ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகராகிய அபுதாபியில் இருந்த நாட்களில் - ஆங்கே கண்டு மகிழ்ந்த இடங்களை -
அப்போதே பதிவில் வழங்கிட நினைத்தேன்..
ஆனால் - அவ்வாறு செய்திட இயலவில்லை..
ஆயினும், முயற்சியில் தளர்வதாக இல்லை..
இதோ,
தங்களுக்காக - துபை மால்!.. (Dubai Mall)
உலகின் பிரம்மாண்ட வணிக வளாகம் இது!.. - என்று அங்குள்ளோர் சொன்னாலும்,
உலகின் பிரம்மாண்ட வணிக வளாகங்களுள் இதுவும் ஒன்று!.. - என்றுதான் விக்கிபீடியா கூறுகின்றது..
இந்த வளாகத்தினுள் நுழையும் முன் எங்கள் காரினை நிறுத்துவதற்கு மூன்றாவது தளத்தில் தான் இடம் கிடைத்தது..
சுற்றுலா பயணிகளைக் கவர்வதற்காகவே - பெரும் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டது - துபை வணிக வளாகம்..
22 திரையரங்குகள், மருத்துவ வளாகம், வங்கிகள் இவற்றுடன்1200 கடைகள் இங்கே இருக்கின்றனவாம்..
நான்கு தளங்களாக அமைந்துள்ள வணிக வளாகத்தில் - பிரம்மாண்டம் தான் எங்கெங்கும்..
சுறா மற்றும் திருக்கை இவற்றுடன் இன்னும் பலவகை மீன்களும் நீந்திக் களிக்கும் - Under Water World..
மிக - மிகப் பெரிதான மீன் காட்சியகம்..
துல்லியமாக விளங்கும் மீன் காட்சியகத்தின் கண்ணாடியும் மிகப் பிரம்மாண்டமானது..
கீழ் தளத்தில் ஐஸ் ஸ்கேட்டிங் தளம் அழகாக அமைந்துள்ளது..
ஸ்கேட்டிங் பழகியவர்கள் - வயது வித்தியாசமின்றி சந்தோஷத்துடன் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்..
அந்தப்பக்கமாக - அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட டைனோசாரின் எலும்புக்கூடு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
கீழ்தளத்தில் - இரவு எட்டு மணியளவில் அழகுப் பெண்களின் அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி (Fashion Parade) என்று குறிக்கப்பட்டிருந்தது..
அதை முன்னிட்டு - அங்குமிங்குமாக, சர்வதேச அழகிகள் நடைபயின்று கொண்டிருந்தனர்.. ஆயினும்,
அடுத்து வேறு வேலை எங்களுக்கு இருந்ததால் - அழகிகளின் அணிவகுப்பைப் பார்க்க முடியவில்லை..
துபை மாலின் எதிரில் பெரிதான தடாகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தான் வண்ண மயமான துபை நீரூற்று (Dubai Fountain)..
இந்த நீரூற்றின் கரையில் தான் - 160 தளங்களுடன் வானுயர விளங்கும் -
புர்ஜ் கலீஃபா.. (Burj Khalifa)..
மாலை ஆறு மணியிலிருந்து இரவு பத்து மணி வரையில் -
ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் இசையுடன் கூடி வண்ண மயமாக நீரூற்று மகிழ்ச்சியூட்டுகின்றது..
நீரூற்றிலிருந்து அதிவேகத்துடன் நீர் பீய்ச்சப்படுவது - உலகிலேயே இங்கு தான்..
நீரூற்றிலிருந்து பீய்ச்சப்படும் நீரின் உயரம் 500 அடி..
நீரூற்றின் இக்கரையில் - அரபு பாரம்பர்ய அங்காடி (Souk Al Bahar) வளாகமும் அமைந்துள்ளது..
ஒவ்வொரு தளத்திலும் பல இடங்களில் மின்னணு தகவல் - தொடு திரைகள் உள்ளன..
அதன் மூலம் பற்பல தகவல்களையும் அறிந்து கொள்ளமுடிகின்றது..
