சனி, ஆகஸ்ட் 15, 2015

சுதந்திர ஜோதி

தமிழக மக்களுக்கு முதல்வர் ஆற்றிய சுதந்திர தின சிறப்புரை!..



இனிய சுதந்தரம் பெற்று எட்டு ஆண்டுகள் சென்றுவிட்டன.

அந்நியன் நம்மை ஆளக்கூடாது என்பது மட்டுமல்ல சுதந்தரத்தின் தத்துவம்.

நம்மை நாமே ஆள வேண்டும் என்பதுதான் அதன் அடிப்படை.
இந்திய ஜனநாயக சுதந்தரக் குடியரசை ஆக்குவதும், ஆள்வதும் நம் அனைவருக்கும் உற்ற உரிமையும், உயரிய கடமையும் ஆகும்.
சுதந்தர இந்தியாவின் சென்ற எட்டாண்டு வரலாற்றை எடுத்துப் பாருங்கள்.

சுதந்தரத்தின் பொறுப்புகளையும் நன்மைகளையும் தனி மனிதன் ஒவ்வொருவனும் உணரச் செய்துள்ளோம்.

மக்களாட்சியின் சிறந்த சாதனை இதுவே!..

அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையே இருந்த மதில் இடிந்து விட்டது.

இன்று ஆள்பவரும் நாமே, ஆளப்படுவோரும் நாமே.
அறம் செழித்து, வளம் கொழித்த நாடு நம் நாடு.

அந்த அறத்தைப் போற்றி வளர்த்து, நாம் மட்டுமல்ல உலக மக்களும் அதைப் பின்பற்றிப் பயனடையச் செய்யும் வகையில் நம் அயல் நாட்டுக் கொள்கை அமைந்துள்ளது.
வளத்தைப் போற்றி வளர்க்கும் முறையில் வகுக்கப்பட்டுள்ளது ஐந்தாண்டுத் திட்டம்.

மக்கள் உழைப்புக்கு உற்சாகம் காட்டி உணர்வை உறுதிப்படுத்தி, அவர்களுடைய ஆக்கச் சக்தி அனைத்தையும் திரட்டி, நாட்டு நன்மைக்குப் பயன்படுத்த ஐந்தாண்டுத் திட்டம் வழிகாட்டியுள்ளது.


திட்டம் தீட்டிவிட்டால் பசி அடங்கிவிடுமா என்று கேட்பவர்கள், இன்று புத்துணர்வு பொங்கப் பொலிவுற்று விளங்கும் நம் கிராமங்களுக்குச் சென்று பார்க்கட்டும்.
மதுவிலக்கினால் மீண்டு மலர்ந்த வாழ்வு வாழும் மக்களை அங்கு காணலாம்.

அரசாங்கத்தின் ஆதரவுடன், கிராம முன்னேற்றத்துக்கு தாங்களே திட்டம் வகுத்துப் பள்ளிகள் கட்டி, பாதைகள் போட்டு, குளம் வெட்டி, வளம் பெருக்கித் திருப்பணியில் பொறுப்பேற்கும் காட்சியைக் காணலாம்.
சாதி வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்ட சமுதாயம் அங்கு உருவாகி வருகிறது. விவசாயி வாழ்வு ஆதிக்கம் பெற்றுள்ளது. வைத்திய சாலைகள், மூலை முடுக்கிலுள்ள கிராம மக்களையும் தேடி வருகின்றன.
ஏட்டுப் படிப்பு அல்லாமல் தனி மனிதன் நல்வாழ்வுக்கும் சமூகத்தின் பொது வாழ்வுக்கும் பலன் அளிக்கும் முறையில், சிறுவர்களைப் பக்குவப்படுத்தும் ஆதாரக் கல்விப் பள்ளிகளை அங்கு காணலாம்.
பல ஆண்டுகளாக சீரழிந்திருந்த குடிசைத் தொழிலுக்கு ஆதரவு பெருகி வருவதைக் காணலாம்.

நாடு ஒன்று, நாடு நமது என்ற உணர்வு, மக்களிடையே எங்கும் ஊடுருவி நிற்பதைக் காணலாம்.

அங்கு சர்வோதய சமுதாயம் நம் கண் முன்னே உருவாகியிருக்கிறது.
இவை அரிய சாதனைகள். இவை குறித்துப் பெருமை கொள்ள நமக்கு உரிமை உண்டு.

சுதந்தர இந்தியாவின் மிகப்பெரிய மூலதனச் சொந்து, அதன் மக்கள் சக்தி.

அச்செல்வம் என்றும் குறையாது, குலையாது காக்க வேண்டும்.
அணைகள் கட்டுவது யாருக்காக?.. தரிசை மீட்டு, நிலத்தைத் திருத்தி தண்ணீர் பாய்ச்சுவது யாருக்காக?..

