சனி, ஜூன் 27, 2015

வானில் ஆடிய மயில்

நீலமயில் மண்ணில் தானே தோகை விரித்தாடும்!..

ஆனால் - இன்று காலம் மாறிவிட்டதால் -

மயில்கள் நீல வானிலும் ஆடி மகிழ்வித்திருக்கின்றன.

தஞ்சை விமானப் படைத் தளத்தில் இன்று காலை 8.30 மணியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு இந்திய விமானப் படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடந்திருக்கின்றன..

ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களிக்க -

விமானப் படையின் வீரர்கள் - நான்கு ஹெலிகாப்டர்களில் பறந்து சாகசங்களை நிகழ்த்தியுள்ளனர்.


தஞ்சைக்கு முதலாவதானது - இந்நிகழ்ச்சி..

முன்னதாக - தஞ்சை விமான தளத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் -
திரு. பிரசாந்த் குப்தா அவர்கள் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பின்படி -

இந்திய விமானப் படையின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியே இந்நிகழ்ச்சி என அறிய முடிகின்றது.

ஹெலிகாப்டரில் பறந்து சாகசம் செய்யும் குழுக்கள் - இரண்டு மட்டுமே!..

மயில்!.. (Sarang, The helicopter aerobatic display team of the Indian Air Force..)

மயில் - எனும் பெருமைக்குரிய குழுவினரை உடையது நம்நாடு!..

மற்றது -

நீலக் கழுகு!.. (Blue Eagles of the British Army.) பிரிட்டிஷ் ராணுவத்தின் குழு.





இன்று சாகச நிகழ்ச்சிகளைச் செய்வதற்கு முன் - ஜூன் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்களும் ஒத்திகைகள் நடந்துள்ளன..

மேலும் - ஹெலிகாப்டர்களின் சாகசங்களுடன் - 


இந்திய விமானப் படையின் ஆகாஷ் கங்கா எனும் (“Akash Ganga” The IAF skydiving team.,)  குழுவினைச் சேர்ந்த பத்து வீரர்கள் பாராசூட் மூலமாக - விமானத்தில் இருந்து குதித்து சாகசம் நிகழ்த்தியுள்ளனர்.

ஏழாயிரம் அடி உயரத்தில் பறந்த (AN 32) விமானத்திலிருந்து - குழுத் தலைவர் கஜானந்த் யாதவ் - தேசியக்கொடி மற்றும் விமானப் படையின் கொடியுடன் முதலில் தரையிறங்கினார்.

அவரைத் தொடர்ந்து மற்ற ஒன்பது வீரர்களும் தரையிறங்கினர்..

இந்த ஆகாஷ் கங்கா குழுவினர் - வட துருவத்திலும் தென் துருவத்திலும் முத்திரை பதித்தவர்கள் என்பது பெருமைக்குரிய செய்தி..










தஞ்சை விமான தள உயரதிகாரி திரு. ஷிண்டே அவர்கள் , மாவட்ட ஆட்சியர் திரு சுப்பையன் அவர்கள் மற்றும் உயரதிகாரிகள் முன்னைலையில் இந்த சாகச நிகழ்ச்சி நடந்துள்ளது.

நிகழ்ச்சிகளை நாம் நேரில் காணவில்லை எனினும் -  

நிகழ்வின் படங்களை Facebook - ல் வழங்கிய  Thanjavur pages  மற்றும் செந்தில்குமார் பாலகிருஷ்ணன் (Thanjavur City ) ஆகியோருக்கு நன்றி..

அந்தப் படங்களில் சிலவற்றை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி..

பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்கள் - என,
திரண்டு வந்து கண்டு களித்தனர்.

சாகசங்களை நிகழ்த்திய வீரர்களை - ஆரவாரத்துடன் கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்திய மக்களின் கண்களில் அகலாதிருந்தது - பிரமிப்பு!..

அதுவே -

தஞ்சை மண்ணில் முதல் முறையாக 
இந்திய விமானப்படை வீரர்கள் நிகழ்த்திய 
சாகச விளையாட்டுக்குக் கிடைத்த வெற்றி!..

வாழ்க பாரதம்!..
ஜய்ஹிந்த்!.. 
* * *

30 கருத்துகள்:

  1. ஆஹா தாங்கள் எப்பவும் முதலில், வாழ்த்துக்கள்,
    நேரில் சென்று பார்க்க இயலவில்லை,
    தங்கள் பதிவின் முலம் கண்டோம். அவர்களுக்கும் எம் வணக்ககங்கள்.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. தஞ்சையில் இருந்தும் அறியாதவனாய் இருந்திருக்கின்றேன் ஐயா
    தங்களால் காணக் கிடைக்காதக் காட்சியைக் கண்டேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்த்திருப்பீர்கள் என நினைத்தேன்..

      தங்கள் வருகைக்கு நன்றி..

      நீக்கு
  3. பிரமாதமான படங்கள்... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. தொலைக்காட்சியில் செய்தி வரும் முன்பே உங்கள் பதிவில் அழகிய படங்களுடன் சுடச்சுட. வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அந்த குழுவினர் மதுரை பக்கமும் வந்தால் தேவலே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      விரைவில் வரக்கூடும் என நினைக்கின்றேன்..

      தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. ஆஹா! அருமையான படங்கள்! பல விஷயங்கள் தெரிந்து கொண்டோம் உங்கள் பதிவிலிருந்து! பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அடேங்கப்பா என்ன அழகாக உள்ளது சாகசம். தைகள் மூலம் கண்டு களித்தேன். மிக்க நன்றி !
    சாயி பாடல் என் பக்கம் சுப்புத் தாத்தாவிற்காக எழுதியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. பதில்கள்
    1. அன்பின் ஜி..

      ஊரில் அனைவரும் நலம் தானே!..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. தகவல் பகிர்வுக்கு நன்றி. படங்கள் அனைத்துமே அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  11. நல்ல நிகழ்வு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களுக்கு நல்வரவு..
      தங்களுடைய முதல் வருகை கண்டு மகிழ்ச்சி.
      கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  12. தஞ்சையில் இருந்தும் பார்க்கமுடியவில்லை. அங்கிருந்து எங்களைக் காண வைத்துவிட்டீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      பதிவில் தங்களைக் காணாததும் - தாங்கள் வெளியூர் சென்றிருப்பீர்கள் என எண்ணினேன்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. பதில்கள்
    1. அன்பின் குமார்..

      அனைவரும் நலமா..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  14. பதிவும் படங்களும் அற்புதம் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  15. அருமையான படங்கள்! நேரில் காணவில்லையென்றாலும் உங்கள் படம்& பதிவு மூலம் நேரில் கண்ட உணர்வு பெற்றேன். மிகவும் மகிழ்ச்சி. நன்றி துரை சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சியும் நன்றியும்...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..