பன்னாட்டு உணவகங்களும் இங்கே இருக்கின்றன..
மேலும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்டு - ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுப்பதில் முன்னிலையில் இருப்பது - துபை மால்!..
துபை வணிக வளாகத்தில் எடுக்கப்பட்ட படங்களுள் சிலவற்றை -
இன்றைய பதிவில் பகிர்வதில் மகிழ்ச்சி..
நீருற்றின் இசை நடனத்தைக் காணொளியாக்கிக் கொண்டு வந்தேன்..
அதன் அளவு அதிகமாக இருப்பதால் பதிவேற்ற இயலவில்லை..
மேலும், இங்கே இணையமும் சரியாக ஒத்துழைக்கவில்லை..
பல்வேறு சிறப்பம்சங்கள்..
ஆனாலும் - நான் முழுதுமாகச் சுற்றிப் பார்க்கவில்லை..
அடுத்த ஆண்டு மறுபடியும் வந்து பார்ப்பதற்கு இடங்கள் வேண்டும் அல்லவா!..
இன்னும் - சில பதிவுகளுக்கு தகவல்கள் உள்ளன..
அவற்றுடன் அடுத்து வரும் பதிவுகளில் சந்திக்கின்றேன்..
அப்போதே பதிவில் வழங்கிட நினைத்தேன்..
ஆனால் - அவ்வாறு செய்திட இயலவில்லை..
Burj Khalifa |
தங்களுக்காக - துபை மால்!.. (Dubai Mall)
உலகின் பிரம்மாண்ட வணிக வளாகம் இது!.. - என்று அங்குள்ளோர் சொன்னாலும்,
உலகின் பிரம்மாண்ட வணிக வளாகங்களுள் இதுவும் ஒன்று!.. - என்றுதான் விக்கிபீடியா கூறுகின்றது..
இந்த வளாகத்தினுள் நுழையும் முன் எங்கள் காரினை நிறுத்துவதற்கு மூன்றாவது தளத்தில் தான் இடம் கிடைத்தது..
22 திரையரங்குகள், மருத்துவ வளாகம், வங்கிகள் இவற்றுடன்1200 கடைகள் இங்கே இருக்கின்றனவாம்..
நான்கு தளங்களாக அமைந்துள்ள வணிக வளாகத்தில் - பிரம்மாண்டம் தான் எங்கெங்கும்..
சுறா மற்றும் திருக்கை இவற்றுடன் இன்னும் பலவகை மீன்களும் நீந்திக் களிக்கும் - Under Water World..
மிக - மிகப் பெரிதான மீன் காட்சியகம்..
கீழ் தளத்தில் ஐஸ் ஸ்கேட்டிங் தளம் அழகாக அமைந்துள்ளது..
ஸ்கேட்டிங் பழகியவர்கள் - வயது வித்தியாசமின்றி சந்தோஷத்துடன் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்..
அந்தப்பக்கமாக - அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட டைனோசாரின் எலும்புக்கூடு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
கீழ்தளத்தில் - இரவு எட்டு மணியளவில் அழகுப் பெண்களின் அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி (Fashion Parade) என்று குறிக்கப்பட்டிருந்தது..
அதை முன்னிட்டு - அங்குமிங்குமாக, சர்வதேச அழகிகள் நடைபயின்று கொண்டிருந்தனர்.. ஆயினும்,
அடுத்து வேறு வேலை எங்களுக்கு இருந்ததால் - அழகிகளின் அணிவகுப்பைப் பார்க்க முடியவில்லை..
துபை மாலின் எதிரில் பெரிதான தடாகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தான் வண்ண மயமான துபை நீரூற்று (Dubai Fountain)..
இந்த நீரூற்றின் கரையில் தான் - 160 தளங்களுடன் வானுயர விளங்கும் -
புர்ஜ் கலீஃபா.. (Burj Khalifa)..
Thanks - Google., |
ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் இசையுடன் கூடி வண்ண மயமாக நீரூற்று மகிழ்ச்சியூட்டுகின்றது..
