சனி, மார்ச் 04, 2017

சிவ தரிசனம் 1

உவரி..

எங்கள் குலதெய்வம் வீற்றிருந்து அருளும் திருத்தலம்..

திருச்செந்தூரில் இருந்து நாகர்கோயில் வழியாக கன்யாகுமரிக்குச் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் 45 கி.மீ தொலைவில் உள்ள அழகான ஊர்..


கடற்கரையை ஒட்டியுள்ள திருக்கோயில்...

மார்கழி மாதம் முழுதும் மூலஸ்தானத்தினுள் சூரியக் கதிர்கள் பரவுகின்ற பெருமையை உடைய திருக்கோயில்..

கடம்பங்கொடிகள் சூழ்ந்த வனத்தில் அன்பர்களின் பொருட்டு சுயம்புவாக எழுந்து ஈசன் இன்னருள் புரிகின்றனன்..

எல்லாம் தானாகத் திகழ்வதனால் -

திருக்கோயிலினுள் - சிவ குடும்பத்தினருக்கான சந்நிதி எதுவும் கிடையாது.. அணுக்கத் தொண்டரான சண்டீசர் சந்நிதி கூடக் கிடையாது...

நவக்கிரகங்களில் நாட்டாண்மையும் கிடையாது..

சேவை புரியும் நந்தி மட்டுமே..

பின்னாளில் - மூலஸ்தானத்தினுள் விநாயகர் மட்டும் பீடம் கொண்டுள்ளார்..

வெளியில் பலிபீடம், கொடிமரம் நிறுவப்பட்டுள்ளன..

சுயம்பு லிங்கம் தோன்றிய பிறகு -

ஸ்ரீ சிவனணைந்த பெருமாள், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ இசக்கியம்மன்,
ஸ்ரீ மாடசாமி, ஸ்ரீ முன்னோடியார் - மற்றும் பல பரிவாரங்களுடன்
கடம்ப வனத்தில் ஆக்ரோஷமாக அரசாட்சி நடத்திக் கொண்டிருந்த -

ஸ்ரீ பத்ரகாளீஸ்வரி - சாந்தம் கொண்டு விளங்குகின்றாள்..

திருக்கோயிலுக்குப் பின்புறம் கன்னிமூலை கணபதி திருக்கோயில்..

அதற்கும் பின்னால் வன்னியடி ஸ்ரீ தர்ம சாஸ்தா..

ஸ்ரீ பூரண புஷ்கலா தேவியருடன் அருளாட்சி நடத்துகின்றார்..

ஸ்ரீ ராமசந்த்ர மூர்த்தி இளைய பெருமாளுடன் இங்கே வழிபாடு செய்ததாக ஐதீகம்..

இயற்கையின் அற்புதமாக -
கடலின் அருகில் மூன்று நல்ல தண்ணீர்க் கிணறுகள் அமைந்துள்ளன..

அவற்றுள் ஒன்று திருக்கோயிலின் பயன்பாட்டிற்கு மட்டும்..

மற்ற இரண்டும் பொதுமக்களுக்காக!..

வருடத்தின் எல்லா மாதங்களிலும் விசேஷங்கள் நடக்கின்றன..

அவற்றுள் வைகாசி விசாகம், ஆவணி கொடை, தைப்பூசம், மஹா சிவராத்திரி குறிப்பிடத் தக்கவை..

கடந்த சில வருடங்களாகவே -

திருவிழா சமயங்களில் உவரிக்குச் செல்ல முடியவில்லை..

எனினும், எங்கள் நினைவும் நெஞ்சமும் அங்கே தான்!..

கடந்த சிவராத்திரியன்று நான்கு காலங்களிலும் ஸ்வாமி எழுந்தருளிய திருக்காட்சிகளும் தைப் பூசத் தேரோட்ட நிகழ்வுகளும் சில தினங்களுக்கு கிடைக்கப் பெற்றன...

இணையம் சற்றே கோளாறு.. எனவே, உடனடியாக வழங்க இயலவில்லை..

இன்றைய பதிவில் மஹா சிவராத்திரி தினத்தின் நிகழ்வுகளை வழங்குவதில் மகிழ்வெய்துகின்றேன்...

தைப் பூச நிகழ்வுகள் அடுத்த பதிவில்!..







பிரதோஷ வேளையில் 1008 ஸ்படிக லிங்க பூஜை

அம்மையே.. அப்பா.. ஒப்பிலா மணியே!..
ஸ்ரீ சந்த்ரசேகரர் - ஸ்ரீ மனோன்மணி 
எனத் திருக்கோலங்கொண்டு
அம்மையும் அப்பனும் 
திருவீதி எழுந்தருளி நல்லருள் பொழிகின்றனர்...

குறையென்று ஏதும் இல்லை..

முந்தைய வினைகளால் 
சூழ்கின்றவை அனைத்தும்
சூரியனைக் கண்ட பனியாக விலகுகின்றன..

அதற்கு மேல் என்ன வேண்டும்!..
***

பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப் 
பரிந்துநீ பாவியேனுடைய 
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவது இனியே!..
- மாணிக்கவாசகர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
*** 

12 கருத்துகள்:

  1. படங்கள் எல்லாம் அவ்வளவு அழகு, தெய்வீகம்.
    ஸ்ரீ சந்திரசேகரர், ஸ்ரீ மனோன்மணி திருவீதி உலா அழகு.
    அனைவருக்கும் மனசாந்தியை தரட்டும். துன்பங்க்கள் சூரியனை கண்ட பனியாக விலகட்டும்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. படங்கள் அனைத்தும் அருமை ஐயா...

    தொடர வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. உவரி என்னும் வார்த்தைக்கு வேறு ஒரு பொருளும் உண்டோ உப்பைக் குறிக்கும் விதமாக ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      உவர்ப்புச் சுவையுடையதால் கடலுக்கு உவரி என்றும் பெயர்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் ஜி..

      நலம் தானே..

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பக்தி மயமான படங்களைப் பெரிதாக்கி பார்த்தேன். உங்கள் குலதெய்வம் ஊர் உவரி பற்றி ஏற்கனவே நீங்கள் எழுதியது நினைவுக்கு வர, அங்கும் சென்றும் படித்தேன். வாழ்த்துகள். இறைவன் அருள் புரிவான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. இன்னுமொரு பக்திமயமான பதிவு. சிறப்பாக இருக்கிறது. நன்றி.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..