புதன், ஜூலை 13, 2016

காக்க.. காக்க..

வீட்டை விட்டு வெளியில் வந்தால் நாலும் நடக்கலாம்.. 
அந்த நாலும் தெரிந்து நடந்து கொண்டால் நல்லா இருக்கலாம்!..
-: கவிஞர் வாலி :-

ஆனால்,
இவ்வாறெல்லாம் நடந்தால் என்னதான் செய்ய முடியும்?...

மேலதிக விவரங்களை படங்களின் கீழுள்ள இணைப்பில் காணலாம்..













நன்றி - புதியதலைமுறை
***

வீட்டை விட்டு வெளியே சென்றால் - 
வம்பு வழக்கு ஏதும் இல்லாமல்
எந்த ஒரு விபத்திலும் சிக்காமல்
உடம்பு ரத்தக்களறி ஆகாமல்

நல்லபடியாக மீண்டும் வீடு திரும்புவதற்குக் கூட 
புண்ணியம் செய்திருக்க வேண்டும் போலிருக்கின்றது...

நம்மை நாமே காத்துக் கொள்ள இயலாத வேளைகளில் அக்கம் பக்கத்தினர் தெய்வம் போல துணைக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை ஒன்று இருந்தது..


வனவிலங்குகள் கூட மாறுபட்ட சூழ்நிலைகளில் ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருக்கின்றன என்கின்றார்கள் - ஆய்வியலாளர்கள்..

அப்படியான காணொளி ஒன்று - இதோ!..



சற்றே மனிதப் பண்பு குறைந்தவரைக் காண்டாமிருகம் என்று இழித்துரைப்பர்..

காணொளியில் - காண்டாமிருகத்தின் செயலினைக் காணுங்கள்..

ஆற்றைக் கடக்கும் மானைப் பிடித்து விழுங்க முயற்சிக்கின்றது முதலை..

அதைத் தடுத்து - 
மானைக் காப்பாற்றிக் கரை சேர்க்கின்றது - காண்டாமிருகம்.. 

ஐந்தறிவு விலங்கு எனப்படும் காண்டாமிருகம் மேலானதா - இல்லையா!..

இன்றும் கிராமங்களில் -
ஒருவருக்கொருவர் ஒத்தாசை என்றெல்லாம் பேச்சு வழக்குண்டு..

அதைத்தான் -
மக்கள் சேவையே மகேசன் சேவை என்று சொல்லி வைத்தார்கள்...

ஆனால் -
அந்த வார்த்தைகள் - அப்படியான நம்பிக்கைகள்
இவை எல்லாம் மலையேறிப் போய் வெகுநாட்களாகின்றன..

ஆனாலும், முதுமொழி ஒன்று உண்டு..

அரசன் அன்று கேட்பான்.. தெய்வம் நின்று கேட்கும்!.. - என்று..

அதையாவது நம்புவோம்..

ஏனெனில்,

நம்பினார் கெடுவதில்லை.. நான்கு மறை தீர்ப்பு!.. - என்கிறார் மகாகவி..

அவர் தீர்க்க தரிசனம் பெற்றவர்.. 
அவருடைய வாக்கு மகத்தானது..

தெய்வம் கேட்கும்..
சத்தியமாக தெய்வம் கேட்கும்!..

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் நீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.. (0555) 
*** 

14 கருத்துகள்:

  1. நாட்டில் மனிதநேயம் படிப்படியாக குறைந்து வருகிறது. வீட்டை விட்டு வெளியே வந்தால் எதுவும் நடக்கலாம் என்பது போய், வீட்டுக்குள்ளும் தனியாய் இருக்கும்போது நமக்கு நாமே பூட்டிக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டிய காலம் இது.ஸ்கிரீன் ஷாட்டுகளுடன் அருமையான தொகுப்பு. திக்கற்றோருக்கு தெய்வமே துணை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..

      நன்றாகச் சொன்னீர்கள்.. ஆனாலும் பூட்டுகளை உடைக்க கடப்பாரையுடன் வருகின்றார்கள்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. மனிதம் தொலைக்கப்படுவதைத் தாங்கள் வேதனையோடு பகிர்ந்ததைக் கண்டேன். எங்கு போய் முறையிடுவது என்றே தெரியவில்லை. நீங்கள் சொல்வது போல தெய்வம் கேட்கும் என்ற நம்பிக்கையோடு இருப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்...

      ஏழைகள் ஏதிலிகள் எங்கே சென்று யாரிடத்தில் முறையிடுவது?..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. காவலர்கள் செய்த செயலுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை ஜி
    இதற்கு அரசு எடுத்த நடவடிக்கை நியாயமானது அல்ல.
    காவலர்களும் மனிதர்கள்தானே....

    தாங்கள் முடிவில் சொன்னதே உண்மை வேறென்ன செய்வது ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...

      ஒவ்வொரு நாளையும் கடத்துவது பெரும்பாடாக இருக்கும் போலிருக்கின்றது..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் வெங்கட்...

      எதிர்வரும் நாட்கள் எப்படியெல்லாம் இருக்குமோ தெரியவில்லை....

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  5. காவலர்களின் செயல் கண்டிக்கத்தக்கது... அரசு தவறிழைத்தவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  6. மனிதம் என்பதே இல்லாமல் போய்கொண்டிருக்கிறது ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தாங்கள் சொல்வதே நிதர்சனமாக இருக்கின்றது..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  7. எங்கோ எவர் மீதோ உள்ள கோபத்தை, அப்பாவி மக்கள் மீது காட்டி, ஒரு வடிகாலாக காவலர்கள் செய்கிறார்களோ? அவர்களுக்கு தண்டனை வழங்கும் போது, மக்கள் தொடர்பு இல்லாத துறைகளுக்கு மாற்றம், மற்றும் மனோதத்துவ சிகிச்சையும் அளிக்க வேண்டும். தண்டனை கடுமையாக (4 அல்லது 5 வருட சர்வீஸ் குறைத்தல்) இருக்க வேண்டும். பெங்களூரில் நான்கு காவல் அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளார்கள். சராசரி மனிதனுக்கு, தெய்வமே துணை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      சராசரி மனிதனுக்கு சக மனிதர்களின் ஆதரவு கூட அற்றுப் போய்க்கொண்டிருக்கின்றது.. தெய்வமே துணை..

      தங்கள் வருகைக்கும் கருத்து8ரைக்கும் நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..