ஆன்மிக வழிகாட்டும் பெரியோர்களுள் ஒருவரான -
பூஜ்யஸ்ரீ தயானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள் நேற்றிரவு (23/9) சித்தியடைந்தார்..
பலவகையிலும் -
குறிப்பாக மலைவாழ் மக்களுக்கு சிறப்பான சேவை செய்து வந்தவர்..
நுரையீரல் பாதிப்பு காரணமாக - கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்வாமிகள் -
சில மாதங்களுக்கு முன் - உயர் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்குச் சென்றார்..
தனது இறுதிக் காலத்தினை உணர்ந்த ஸ்வாமிகள் - கடைசி நிமிடங்களை ரிஷிகேஷில் உள்ள தனது ஆஸ்ரமத்தில் கழிக்க விரும்பினார்..
அதன்படி - கடந்த வாரம் அமெரிக்காவிலிருந்து ரிஷிகேசத்திற்கு திரும்பினார்..
தொடர்ந்த சிகிச்சைகள் - ஸ்வாமிகளின் விருப்பத்தின்படி நிறுத்தப்பட்டது...
இந்நிலையில் -
நேற்று முன்னிரவு 10.30 மணியளவில் ஸ்வாமிகள் சித்தியடைந்தார்..
ஸ்வாமிகளுக்கான இறுதிச் சடங்குகள் - நாளை ரிஷிகேசத்தில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது..
கோவை ஆனைகட்டியிலுள்ள - ஸ்வாமிகளின் ஆஸ்ரமத்தில் - பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்..
திருவாரூர் மாவட்டத்தில் மஞ்சக்குடி கிராமத்தில் 1930 ஆகஸ்ட் 15 அன்று பிறந்தவர் ஸ்வாமிகள்..
ஸ்வாமிகளின் இயற்பெயர் - நடராஜன்..
தந்தை - கோபால ஐயர். தாயார் வேலம்பாள்.
குடவாசலில் தொடக்கக் கல்வியை முடித்த ஸ்வாமிகள் - இந்திய விமானப் படையில் சேர்ந்தார்.. பணியில் நாட்டமில்லை. அங்கிருந்து விலகினார்..
அச்சமயத்தில் - ஸ்வாமி சின்மயானந்தரின் ஆன்மீக சொற்பொழிவுகளைக் கேட்டு - சின்மயா மிஷனில் தன்னை இணைத்துக் கொண்டார்..
தொடர்ந்து மதுரைக் கிளையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின் - பல நிலைகளைக் கடந்தார்..
1962ல் ஸ்வாமி சின்மயானந்தாஅவர்களிடம் நடராஜன் சந்நியாச தீட்சை பெற்றார்..
அப்போது அவருக்கு தயானந்த ஸரஸ்வதி என்ற பெயர் சூட்டப்பட்டது..
தொடர்ந்து - சின்மயா மிஷன் சார்பில் மும்பையில் தொடங்கப்பட்ட சாந்தீபனி சாதனாலயாவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
உடல்நிலை பாதிப்பின் காரணமாக - ஸ்வாமி சின்மயானந்தா அவர்களால் ஆன்மீகச் சொற்பொழிவுகளை நிகழ்த்த இயலாமற்போனது..
அந்தப் பணியை தயானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள் - தானே ஏற்று நடத்தினார்..
ஸ்வாமிகளின் சொழ்பொழிவுகளின் கவரப்பட்ட இளைஞர்களுக்காக - 1972ல் சின்மயா ஆஸ்ரமத்தில் மூன்றாண்டு குருகுல பட்டப் படிப்புகள் தொடங்கப் பட்டன.
1986ல் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள செய்லர்ஸ்பர்க் எனும் இடத்தில் ஆர்ஷ வித்யா குருகுலம் தொடங்கப் பெற்றது..
தொடர்ந்து - ரிஷிகேசத்திலும் ஆர்ஷ வித்யா பீடம் தொடங்கப் பெற்றது..