Dubai Fountain |
நீரூற்றிலிருந்து பீய்ச்சப்படும் நீரின் உயரம் 500 அடி..
நீரூற்றின் இக்கரையில் - அரபு பாரம்பர்ய அங்காடி (Souk Al Bahar) வளாகமும் அமைந்துள்ளது..
ஒவ்வொரு தளத்திலும் பல இடங்களில் மின்னணு தகவல் - தொடு திரைகள் உள்ளன..
அதன் மூலம் பற்பல தகவல்களையும் அறிந்து கொள்ளமுடிகின்றது..
பன்னாட்டு உணவகங்களும் இங்கே இருக்கின்றன..
மேலும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்டு - ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுப்பதில் முன்னிலையில் இருப்பது - துபை மால்!..
துபை வணிக வளாகத்தில் எடுக்கப்பட்ட படங்களுள் சிலவற்றை -
இன்றைய பதிவில் பகிர்வதில் மகிழ்ச்சி..
மீன் காட்சியகம் |
25 அடி உயரமுடைய டைனோசரின் எலும்புக்கூடு |
அதன் அளவு அதிகமாக இருப்பதால் பதிவேற்ற இயலவில்லை..
மேலும், இங்கே இணையமும் சரியாக ஒத்துழைக்கவில்லை..
பல்வேறு சிறப்பம்சங்கள்..
ஆனாலும் - நான் முழுதுமாகச் சுற்றிப் பார்க்கவில்லை..
அடுத்த ஆண்டு மறுபடியும் வந்து பார்ப்பதற்கு இடங்கள் வேண்டும் அல்லவா!..
இன்னும் - சில பதிவுகளுக்கு தகவல்கள் உள்ளன..
அவற்றுடன் அடுத்து வரும் பதிவுகளில் சந்திக்கின்றேன்..
வாழ்க நலம்!..
* * *
படங்கள் ஒவ்வொன்றும் வியப்பைத் தருகின்றன ஐயா
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
துபை மால் பற்றிய, அழகிய வண்ணப் படங்களுடன் கூடிய பதிவினுக்கு நன்றி. அடுத்த பதிவினையும் ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.
பதிலளிநீக்குஅன்பின் அண்ணா..
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
அழகிய படங்களின் தொகுப்பு...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பின் ரூபன்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
அனைத்தும் பிரமிப்பு ஐயா... நன்றி...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
தாய்நாட்டிலிருந்து பணிபார்க்கும் நாட்டைப் பற்றிய பகிர்வுகள், தொடர்ந்து.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
தெரியாத பல தகவல்களைத் தெரிந்துகொண்டேன். நன்றி! தங்களுக்கு முன்கூட்டியே தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்! - இராய செல்லப்பா
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்..
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
அழகான புகைப்படங்கள் ஜி
பதிலளிநீக்குதாங்கள் 160 தளங்கள் என்று சொல்லி இருக்கின்றீர்கள் நான் அட் தி டாப் சென்று அங்கு வேலை செய்யும் பணியாளர்களிடம் கேட்டபோது 200 தளம் என்று சொன்னார்கள் நம்மை அழைத்துச்செல்வது 124 வது தளம் மட்டுமே எனது மகனை அழைத்துச் செல்லும் பொழுது இதன் முழு விரபம் கேட்டு வருவேன்
பகிர்வுக்கு நன்றி ஜி
இணையத்தில் 160 என்றும் ஒரு இடத்தில குறிப்பு உள்ளது அதேநேரம் 124லில் இருந்து காணும் பொழுது 200 உண்மை என்பது போலவும் கணக்கிட முடிகிறது
அன்பின் ஜி..
நீக்குஎல்லோரும் 200 என்றுதான் சொல்கின்றார்கள்.. ஆனாலும் இணையத்தில் 160 என்றே காணப்படுகின்றன..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
அருமையான படங்கள் மூலம் எங்களையும் அங்கே அழைத்துச் சென்றதற்கு நன்றி.
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..