அன்பின் இனிய
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!..
பெருமை மிகும் பற்பல திருத்தலங்களிலும் சித்திரைத் திருவிழாக்கள்
நிகழ்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழ்ப் புத்தாண்டு மலர்கின்றது...
நிகழ்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழ்ப் புத்தாண்டு மலர்கின்றது...
இந்நன்னாளில் -
அது வேண்டும்.. இது வேண்டும்!.. - என,
அம்மையப்பனிடம் கேட்கும் உரிமை பிள்ளைகளாகிய நமக்கு உண்டு...
அது வேண்டும்.. இது வேண்டும்!..
அதற்கு மேல் எது வேண்டுமாயினும்
அவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமைவது
அறிவு!..
அறிவு - செறிவாக இருக்கும் இதயத்திலே தான் அன்பு மலரும்..
அன்பு என்றால் அவர் மேல் இவரும் இவர் மேல் அவளும் கொள்வதல்ல!..
அகிலத்தின் மீது கொள்வது!..
ஆக, உலகின் மீது அன்பு கொள்வதெனில் அறிவு - நல்லறிவு வேண்டும்!..
அந்த நல்லறிவு எங்கே கிடைக்கும்?..
அந்த நல்லறிவை எது கொடுக்கும்!..
தமிழ்!..
தமிழ் ஒன்று தான் அன்பையும் அறிவையும் கொடுக்கும்!..
அதனால் தான் - ஔவையார்,
தமிழை - முத்தமிழை ஐங்கரனிடம் வேண்டிப் பெறுகின்றார்..
சங்கத் தமிழ் மூன்றும் தழைத்து விளங்கிய -
விளங்குகின்ற மாநகரங்கள் மூன்று!..
மதுரையம்பதி
நெல்லையம்பதி
தஞ்சையம்பதி..
என்பனவே அவை..
எனினும் - சிறப்பாகத் திகழ்வது - மாமதுரை எனும் நான்மாடக்கூடல்!..
மாமதுரையின் சிறப்புகளுள் சிகரம் கடம்பவனம்..
அந்தக் கடம்ப வனத்தின் நாயகி - கடம்பவன வாசினி..
அவளுடைய திருப்பெயர்களுள் இதுவும் ஒன்று..
அவளே தமிழ்.. தமிழே அவள்!..
அவள் - வடபுலத்தை வெற்றி கொண்ட வஞ்சிக்கொடி!..
அவள் - கண் கண்ட மணாளனைக் கைக் கொண்ட கன்னி - கயற்கண்ணி!..
அவள் - மாசற்ற மக்களின் மனங்களில் வாழும் மரகதவல்லி!..
பேர் கொண்ட அவளுக்கு
ஊர் கொண்ட அவளுக்கு
சீர் கொண்டு நிகழ்கின்றது
வேர் கொண்ட புகழுடன் திருவிழா!..
அறிவு!..
அறிவு - செறிவாக இருக்கும் இதயத்திலே தான் அன்பு மலரும்..
அன்பு என்றால் அவர் மேல் இவரும் இவர் மேல் அவளும் கொள்வதல்ல!..
அகிலத்தின் மீது கொள்வது!..
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு..
(0075)
வையகத்தின் மீது அன்புற்றார் எவரோ
அவரே வையகத்தில் - சிறப்புற்றார்!..
அந்த நல்லறிவு எங்கே கிடைக்கும்?..
அந்த நல்லறிவை எது கொடுக்கும்!..
தமிழ்!..
தமிழ் ஒன்று தான் அன்பையும் அறிவையும் கொடுக்கும்!..
அதனால் தான் - ஔவையார்,
தமிழை - முத்தமிழை ஐங்கரனிடம் வேண்டிப் பெறுகின்றார்..
பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந் தா..
விளங்குகின்ற மாநகரங்கள் மூன்று!..
மதுரையம்பதி
நெல்லையம்பதி
தஞ்சையம்பதி..
என்பனவே அவை..
எனினும் - சிறப்பாகத் திகழ்வது - மாமதுரை எனும் நான்மாடக்கூடல்!..
மாமதுரையின் சிறப்புகளுள் சிகரம் கடம்பவனம்..
அந்தக் கடம்ப வனத்தின் நாயகி - கடம்பவன வாசினி..
அவளுடைய திருப்பெயர்களுள் இதுவும் ஒன்று..
அவள்..!
மீனாள்.. தமிழ் மீனாள்!..
அவள் - வடபுலத்தை வெற்றி கொண்ட வஞ்சிக்கொடி!..
அவள் - கண் கண்ட மணாளனைக் கைக் கொண்ட கன்னி - கயற்கண்ணி!..
அவள் - மாசற்ற மக்களின் மனங்களில் வாழும் மரகதவல்லி!..
பேர் கொண்ட அவளுக்கு
ஊர் கொண்ட அவளுக்கு
சீர் கொண்டு நிகழ்கின்றது
வேர் கொண்ட புகழுடன் திருவிழா!..
இந்த நன்னாளில் மதுரையம்பதியில் நிகழ்வுறும் - சித்திரைத் திருநாளின் மூன்றாம் திருநாள் மற்றும் நான்காம் திருநாள் வைபவங்களை பதிவின் வழியாக வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன்..
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும்
தாளாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாதகோலும் ஒரு துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும்உதவி பெரிய தொண்டரொடு கூட்டுகண்டாய்
அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையே ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே!..

-: அபிராமி பட்டர் :-
***
இன்றைய பதிவின் படங்களை வழங்கிய
திரு. குணா அமுதன்
அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..
