செவ்வாய், டிசம்பர் 06, 2016

கண்ணீர் அஞ்சலி

லட்சோப லட்சம் மக்களின் 
கண்ணீரையும் பொருட்படுத்தவில்லை..
கதறலையும் பொருட்படுத்தவில்லை..


கடைசியில் காலன் வென்று விட்டான்..
வந்த காரியம் முடித்து சென்று விட்டான்..
***

22 பிப்ரவரி 1948 - 5 டிசம்பர் 2016
காலன் தான் அழைத்தான் எனில் -
தங்களுக்கு எப்படி மனம் வந்தது?..

போதும்.. போதும்!.. - என்று புறப்பட்டு விட்டீர்களோ?...

எல்லா உயிர்களுக்கும் இதுதான் நியதி என்றாலும் 
ஏழை மனம் பொறுக்குதில்லையே!..

ஏன் சென்றீர்கள்.. எங்கு சென்றீர்கள்?..
கண்ணீருக்கும் விடை கிடைக்கவில்லையே!..




தாயுள்ளம்


தண்தமிழும் மனம் கசிந்து தேடுகின்றதே..
தங்கமகள் தனைப் பிரிந்து வாடுகின்றதே!..

மண்ணினின்று மறைந்தாலும்
மனதிலென்றும் மறப்பதில்லை!..

காற்றிலின்று கலந்தாலும்
கருத்தினின்று பிரிவதில்லை!..








வளம்கூடும் தமிழ்மண்ணில்
வாழ்ந்திருக்கும் திருப்பெயர்!..

காவிரியாய் இளங்காற்றாய்
கலந்திருக்கும் திருப்பெயர்!..



காவேரி தந்த எங்கள் கலைச்செல்வியே.. 
காவிரியில் நீரோடும் நின்பேர் சொல்லியே!..



வாழ்க நின் பெயர்..
வாழ்க என்றென்றும்!..
***

14 கருத்துகள்:

  1. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வரமாட்டார் எனப் புரிந்தாலும் பாழும் மனம் கேட்பதில்லையே வந்த சுவடை விட்டுச் செல்லும் முதல்வருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

    பதிலளிநீக்கு
  2. ஆழ்ந்த இரங்கலைத தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா

    பதிலளிநீக்கு
  3. எங்கள் ஆழ்ந்த இரங்கல்களையும் இங்கு பதிகின்றோம் ஐயா!

    பதிலளிநீக்கு
  4. வரலாற்றில் இவருக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு.

    பதிலளிநீக்கு
  5. படங்களின் தொகுப்பு அருமை ஐயா..
    நினைவில் கொள்வோம்...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..