வாத்யாரே...
வாங்க.. வாங்க..
எங்களை சீக்கிரம் வரச் சொன்னதா.. பொன்வண்டு சொன்னான்!..
ஒரு முக்கியமான சேதி இருக்கு.. அதை அப்புறம் சொல்றேன்.. முதல்ல இனிப்பு எடுத்துக்குங்க..
என்ன விசேஷம் வாத்யாரே!..
இன்னைக்குத் தான் மதுரையில மீனாட்சிக்கு கல்யாணம்.. அதான் இனிப்பு..
ஆகா... அருமை.. அருமை.. வேற வேலை எதுவும் இல்லைன்னா.. கதை கேட்கலாமா?..
ஓ.. சொல்றேனே!..
வாத்யாரே.. நக்கீரர் எதிர்த்துப் பேசாம இருந்தார்..ன்னா என்னா ஆகியிருக்கும்?..
இந்தச் சம்பவம் நடந்திருக்காது... நமக்கு கதை கிடைத்திருக்காது.. அவ்வளவு தான்!..
நீங்க சொல்லுங்க வாத்யாரே!..
நக்கீரர் சாம்பலாகிப் போனதும் பாண்டியன் அலறித் துடிச்சான்.. என்னால தான இவ்வளவு பிரச்னையும் ..ன்னு கோயிலுக்கு ஓடினான்.. சந்நிதியில முறையிட்டு அழுதான்...
மறுபடியும் ஈஸ்வரன் வெளிப்பட்டு வந்தார்..
செண்பகப் பாண்டியனே!... அரசனாகிய நீ பொறுப்பான விஷயங்களை
மட்டும் ஆய்ந்து அறிந்து செயல்படுவாயாக!...
தருமியைப் போல ஏழ்மை நிலையில் இருக்கும் அனைவருக்கும் அவரவர் திறமையை அனுசரித்து வேலை வாய்ப்பினை நல்குவாயாக!..
நக்கீரன் போன்ற பெரும் புலவர்களிடம் இருந்து நாட்டுக்கான நல்ல திட்டங்களைக் கேட்டுப் பெறுவாயாக!..
நக்கீரனின் சிறப்பை உலகத்துக்குக் காட்டுவதற்காகவே இப்படியோர் திருவிளையாடல் நிகழ்ந்தது!...
- அப்படி..ன்னு அறிவுரை எல்லாம் சொல்லிட்டு நக்கீரனை மீண்டும் உயிர்ப்பித்துக் கொடுத்தார்..
நக்கீரனும் தனது தவறை உணர்ந்து ஈசனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்..
செண்பகப் பாண்டியன் தான் அறிவித்த பரிசுத் தொகையை தருமிக்கே வழங்கி சிறப்பித்தான்...
தருமிக்கு ஆயிரம் பொற்காசுகள் கிடைச்சது.. பணக்காரர் ஆயிட்டார்..
உடனே - நான்.. நீ.. ந்னு போட்டி போட்டுக்கிட்டு பெண் கொடுக்க வந்தாங்க..
அதில - அறிவும் திறமையும் அழகும் உள்ள பெண்ணாகப் பார்த்து கல்யாணம் செய்து கொண்டு ஏழைகளுக்கு வயிறார சாப்பாடு போட்டார்..

ஈஸ்வரன் சொன்ன மாதிரி ஏழை எளியோர் நல்வாழ்வுக்கு நல்ல பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினான் - செண்பகப் பாண்டியன்..
அதனால - நாடும் முன்னேறியது.. மக்களும் மகிழ்ச்சியா இருந்தாங்க!..
உற்சாகத்துடன் பசங்கள் கைகளைத் தட்டினார்கள்..
வாத்யாரே... உண்மையிலயே தலைமுடிக்கு வாசம் உண்டா.. இல்லையா?..
உண்டு.. பெரோமோன்ஸ் ( Pheromones) ..ங்கற வேதிப்பொருள் இருக்கிறதா விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சிருக்காங்க.. இதுதான் ஆண் பெண் நடத்தைகளை கட்டமைக்கிறது...ன்னு சொல்றாங்க!..
