வாத்யாரே!..
பசங்களா!.. வாங்க.. வாங்க!..
சும்மா இப்படியே வந்தோம்!.. இவன் தான் சொன்னான்.. இன்னைக்கும் போய் திருவிழா படம் எல்லாம் பார்ப்போம்.. ந்னு!..
அதுக்கென்ன.. பார்த்துட்டா போச்சு!..
வாத்யாரே.. எனக்கு ஒரு சந்தேகம்!...
போன வருஷம் மாரியம்மன் கோயில்...ல கூழு காய்ச்சி ஊத்துன அன்னைக்கு திருவிளையாடல்..ன்னு ஒரு சினிமா போட்டாங்களே.. அந்துல வர்ற மதுரையும் நீங்க சொல்ற மதுரையும் ஒரே ஊரா?..
ஆமாம்... அந்த மதுரை தான் இந்த மதுரை!..
அப்போ அந்தக் கதையெல்லாம் நெஜமாவே நடந்ததா.. வாத்யாரே!...
ஆமா!... நடந்தது தான்!..
அதுல கூட ஒருத்தர்.. ஆயிரம் பொன்.. ஆயிரம் பொன்.. அப்படின்னு.. அவர் பேர் என்னடா?...
நாகேஷூ!...
நெஜமாவே அந்த மாதிரி ஒருத்தர் இருந்தாரா?...
அப்படித்தான் திருவிளையாடல் புராணம் சொல்றது...
அப்போ அந்தக் காலத்திலயும் எங்கள மாதிரி ஏழைங்க இருந்தாங்களா!...
இருந்தாங்க.. அதுக்கு பல காரணங்கள்!...
ராஜா கிட்ட பரிசு வாங்குறப்ப சிவன் வந்து அந்த சாமியாரை பொசுக்கிடுறாரே!.. அதெல்லாம் உண்மையா!.. வாத்யாரே?..
அதையெல்லாம் விளக்கமா சொல்றதுக்குள்ளே திருவிழாவே முடிஞ்சுடும்...
கொஞ்சமா சொல்லுங்களேன்..
சரி.. அந்தக் கதையில பணக்கஷ்டம் உள்ளவரா வர்றவர் பேர் தருமி... ஆதரவு யாரும் அவருக்குக் கிடையாது.. ஆனாலும் அவர் குடும்பஸ்தரா ஆகணும்.. அப்போ தான் கோயில் வேலை கிடைக்கும்.. காசு பணம் இல்லாத அவருக்கு யாரும் பொண்ணு கொடுக்கலே...
அந்தக் காலத்திலயும் ஏழை ஜனங்க இப்படித் தான் இருந்திருக்கு!...
பணத்துக்காக கஷ்டப்பட்டார் தருமி.. அப்போ தான் செண்பகப் பாண்டிய ராஜாவுக்கு ஒரு சந்தேகம் வருது... பெண்களோட கூந்தலுக்கு இயற்கையிலேயே வாசம் இருக்குதா.. இல்லையா.. அந்த் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறவங்களுக்கு ஆயிரம் பொன்.. அப்படின்னு தண்டோரா போட்டார்...
ராஜாவுக்கு வேற வேலை இல்லை போல இருக்கு... ஜனங்களோட பிரச்னையை யோசிக்காம எதுக்கு போய் யோசிச்சி இருக்கார் பாரேன்!..
அந்தக் காலத்தில உண்மையிலயே பிரச்னை இல்லாம தான் இருந்தது... ஆறு குளத்தை அழிக்கவில்லை.. மலையை வெட்டி ஏற்றுமதி செய்யவில்லை.. மரம் மட்டைகளை வெட்டிச் சாய்க்கவில்லை.. மொத்தத்தில் ஊரை அடித்து உலையில் போடவில்லை...
மக்களும் நிம்மதியா இருந்தாங்க.. மகாராஜாவும் நிம்மதியா இருந்தார்.. இல்லையா!.. வாத்யாரே!...
