மாமன்னன் ஸ்ரீ ராஜேந்திர சோழன் எழுப்பிய
ஸ்ரீ பிரஹந்நாயகி உடனுறை ஸ்ரீ கங்கை கொண்ட சோழீசர் திருக்கோயிலுக்கு நேற்று காலையில் மங்கலகரமாக திருக்குடமுழுக்கு நிகழ்ந்தது..
வைபவத்தின் காட்சிகளை இன்றைய பதிவில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி..
படங்களை வழங்கிய
திரு. கடம்பூர் விஜய், தஞ்சாவூர் Fb மற்றும்
உழவாரம் திருப்பணிக் குழுவினர் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி..
நாடெங்கிலும் இருந்து திரண்டிருந்த பக்தர் தம் நடுவிருந்து
கங்கை கொண்ட சோழீச்சரத்தின் திருக்குடமுழுக்கினைக்
காண இயலவில்லையே!..
- என, மனம் தவித்திருந்தேன்...
அழகினும் அழகான படங்களைக் கண்டு..
நேரில் தரிசித்ததைப் போல மகிழ்ச்சி...
அவற்றைத் தளத்தின் ஊடாகப் பகிர்ந்து கொள்வதில் - மட்டற்ற மகிழ்ச்சி!...
ஓவியம் - விஷ்ணு ராம் |
ஸ்ரீ ராஜேந்திர சோழனின் பேரரசு |
திக்கெலாம் பரவட்டும் சோழனின் பெரும் புகழ்!..
வாழ்க தமிழ்..
வளர்க தமிழ்!..
***
அருமை ஐயா...
பதிலளிநீக்குஅழகான படங்களுடன்...சிறப்பான தரிசனம்..
உங்கள் பதிவின் மூலம் எங்களுக்கு ஒரு கொடுப்பினை உள்ளது... நன்றி ஐயா...
பதிலளிநீக்குபடங்கள் அற்புதம் ஐயா
பதிலளிநீக்குநன்றி
ஜனவரி 1ம் தேதி வழக்கம் போல் குடும்பத்துடன் போய் வந்தோம்.
பதிலளிநீக்குவேலை நடந்து கொண்டு இருந்தது. மாயவரத்தில் இருந்து இருந்தால் பார்த்து இருப்போம். இப்போது உங்கள் பதிவின் மூலம் தரிசனம் கிடைத்து விட்டது. மிகவும் மகிழ்ச்சி.
கொடிமரம் முன்பு கிடையாது, இப்போது கொடிமரம் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நன்றி. வாழ்த்துக்கள்.
பிறிதொரு பணியின் காரணமாக வெளியூர் சென்றுவிட்டதால் குடமுழுக்கில் கலந்துகொள்ளும் பேறு கிடைக்கவில்லை. இருப்பினும் உங்கள் பதிவு அக்குறையை சரிசெய்துவிட்டது.
பதிலளிநீக்குநேரில்கூட இப்படி காண முடியாது ஜி அருமை.
பதிலளிநீக்குபடங்களும் பதிவும் அருமை சார்.
பதிலளிநீக்குஆஹா... அழகான படங்களில் கங்கை கொண்ட சோழீச்சுவரத்தை நேரில் கண்டேன் ஐயா...
பதிலளிநீக்குசிறப்பான படங்கள். தங்கள் மூலம் நானும் குடமுழுக்குக் காட்சிகளை கண்டேன். நன்றி.
பதிலளிநீக்கு