதிலளிநீக்கு
  3. 'தங்கக்குதிரை வாகனமாக...' என்றொரு எஸ் பி பி பாடல் ஒன்று உண்டு. அது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  4. படங்களும் தகவல்களூம் சிறப்பு. மேலும் படங்கள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  5. அழகான படங்களுடன் அழகான பதிவு.
    அன்பு மழையில் நனைந்து அழகர் அவரின் அன்பில் மகிழ்ந்த மக்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. அற்புத படங்கள்...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..