இவை பொதுப் பணிகள். சாதி சமய வேறுபாடுகள், அரசியல் கட்சிப் பூசல்கள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவை.
இந்த நன்னாளன்று - மக்கள் அனைவருக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள் இதுதான்.,

நாம் இந்நாட்டுக் குடிமக்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம். 
நாம் நம்மைப் பற்றிப் பெருமை கொள்ளும்படி நடந்துகொள்வோம்!.. 


உரை நிகழ்த்தியவர் 
முதல்வர் கு.காமராஜர் அவர்கள்., 
உரை நிகழ்த்தப்பட்ட நாள் - 15.8.1955
(நன்றி - தினமணி)
* * *

லோக மான்ய திலகர்
ஜாலியன் வாலா பாக் - 1919 ஏப்ரல் 4
விடுதலை வேண்டியதால் 
படுகொலை செய்யப்பட்டவர்கள்.,

மாவீரன் பகத்சிங்
தூக்குக் கயிற்றை முத்தமிட்ட தியாகி

கொடி காத்த குமரன்
விடுதலை வேள்வியில் - வெள்ளையனின் தடியடிக்குத் 
தன்னுயிரை ஈந்தவர்.,

மாவீரன் வாஞ்சி நாதன்
வ.உ.சி.அவர்களுக்குக் கிடைத்த தண்டனைக்குப் 
பழி தீர்த்து விட்டு தன்னுயிரைத் துறந்தவர்.,  

செக்கிழுத்த செம்மல்

சுதந்திர வேள்வியில் வெள்ளையனை எதிர்த்து
கப்பலோட்டிய தமிழன்..
நாட்டுக்காக தனது பெருஞ்செல்வத்தை இழந்தவர்
சுப்ரமணிய சிவா
வெள்ளையனின் சிறை இவருக்கு அளித்த பரிசு
தொழுநோய்

மகாகவி பாரதியார்
பாட்டுத் திறத்தாலே - விடுதலை வேட்கையைக் 
கனன்று எழச் செய்தவர்

சிறை பிடிக்கப்பட்ட சிங்கம் - நேதாஜி
விடுதலைப் போராட்டத்தை தனித்துவமாக நடத்திய
நேதாஜி சுபாஷ் சந்த்ரபோஸ்

பாப சாகிப் Dr. அம்பேத்கர்
அடிமைத் தளை அகற்றிய ஐயா

எளிமையின் சின்னம் லால்பகதூர் சாஸ்திரி
இன்னும் எத்தனை எத்தனையோ
தியாக சீலர்கள் நமக்காக தன்னுயிர் ஈந்து
சுதந்திர ஜோதியை ஏற்றி வைத்தனர்..

அவர்களுக்கெல்லாம் என்ன கைம்மாறு செய்யப் போகின்றோம்?..

அவர்கள் ஏற்றி வைத்த சுதந்திர ஜோதியை
என்றென்றும் கட்டிக் காப்பதே
அவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலி!..


பாரத பூமி பழம்பெரும் பூமி
நீரதன் புதல்வர் - இந்நினைவகற் றாதீர்..

பாரத நாடு பாருக்கெலாம் திலகம்
நீரதன் புதல்வர் - இந்நினைவகற் றாதீர்!..

ஜய்ஹிந்த்!.. 
* * * 

19 கருத்துகள்:

  1. வணக்கம் ஜி அருமை இந்த நன்நாளில் நம்முன்னோர்களை அழகாக தொடுத்து மரியாதை செய்து விட்டீர்கள்
    இனிய சுதந்திர தின வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. வணக்கம்,
    அருமையான தொகுப்பு, அரியப் புகைப்படங்கள், வாழ்த்துக்கள்.
    சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. முதல்வரின் சுதந்திர தின உரை என்றதும் ஒரு நொடி திடுக்கிட்டேன். படிக்கும் போது புரிந்தது அந்த உரையை ஆற்ற தகுதி பெற்றவரின் உரை என்று. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. வரலாற்று சிறப்புமிக்க வாழ்த்துக்குரிய படைப்பு!
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  5. "குழலின்னிசையின்"
    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. தலைப்பைக் கண்டதும் சற்றே யோசனை. இருந்தாலும் முழுமையும் படித்ததும் தாங்கள் எங்களை எங்கு அழைத்துச்சென்றீர்கள் என்பதை உணர்ந்தோம். நல்ல நாளில் நல்ல ஒரு மனிதரின் அருமையான உரையைப் பகிர்ந்து அவரையும், நாட்டையும் பெருமைப்படுத்திவிட்டீர்கள். அதனால் நீங்களும் பெருமைக்குள்ளாகிவிட்டீர்கள். நன்றி. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..
      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி..
      அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  7. சுதந்திர தின வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அருமை.

    சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  9. மிக மிக அருமையான கட்டுரை..எழுத்தின் தரம் மனதை கவர்கின்றது ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. உண்மையில் நம் முன்னோரின் வீரமும்,தமிழ்லுணர்வும் வியக்க வைக்கிறது!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..