கோவை ஆனைகட்டியில் ஆர்ஷ வித்யா குருகுலமும்,
நாக்பூரில் ஆர்ஷ விஞ்ஞான குருகுலமும் தொடங்கப் பெற்றன..
மலைவாழ் கிராமங்களின் மக்களுக்கு மருத்துவம், கல்வி, சரியான பராமரிப்பில் உணவு வழங்கல் என பல்வேறு சேவைகள் ஸ்வாமிகளால் வழங்கப்பட்டன..
இதற்காக, AIM For SEVA - எனும் இயக்கம் 2000ல் தொடங்கப்பட்டது..
இந்த இயக்கம் நாடுமுழுதும் 120 இடங்களில் தன் சேவையைத் தொடங்கியது..
கலாச்சார, சமூக, பொருளாதார ரீதியாக நலிவுற்றிருக்கும் மக்களுக்கு நல்வாழ்வளிப்பதே இதன் நோக்கம்..
இதன் மூலம் ஆயிரக்கணக்கான கிராமங்களில் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்..
ஸ்வாமிகளின் ஆஸ்ரம சந்நியாசிகளும் அங்கு பயின்ற மாணவர்களும் உலகின் பல்வேறு நாடுகளில் - வேதாந்தத்தைப் பயிற்றுவிக்கின்றனர்..
தயானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள் பல்வேறு சமயக் கருத்தரங்குகளை நடத்தியுள்ளார்..
ஆன்மிகம் மட்டுமின்றி கலை, கலாச்சாரம் மற்றும் சமூகப் பணிகளில் தன்னை இணைத்துக் கொண்டவர் - ஸ்வாமிகள்..
ஸ்வாமிகளின் பேருரைகள் - தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் முதலான மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன..
பூஜ்யஸ்ரீ தயானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகளை -
ஆறாண்டுகளுக்கு முன் - சென்னை விமான நிலையத்தில் சந்தித்துள்ளேன்..
ஸ்வாமிகளின் ஆன்மா
இறை நிழலில் இன்புற்றிருப்பதாக!..
ஓம்
சாந்தி.. சாந்தி.. சாந்தி!..
* * *
பென்சில்வேனியா வில் உள்ள செயில்ஸ் பார்க் நகரில் உள்ள
பதிலளிநீக்குஅர்ஷ் வித்யா ஆஸ்ரம் சென்று இருக்கிறேன் 2009 ல்.
அதன் விவரங்கள் எனது வலைப்பதிவிலும் உள்ளது.
அந்த அர்ஷ வித்யா ஆஸ்ரமத்தில் உள்ள 30 வயதே நிரம்பிய கோவை ஆசிரியரைச் சந்தித்தேன். அங்கே சுற்றிலும் இருக்கும் இந்திய மக்கள் தமது குழந்தைகளை சனி, ஞாயிறு அன்று அனுப்புகிறார்கள்.
இந்த ஆஸ்ரமத்தின் கிளை ஒன்றினை பாஸ்டன் நகரின் அருகில் உள்ள அண்டவர் என்னும் இடத்திலும் பார்த்தேன்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com
அன்பின் ஐயா..
நீக்குஸ்வாமிகளின் தொண்டு அளப்பரியது..
வாழ்வின் கடைக்கோடியில் இருந்த மக்களின் பிள்ளைகளுக்கு நல்ல உணவுடன் இருப்பிடக் கல்வியை வழங்கி முன்னேறியவர்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..
தகவலுக்கு நன்றி ஜி நானும் இவரைப்பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குஸ்வாமிகளின் தொண்டு அளப்பரியது..
ஏழை மக்களை முன்னேற்றுவதில் பெரும் பணியாற்றினார்
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..
நல்ல மனிதரைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துள்ளீர்கள்,,,,,,
பதிலளிநீக்குஅவரின் ஆதியும் முடிவும் பற்றி தொகுத்துள்ள பாங்கு அருமை,
நன்றி.
அன்புடையீர்..
நீக்குஸ்வாமிகள் ஆற்றிய மக்கட்பணி மகத்தானது....
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..
அறிந்திராத தகவல்கள் ஐயா!
