செவ்வாய், மார்ச் 15, 2016

நாட்டியாஞ்சலி 2016

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, 
தஞ்சை ஸ்ரீ பெருவுடையார் திருக்கோயிலில் பிரகன் நாட்டியாஞ்சலி விழா மார்ச்/7 முதல் மார்ச்/13 வரை சிறப்பாக நடைபெற்றுள்ளது.


தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், பிரகன் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை, தென்னகப் பண்பாட்டு மையம் ஆகியவற்றின் சார்பில் தொடர்ந்து பதின்மூன்றாம் ஆண்டாக - இவ்விழா நடைபெற்றிருக்கின்றது..

ஏழு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் அறுநூற்றுக்கும் அதிகமான நடனக் கலைஞர்கள் பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.

நாட்டியாஞ்சலி விழாவில் - பரதம், மோகினியாட்டம், கதக் , ஒடிசி, குச்சிப்புடி -
ஆகிய நடனங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.





நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த புகழ்பெற்ற நடனக் கலைஞர்களுடன்
இலங்கை, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா - என பல்வேறு நாடுகளை சேர்ந்த நாட்டிய கலைஞர்களும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்துள்ளனர்.




சிவராத்திரி நாளாகிய மார்ச் ஏழாம் நாள் மாலை 6.15 மணி முதல் மறுநாள் அதிகாலை 3.30 மணி வரை நாட்டியாஞ்சலி நடைபெற்றது..

விழாவின் முதல் நாளில் பதினைந்து குழுக்கள் இடம் பெற்றன.







மற்ற நாட்களில் மாலை 6.00 முதல் இரவு 9.00 மணி வரை நாட்டியாஞ்சலி  நடைபெற்றிருக்கின்றது..



அழகிய படங்களை வழங்கிய 
நண்பர் குணா அமுதன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..
***

மேலும்
கும்பகோணம் ஸ்ரீகும்பேஸ்வரர் திருக்கோயிலிலும், 


நாட்டியாஞ்சலி - கும்பகோணம்
திருஐயாறு ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலிலும் நாட்டியாஞ்சலி விழாக்கள் சிறப்பாக நடைபெற்றுள்ளன..







நாட்டியாஞ்சலி - திருஐயாறு
***

கொடுகொட்டி பாண்டரம் கோடுசங் காரம்
நடமெட்டோடு ஐந்தாறு நாடியுள் நாடும்
திடமுற் றெழும் தேவதாரு வனத்தில்லை
வடமுற்ற மாவன மன்னவன் தானே!..
- திருமூலர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
***

22 கருத்துகள்:

  1. ஆஹா நண்பரே
    நிகழ்ச்சிகளை நேரில்
    பார்த்த உணர்வுகள் ...
    புகைப்படங்களுடன்
    நிகழ்ச்சி பதிவு அருமை
    நண்பரே....!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அன்பின் ஜி
    அருமையான புகைப்படங்கள் நண்பர் குணா அமுதன் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      குணா அவர்களுக்கு நல்வாழ்த்துகள்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. புகைப்படங்கள் அழகு. குணா அமுதன் அவர்களுக்கு நன்றி. தகவல்களுக்கும் சேர்த்து!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      குணா அவர்களுக்கு நல்வாழ்த்துகள்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. தாங்கள் இங்கு பகிர்ந்துகொண்டமைக்கும் மிகவும் நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் மீள்வருகைக்கு மகிழ்ச்சி. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. தஞ்சையிலேயே இருந்தும் அறியாச் செய்தி ஐயா
    தங்களால் நிகழ்ச்சியைக் கண்ட உணர்வு
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. படங்களுடன் பதிவு அருமை சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி கேள்விப்பட்டு இருக்கிறேன் தஞ்சையிலுமா? வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தஞ்சையிலும் 13 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றது..

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  8. ஆஹா... படங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகு ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. குடும்பத்துடன் ஒரு நாள் நிகழ்ச்சிகளை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. புகைப்படங்களுடன் பதிவு அழகு,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..