சனி, மார்ச் 25, 2017

ஸ்ரீ காமாக்ஷி வைபவம்

கடந்த வியாழக்கிழமையன்று (பங்குனி பத்தாம் நாள் - 23 மார்ச் )
காலை பதினொரு மணியளவில் - உத்ராட நட்சத்திரம் கூடிய சுபவேளையில்

தஞ்சை மேலராஜவீதி ஸ்ரீ பங்காரு காமாக்ஷியம்மன் திருக்கோயிலுக்கு புனராவர்த்தன ஜீர்ணோத்தார மகாகும்பாபிஷேகம் நிகழ்த்தப்பெற்றது..

தஞ்சை ஸ்ரீ பங்காரு காமாக்ஷி
தஞ்சை மாநகர் மேலராஜவீதியில் -
ஸ்ரீ விஜயராமர் திருக்கோயிலுக்கும் ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் திருக்கோயிலுக்கும் நடுவே குடிகொண்டியிருப்பவள் ஸ்ரீ தங்கக் காமாக்ஷி..

காஞ்சி மாநகரிலிருந்து - தஞ்சையம்பதிக்கு எழுந்தருளி குடிகொண்டவள்..

அன்னை காமாக்ஷி அளப்பரிய கருணை கொண்டு இலங்குபவள்..

அவளுடைய புகழைப் பேசுதல் என்பது பெரும் புண்ணியம்...

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் சீரிய நிர்வாகத்திற்குட்பட்டது இத்திருக்கோயில்..

ஸ்ரீ காமாக்ஷி அம்மனின் மூலஸ்தான விமானமும் ஸ்ரீ காமகோடி அம்மனின் மூலஸ்தான விமானமும் முழுதுமாக புதுப்பிக்கப்பட்டுள்ளன..

ஸ்ரீ காமாக்ஷி அம்மனின் சந்நிதிக் கதவுகள் வெள்ளித் தகடுகளால்
திருப்பணி செய்யப்பெற்றுள்ளன..

மேலும் கூடிய திருப்பணிகளாக - திருக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரமும் யாகசாலை கோசாலை ஆகியனவும் புதுப்பிக்கப்பட்டுள்ளன..

அத்துடன் மேற்கு வாசலில் புதிதாக ராஜகோபுரம் எழுப்பப்பட்டுள்ளது..

கடந்த 17 மார்ச் அன்று காலை அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய திருப்பணி மங்கலங்கள் -

23 மார்ச் காலை ஏழாம் கால யாகபூஜை பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்று கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்துள்ளது...

இன்றைய பதிவில் கும்பாபிஷேக நிகழ்வுகள்... 













படங்களை வழங்கிய நண்பர்
நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகி யாதியுடையாள் சரணம் அரண் நமக்கே..(050)
- அபிராமி அந்தாதி -

காமாக்ஷியின் கருணை 
அனைவரையும் காத்து நிற்கட்டும்

ஓம் சக்தி ஓம் 
***

11 கருத்துகள்:

  1. அற்புதமான புகைப்படங்களை வழங்கி அருளிய அன்பின்ஜி அவர்கள் வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. நல்ல படங்கள் மற்றும் சிறப்பான தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. இங்கு அமர்ந்தபடியே தஞ்சை கும்பாபிஷேகத்தைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. படங்கள் எல்லாம் வெகு அழகு! தகவல்களுக்கும் மிக்க நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..