வாத்யாரு..ன்னா வாத்யார் தான்!.. சரி என்னமோ சேதி இருக்கு..ன்னு சொன்னீங்களே!.. என்ன அது?..
இன்னைக்கு மீனாட்சியம்மனுக்கு திருக்கல்யாணம் .. நாளைக்கு திருத்தேர்.. நானும் அக்காவும் மதுரைக்குப் போறோம்.. நாங்க மட்டும் தனியாகப் போகாம உங்களையும் சேர்த்து அழைச்சிக்கிட்டுப் போறோம்..
அதனாலே ரெண்டு நாளைக்கு வேண்டிய துணிமணிகளை எடுத்துக்கிட்டு சாயுங்காலம் இங்கே வந்துடுங்க!.. சரியா!..
ஓ!... - என்று உற்சாகத்துடன் ஆரவாரித்தார்கள் பசங்கள்...
6/5 சனிக்கிழமை
ஒன்பதாம் திருநாள்
-: பகல் :-
மரவர்ணச் சப்பரம்
திருக்கோயில் மண்டகப்படியில்
எழுந்தருளல்..
6/5 சனிக்கிழமை
ஒன்பதாம் திருநாள்
-: இரவு :-
திக்விஜயம் செய்த மீனாட்சி
திருக்கயிலாயத்தில் ஈசனைக் கண்டு நாணங்கொண்டாள்..
போர்க்கோலம் களைந்து மணக் கோலம் கண்டாள்..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***
ஐயனைக் கண்ணுற்ற அம்பிகை.. |
நலந்தானா!.. - எனக் கேட்கும் நாயகன் |
தொடுக்குங் கடவுட் பழம்பாடற்
தொடையின் பயனே நறை பழுத்த
துறைத் தீந்தமிழின் ஒழுகு நறுஞ்
சுவையே அகந்தைக் கிழங்கை யகழ்ந்
தெடுக்கும் தொழும்பர் உளக் கோயிற்கு
ஏற்றும் விளக்கே வளர் சிமய
இமயப் பொருப்பில் விளை யாடும்
இளமென் பிடியே எறி தரங்கம்
உடுக்கும் புவனங் கடந்து நின்ற
ஒருவன் திரு உள்ளத்தில் அழகு
ஒழுக எழுதிப் பார்த்தி ருக்கும்
உயிர் ஓவியமே மதுகரம் வாய்
மடுக்குங் குழற் காடேந்தும் இள
வஞ்சிக் கொடியே வருகவே
மலையத் துவசன் பெற்ற பெரு
வாழ்வே வருக வருகவே!..
-: குமரகுருபரர் :-
***
அன்பின் ஜி
பதிலளிநீக்குஅருமை திருவிளையாடல் புராணம் மீண்டும் அறிந்தேன்.
எத்தனை தடவையும் வாசிக்கலாமே திரு விளையாடல் ....படங்களும்அருமை ஐயா
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி ஐயா
ஆனால் உண்மையில் இன்றுவரை தலைமுடிக்கு மணம் இருக்கிறதா என்ற கேலி இருக்கிறதுதான்!
பதிலளிநீக்குதிருக்கல்யாண போட்டோஸ் அருமை.
அருமையான பதிவு. திருவிளையாடல் புராண கதை அருமை.
பதிலளிநீக்குபடங்கள் அழகு.
தம்பி மனைவி அவள் வீட்டுக்கு அருகில் இருக்கும் மீனாட்சி , சொக்கநாதர் கோவில் அம்மனுக்கு திருமாங்கலய்ம் வாங்கி கொடுத்ததால் அந்த கோவிலில் திருமணம் பார்த்தேன்.
பதிலளிநீக்குகதை ரொம்பவே சிறப்பு. அதுவும் உரையாடல் மூலம் சொல்லிச் சென்றது நன்றாக இருந்தது.
பதிலளிநீக்குபடங்கள் வெகு அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
கதையைச்சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்....அருமை..அனைத்தும்
பதிலளிநீக்குகீதா: திருக்கல்யாணப் புகைப்படங்கள் அருமை! இங்கு கூட அம்மை அப்பனின் திருமண அழைப்பிதழ் போன்று கோயில் மதில்களில் ஒட்டியிருந்தார்கள்.