ஞாயிறு, செப்டம்பர் 11, 2016

சுட்டும் விழிச்சுடர்

11 டிசம்பர் 1882 - 11 செப்டம்பர் 1921
சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ..
வட்டக் கரியவிழி - கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ?..

பட்டுக் கருநீலப் புடவை
பதித்த நல்வயிரம்..
நட்டநடு நிசியில் தெரியும்
நட்சத்தி ரங்களடி!..


சோலைமலர் ஒளியோ - உனது
சுந்தரப் புன்னகை தான்..
நீலக் கடலலையே - உனது
நெஞ்சில் அலைகளடி!..

கோலக் குயிலோசை - உனது
குரல் இனிமை யடி..
வாலைக் குமரியடி - கண்ணம்மா
மருவக் காதல் கொண்டேன்!..

ஓவியம் - Rajeshwar Nyalapalli
சாத்திரம் பேசுகின்றாய் - கண்ணம்மா
சாத்திரம் ஏதுக்கடி..
ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா
சாத்திரம் உண்டோடி?..

மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்..
காத்திருப் பேனோடி - இதுபார்
கன்னத்து முத்தம் ஒன்று!..

ஓவியம் - Rajeshwar Nyalapalli
இன்று மகாகவியின் நினைவு நாள்..

சுட்டும் சுடர்களாகிய சூரியனும் சந்திரனும், 
வட்டக் கரிய விழியெனும் வானத்துக் கருமையும்
நட்ட நடுநிசியின் நட்சத்திரக் கூட்டங்களும்

எம் நினைவில் பாரதி.. பாரதி!.. - என்றே
தோற்றுவிக்கின்றன..

புதிது புதிதாய் தமிழில் 
பயிற்றுவிக்கின்றன..

ஓவியம் - Rajeshwar Nyalapalli
வாலைக் குமரியென வாழும் தமிழுடன்
பாரதியின் பெயரும் என்றும் நிலைத்திருக்கும்!..

வாழ்க பாரதி.. வாழ்க பாரதி!.. 
***

15 கருத்துகள்:

  1. பாரதியை நினைவு கூர்வதற்கு அவன் நிறையவே விட்டுச் சென்றிருக்கிறான்

    பதிலளிநீக்கு
  2. பாரதியை நினைவுகூர்ந்தவிதம் அருமை.
    ஓவியம் அழகாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அழகான கவிதை வரிகளுக்கு உருவம் கொடுக்கும் பொருத்தமான படங்களையும் ரசித்தேன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பாரதியை நினைவில் நிறுத்திய விதம் அருமை...
    இன்று எழுத நினைத்து விடுமுறை உறவுகள் வருகை, உடல் நலப் பிரச்சினை காரணமாக எழுத முடியவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..

      உடல் நலனைக் கவனித்துக் கொள்ளவும்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பாரதியைப் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி. 2001இல் முன் எட்டயபுரத்தில் இதே நாளில் எனக்கு பாரதி பணிச்செல்வர் விருது அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பாக எழுத்தாளர் விக்ரமன் அவர்களால் வழங்கப்பட்டதைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      புதிய தகவல் ஒன்றினைக் கண்டு மகிழ்ச்சி..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பாரதியை நினைவு கூர்ந்த பதிவு வழக்கம் போல் தங்களது பாணியில் வெகுச் சிறப்பு ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. வெகு சிறப்பான படங்கள். பதிவும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..