சனி, செப்டம்பர் 24, 2016

புரட்டாசி தரிசனம் 2

அழகர்..

தமிழகத்தில் இந்தப் பெயரைக் கேட்டதும் மயங்காதவர் வெகு சிலரே!..

ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்பால் ஈர்க்கும் தயாபரன்!..

மதுரையம்பதியில் நிகழும் -
சித்திரைத் திருவிழாவின் முத்திரைக் கதாநாயகன்!..

தான் வீற்றிருக்கும் திருமாலிருஞ்சோலையிலிருந்து
நானூறுக்கும் மேற்பட்ட திருக்கண் (மண்டகப்படி) களில்
நின்றும் இருந்தும் சேவை சாதித்து
மக்களுடன் ஒன்றி உறவாடியவனாக -

வாஞ்சையுடன் வைகைக் கரையில் எழுந்தருளும் வள்ளல் பெருமான்!..


நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்குநான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
ஏறுதிரு வுடையான் இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ!.. (0592)

இந்த பெருமானுக்குத் தான் -
நூறு தடாக்களில் வெண்ணெயும் நூறு தடாக்களில் அக்கார அடிசிலும்
பராவி வைப்பதாக சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் நேர்ந்து கொண்டாள்...

ஆனால், அந்த வேண்டுதலை அவளால் நிறைவேற்ற முடியவில்லை...

பின்னாளில் திருமாலிருஞ்சோலைக்கு எழுந்தருளிய 
உடையவர் ஸ்ரீ ராமானுஜர் - ஆண்டாளின் வேண்டுதலை ஈடேற்றினார்..

திருமாலிருஞ்சோலையில் ஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்றிய பின் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு எழுந்தருளி -

திருக்கோயிலினுள் பிரவேசித்தபோது -

வாரும் எம் அண்ணாவே!..

- என்று, சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாள் முன்வந்து நல்வரவு கூறி வரவேற்ற அதிசயமும் நிகழ்ந்தது என்பர்..


சிறப்பு மிகும் கள்ளழகர் திருக்கோயிலில்
துர்முகி வருஷத்திற்கான ஆவணி பவித்ர உற்சவம் 14/8 அன்று நடந்தது..

பவித்ர உற்சவத்தின் போது 108 கலச திருமஞ்சனம் செய்விக்கப்பட்டது...

அந்த வைபவத்தின் சில திருக்காட்சிகள் இன்றைய பதிவில்..

FBல் அழகிய படங்களை வழங்கிய திரு ஸ்ரீநிவாஸன்
அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.. 




கருவிளை யொண்மலர்காள் காயாமலர் காள்திருமால்
உருவொளி காட்டுகின்றீர் எனக்குய்வழக் கொன்றுரையீர்
திருவிளை யடுதிந்தோள் திருமாலிருஞ் சோலைநம்பி
வரிவளை யில்புகுந்து வந்திபற்றும் வழக்குளதே.. (0589)
- : சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் :-




துங்க மலர்ப்பொழில்சூழ் திருமாலிருஞ் சோலைநின்ற
செங்கட் கருமுகிலின் திருவுருப் போல்மலர்மேல்
தொங்கிய வண்டினங்காள் தொகுபூஞ்சுனை காள்சுனையில்
தங்குசெந் தாமரைகாள் எனக்கோர்சரண் சாற்றுமினே.. (0591)
- : சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் :-






காலை எழுந்திருந்து கரியகுருவிக் கணங்கள்
மாலின் வரவுசொல்லி மருள்பாடுதல் மெய்ம்மைகொலோ
சோலை மலைப்பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலி நிலைப்பெருமான் அவன்வார்த்தை உரைக்கின்றதே.. (0594)
- : சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் :-


சென்ற வாரம் வேங்கடேசப் பெருமாளைத் தரிசித்தோம்..

இந்த வாரத்தில் கள்ளழகர் எனும் சுந்தரராஜப் பெருமாளின் அழகு தரிசனம்..

புரட்டாசி மாதம் முழுதும் இயன்ற அளவுக்கு நாம் செய்யும் தான தர்மங்கள் ஏழேழு தலைமுறைகளைக் காக்கும் என்பது ஆன்றோர் வாக்கு...

நாம் செய்யும் தான தர்மங்கள் ஏழேழு தலைமுறைகளைக் காக்கும் என்பது ஒருபுறம் இருந்தாலும் -

வாழும் நாளிலேயே -
நோய்நொடியின்றி நல்லபடியாக வாழ்வதை - நாம் உணரமுடியும்..

இன்றைய கால கட்டத்தில்
நோய்நொடியின்றி வாழ்வதே மிகப்பெரிய வரம்..

உண்ணும் போது ஒரு கைப்பிடி!.. - என்றார் திருமூலர்...

ஆற்றுவார் ஆற்றல்பசி ஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.. (0225)

பசியைப் பொறுத்துக் கொண்டு விரதங்களைக் 
கடைப்பிடிப்பதை விட
பசித்திருப்பவரின் பசியைத் தீர்த்தல் சிறந்தது
என்பது திருக்குறிப்பு..

வாய்ப்பும் வசதியும் இருப்பின்
அற்றார் அழிபசி தீர்த்தல் நல்லது..

வளமும் நலமும் நம்மைத் தேடி வரும்..

வாழ்க வளம் வளர்க நலம்!..
***

14 கருத்துகள்:

  1. நல்ல படங்கள், நல்லதொரு தகவலைக் குறித்து அறிந்து கொண்டோம் மிக்க நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அழகு மலையானின் அழகிய தரிசனம் ஐயா...
    மிக அருமையான பகிர்வு ஐயா...

    பதிலளிநீக்கு
  3. அழகான பதிவு. கிருத்திகை அன்று மாமனையும், மருமகனையும் வணங்கி வந்தோம்.
    தானம் செய்வது பற்றி சொன்னது அருமை.
    பசியுடன் இருப்போர்க்கு அன்னம் தானம் செய்தல் நலம்.
    அனைவரும் நோய் நொடி இன்றி வாழ வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அனைவரும் நோய் நொடியின்றி வாழ்வதற்கு வேண்டுவோம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அன்பின் ஜி
    அழகிய புகைப்பட காட்சிகள் கண்களுக்கு விருந்து தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அருமையான புகைப்படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அழகிய புகைப் படங்களுடன் அருமையான பதிவு
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  7. அறியாத தகவல்களை அறிந்தோம், அழகான புகைப்படங்கள். நாராயணா, நாராயணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  8. புரட்டாசி தரிசனத்தை
    புகைப்படத்தின் வாயில்
    கண்டு களித்தோம்...
    அவனின் புகழ் அறிந்தோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..