ஞாயிறு, டிசம்பர் 20, 2015

மார்கழித் தென்றல் - 04

குறளமுதம்

தானம் தவம் இரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காதெனின்.. (0019)
***

 சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை 
திருப்பாடல் - 04


திவ்ய தேசம் - அழகர் மலை
திருமாலிருஞ்சோலை

எம்பெருமான் - ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள்,
தாயார் - ஸ்ரீ சுந்தரவல்லி நாச்சியார்..
உற்சவர் - ஸ்ரீ கள்ளழகர்

ஸ்ரீ சோம சுந்தர விமானம் 
நின்ற திருக்கோலம்
கிழக்கே திருமுக மண்டலம்

மங்களாசாசனம்
பெரியாழ்வார், ஆண்டாள்,
திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார்,
பேயாழ்வார், நம்மாழ்வார்..

ஆகாய கங்கை - நூபுர கங்கையாக 
ஊற்றெடுக்கும் திருத்தலம்..


மதுரையம்பதியில் சித்திரைத் திருவிழாவின் போது 
வைகைக் கரையில் கள்ளழகருக்காகக் 
காத்துக் கிடப்போர் ஆயிரம்.. ஆயிரம்.. பல்லாயிரம்!..

சந்தனக்காப்புடன் - கருப்பஸ்வாமியின் சந்நிதிக் கதவு  
காவல் நாயகமாகிய ஸ்ரீகருப்பஸ்வாமி 
உறையும் தலங்களுள் முதன்மையானது..
* * * 

ஆழிமழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல் 
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி 
ஊழி முதல்வன் உருவம் போல் கறுத்துப் 
பாழியந்தோளுடைப் பற்பநாபன் கையில் 
ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து 
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல் 
வாழ உலகினின் பெய்திடாய் நாங்களும் 
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!.. 

ஓம் ஹரி ஓம்!..
***

சிவ தரிசனம்

திருத்தலம் - மதுரையம்பதி


இறைவன் -  ஸ்ரீ சோமசுந்தரர், சொக்கநாதர்
அம்பிகை - அங்கயற்கண்ணி, மீனாக்ஷி
தீர்த்தம் - பொற்றாமரை, வைகை
தலவிருட்சம் - கடம்பு

அம்பிகை இளங்குழவியாக 
அக்னியில் தோன்றியருளி
வாலைக்குமரியாக வாளேந்தி
வில்லுடன் நடந்து வீரம் விளைத்து
சுந்தரேசப் பெருமானின் கரம் பிடித்து
பாண்டிமாதேவியாகப் பட்டமேற்று
பஞ்சம் தீர்த்துப் பிணி அகற்றி
பசி தீர்த்துப் படியளந்த திருத்தலம்.

பாடிப்பரவியோர்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,
மாணிக்கவாசகர்
மற்றும் பல புண்ணியர்கள்..
* * *





ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிச் செய்த
தேவாரம்

வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானை கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்
தூயானைத் தூவெள்ளை ஏற்றான் தன்னைச் 
சுடர்த்திங்கள் சடையானைத் தொடர்ந்து நின்றென்
தாயானைத் தவமாய தன்மையானைத்
தலையாய தேவாதி தேவர்க் கென்றும்
சேயானைத் தென்கூடல் திருஆலவாய்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே!.. (6/19)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருவாசகம்

திருப்பள்ளி எழுச்சி
நான்காம் திருப்பாடல்

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!..

திருவெம்பாவை
(07 - 08)

அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற்கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோம் கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்நெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்!..

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்

ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய்!..
***
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்!..
* * *

8 கருத்துகள்:

  1. வணக்கம் !
    திருவம்பாவை முன்னிட்டு தங்களால் வெளியிடப்பட்ட இப் பகிர்வு கண்டு மகிழ்தேன் அருமையான இப் பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. திருப்பாவை, திருவெம்பாவை படித்தேன், நாளை படிப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அன்பின் ஜி இன்றைய நான்காம்நாள் திருவெம்பாவை நன்று தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. மார்கழி மாதம் தங்கள் பதிவுகளில் மகிழந்து போகும். பாவைப் பாக்கள் அனைத்தும் படித்தோம். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..