அதே தாண்டா.. பசங்களா... இந்த நேரத்தில தான் - ராஜாவுக்குச் சந்தேகம்.. ராணியின் கூந்தல்ல வாசம் இயற்கையா செயற்கையா!.. அப்படின்னு!... தீர்த்து வைக்கிறவங்களுக்கு ஆயிரம் பொற்காசு..ன்னு தண்டோராவும் போட்டாச்சு...
.....!.. .....!.. .....!..
இந்த சேதியை தருமி கேட்டார்.. அவருக்கு அரசனோட சந்தேகத்தைத் தீர்த்து வெச்சுட்டு ஆயிரம் பொன் பரிசை வாங்கிடுவது.. ந்னு தணியாத ஆசை..
அந்த நேரத்தில தான்!...
அந்த நேரத்தில..
மீதியை நாளைக்குச் சொல்றேன்.. இப்போ வாங்க திருவிழா படங்களைப் பார்க்கலாம்...
சரிங்க.. வாத்யாரே!..
வழக்கம் போல படங்களை எல்லாம் குணா முதன், ஸ்டாலின் , அருண் - அனுப்பியிருக்காங்க!.. அவர்களுக்கெல்லாம் மனமார்ந்த நன்றி..

29/4 சனிக்கிழமை
இரண்டாம் திருநாள்
-: பகல் :-
சுந்தரேசர் பூத வாகனத்திலும்
கயற்கண்ணி அன்ன வாகனத்திலும்
திருவீதி எழுந்தருளினர்..
விண்ணுலகின் மேலார்கள் மேலான் தன்னை
மேலாடு புரமூன்றும் பொடி செய்தானைப்
மேலாடு புரமூன்றும் பொடி செய்தானைப்
பண்ணிலவு பைம்பொழில்சூழ் பழனத்தானைப்
பசும்பொன்னின் நிறத்தானைப் பால்நீற் றானை
உண்ணிலவு சடைக் கற்றைக் கங்கை யாளைக்
கரந்துமையோ டுடனாகி இருந்தான் தன்னைத்
தெண்ணிலவு தென்கூடல் திருஆல வாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே!.. (6/19)
-: திருநாவுக்கரசர் :-

மீனாட்சி சுந்தரேசர் திருவடிகள் போற்றி..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
நல்ல நகைச்சுவை திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வு ஜி
பதிலளிநீக்குமேலும் உண்மைகள் அறிய தொடர்கிறேன்..
ஆமாமாமாம்.. அந்தக் காலத்தில் அவரவர் வேலையை அவரவர் பொறுப்பாகப் பார்த்ததால் எல்லாம் சுபீட்சமாகவே இருந்தது. மரம் வெட்டாத, மணல் திருடாத மக்களை பெற்றிருந்த நாட்கள்! உண்மை.
பதிலளிநீக்குபடங்கள் அழகு.
அந்த காலத்திலேயே பிறந்திருக்கலாம்னு தோணுது ஐயா ..
பதிலளிநீக்குஅக்காலத்தில் நாடு சுபீட்சமாகவே இருந்தது....
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் வெகு அழகு.
நானும் இரண்டாம் நாள் திருவிழா கண்டு வந்தேன்.
பதிலளிநீக்குநாட்டு மக்களின் நலம் விரும்பிய மன்னன் , மன்னன் நலம் விரும்பிய மக்கள் அதனால் எல்லாமே நன்றாக இருந்தது.
பதிவு அருமை. படங்க்ள் அழகு.
ஒரு காலத்தில் மக்கள் பெருக்கம் இல்லாமல் நாடும் வளமுடன் இருந்தது. மக்கள் பெருக்கம் கூட,,அறிவியல் வளர என்று தொழில்நுட்பம் வளர்ந்திட, பேராசையும் பெருகிட, எல்லாமே தலைகீழானது...ஆள்பவர்கள் தங்கள் கஜானாவைத்தானே நிறைக்கிறார்கள்.மக்களின் நலம் என்பதைக் கருத்தில் கொள்ளவில்லையே...படங்களும் தகவல்களும் அருமை ஐயா...
பதிலளிநீக்கு