* * *
மூன்றாம் திருநாள் (12/4)
மாசி வீதிகளில் நிகழ்ந்த திருவீதி உலா!..
காலை - தங்கச் சப்பரம்.
-: இரவு :-
ஸ்ரீசொக்கநாதப் பெருமான் கயிலாய பர்வதத்திலும் -
அன்னை அங்கயற்கண்ணி காமதேனு வாகனத்திலும் எழுந்தருளினர்.
நான்காம் திருநாள் (13/4)
சித்திரை வீதிகளில் நிகழ்ந்த திருவீதி உலா!..
-: காலை :-
தங்கப் பல்லக்கில்
தங்கப் பல்லக்கில்
வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்திற்கு
தூர்த்தனைத் தோள்முடிபத் திறுத்தான் தன்னைத்
தொன்னரம்பின் இன்னிசை கேட்டருள் செய்தானைப்
பார்த்தனைப் பணிகண்டு பரிந்தான் தன்னைப்
பரிந்தவர்க்குப் பாசுபதம் ஈந்தான் தன்னை
ஆத்தனை அடியேனுக் கன்பன் தன்னை
அளவிலாப் பல்லூழி கண்டு நின்ற
தீர்த்தனைத் தென்கூடற் திருஆலவாய்ச்

சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே!.. (6/19)
-: திருநாவுக்கரசர் :-
அனைவருக்கும்
அன்பின் இனிய
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *
அருமையான படங்களுடன்
பதிலளிநீக்குஅருமையான பதிவு நண்பரே....
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பரே....
அன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..
தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
அன்பின் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குஇந்த புதிய ஆண்டு காலை, அபிராமி பட்டரின் அருமையான பாடலை நீண்ட நாட்களுக்குப்பின் படித்ததும் மனம் நிறைந்து குளிர்ந்தது. உங்களுக்கு என் நன்றி!
"அறிவு செறிவாக இருக்கும் இதயத்தில்தான் அன்பு மலரும்! அகிலத்தின் மீது அன்பு செலுத்தும் அந்த அறிவைக்கொடுப்பது தமிழ் மட்டுமே! "
மிகவும் அருமை!!
அன்புடையீர்..
நீக்குதங்களின் வருகை மனதிற்கு நிறைவு..
அன்பின் வருகையும் இனிய கருத்துரையும்
மகிழ்ச்சி.. நெகிழ்ச்சி.. நன்றி..
தங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
மனதைக் கவரும் ஆன்மீக உலாக்கள். சகோதரருக்கு எனது உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅன்பின் அண்ணா..
நீக்குஅன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
தங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
படங்கள் அனைத்தும் அழகு.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
அன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் குடும்பத்தினருக்கும் இனிய நல்வாழ்த்துகள்..
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்சித்திரை தானே ஆண்டின் முதல் மாதம் சிலர் தை மாதமே தமிழ்ப் புத்தாண்டின் துவக்க மாதம் என்கிறார்களே
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குஆளுக்கு ஒன்று சொல்கின்றார்கள்..
எல்லா நாளும் புத்தாண்டு நாளாகவே இருக்கட்டும்..
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
மதுரையில் இருந்து கொண்டு இன்னும் திருவிழா பார்க்க போகவில்லை.
பதிலளிநீக்குஉங்கள் பதிவில் திருவிழாக்களை வீட்டில் இருந்தபடி தரிசிக்கிறேன்.
என் தங்கை அழைத்துக் கொண்டு இருக்கிறாள் திருவிழா பார்க்க . அவள் வீட்டு வழியாக சுவாமி வீதி வலம் வருவார். போக வேண்டும்.
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
அன்புடையீர்..
நீக்குவிரைவில் அம்மையப்பனைத் தரிசனம் செய்து விட்டு
இனிய பதிவு ஒன்றைத் தாருங்கள்..
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அன்பின் ஜி குறளோடு விளக்கிய விதம் நன்று அழகிய புகைப்படங்கள் தொடரட்டும் தங்களது ஆன்மீகப்பணி
பதிலளிநீக்குதங்களுக்கு இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
அன்பின் ஜி..
நீக்குதங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அருமையான படங்கள்
பதிலளிநீக்குஅருமையான பதிவு
நன்றி ஐயா
அன்புடையீர்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா. படங்கள் அழகு. அருமையான பதிவு ஐயா
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
பதிலளிநீக்குசித்திரையாள் வருகை
இத்தரையில் எல்லோரும்
எல்லாமும் பெற்று வாழ
எல்லோருக்கும் வழிகிட்டுமென
புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
இத்தால் உங்கள் யாழ்பாவாணன்
அன்புடையீர்..
நீக்குசித்திரையாளின் வருகையால்
அனைவரும் நலம் பெறட்டும்..
தங்களுக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்..
தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
படங்கள் அழகு ஐயா...
பதிலளிநீக்குசித்திரைத் திருவிழா பார்த்த மகிழ்ச்சி...
அன்பின் குமார்..
நீக்குதங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..
படங்கள் வெகுச் சிறப்பு. தமிழ் நல்லறிவியயும் அன்பையும் கொடுக்கும் ஆஹா என்ன அருமையான வரிகள்!! தமிழ் மீனாள்! மனம் கவர்கிறது. தமிழே அவள் அவளே இவள்...வார்த்தைகள் விளையாடுகின்றன ஐயா தங்களிடம்...தகவல்கள் அருமை..
பதிலளிநீக்குபகிர்விற்கு மிக்க நன்றி ஐயா...
அன்புடையீர்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
இனிய கருத்துரைக்கு நன்றி..