பதிலளிநீக்குஜீவமுக்தி அடைந்த ஸ்வாமிகளின் ஆன்மா
இறையடியில் இளைப்பாற வேண்டுகிறேன்!
அன்புடையீர்..
நீக்குஸ்வாமிகளின் தொண்டு அளப்பரியது..
வாழ்வின் கடைக்கோடியில் இருந்த மக்களின் பிள்ளைகளுக்கு நல்ல உணவுடன் இருப்பிடக் கல்வியை வழங்கி முன்னேறியவர்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..
கடவுள் இல்லை என்பவர்க்கும் கருணை காட்டும் கருணா மூர்த்திகளின்
பதிலளிநீக்குஆன்மா எப்போதும் இறைவனின் திருவடிகளைப் பற்றி மகிழ்வு காணும்
என்பதில் ஐயமில்லை ! இவரது ஆன்மாவும் இறைவனின் திருவடிகளில் இளைப்பாற வேண்டும் என வேண்டுகின்றேன் !பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .
அன்புடையீர்..
நீக்குஸ்வாமிகளின் தொண்டு சிறப்பானது..
மலைவாழ் மக்களின் பிள்ளைகளுக்கு நல்ல உணவுடன் இருப்பிடக் கல்வியை வழங்கி முன்னேறியவர்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..
பதிலளிநீக்குசிறந்த பக்திப் பதிவு
தொடருங்கள்
அன்புடையீர்..
நீக்குசிறப்பாக தொண்டாற்றிய மகத்தான துறவி..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..
இவரைப் பார்த்துள்ளேன். இவரது பொழிவுகளைக் கேட்டுள்ளேன். கேட்கக் கேட்க மனம்முழுமையாக அதில் லயித்துவிடும்.
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குஸ்வாமிகளின் தொண்டு அளப்பரியது..
மதமாற்றத்தையும் தீண்டாமையையும் எதிர்த்துப் போராடியிருக்கின்றார்....
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..
யார் என்னவாயிருந்தாலும் முடிவு ஒன்றுதான் நல்லவர்களைப் பற்றியும் அவர்களது சேவை பற்றியும் படிக்கும் போது என்றும் எல்லோரும் நலமாக இருக்க வேண்டத் தோன்றுகிறது
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குஸ்வாமிகளின் தொண்டு அளப்பரியது..
யாரொருவரும் குறை கூற முடியாதபடிக்கு துறவு வாழ்க்கை வாழ்ந்தவர்..
வாழ்வின் கடைக்கோடியில் இருந்த மலைவாழ் மக்களின் பிள்ளைகளுக்கு நல்ல உணவுடன் இருப்பிடக் கல்வியை வழங்கி முன்னேறியவர்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..
அவரது சில சொற்பொழிவுகளை ஒலி வடிவில் கேட்டிருக்கிறேன்...
பதிலளிநீக்குதகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்....
அன்பின் வெங்கட்..
நீக்குமகத்தான தொண்டுகள் புரிந்தவர் ஸ்வாமிகள்..
வாழ்வின் கடைநிலையிலிருந்த மக்களின் பிள்ளைகளுக்கு உணவுடன் உறைவிடப் பள்ளி மூலம் கல்வி வழங்கியவர்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..
கோவை, மதுரை, சென்னையில் சுவாமிகளின் சொற்பொழிவுகளை கேட்டு இருக்கிறேன். சின்மயாமிஷ்னில் பாலவிஹாரில் சேர்ந்து பாடல்களை கற்றுக் கொண்டு இருக்கிறேன், எங்களை மதுரை அருகில் உள்ள புல் ஊத்து என்ற இடத்தில் உள்ள தபோவனத்திற்கு அழைத்து சென்றார்கள், அங்கு அவரே நேரே வந்து பாடல்கள் பாடி எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார். அதை மறக்க முடியாது.
பதிலளிநீக்குஅவரின் வரலாற்றை பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள். நன்றி.
அன்புடையீர்..
நீக்குஏழை எளிய மக்களின் நல்வாழ்வுக்கென தன்னை அர்ப்பணித்தவர் - ஸ்வாமிகள்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..