மதுரையம்பதியில் நிகழ்வுறும் சித்திரைத் திருவிழாவின் -
தொடர்ந்து பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் திருநாட்களின் படங்களை -
பதினொன்றாம் திருநாளில் (1/5) திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்த ஜனங்கள் அலைகடலெனத் திரண்டு வந்து திருத்தேரின் வடம் பற்றி இழுத்தனர்.
மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்த நெடுந்தேர்கள் மங்கலகரமாக தேரடியில் நிலைபெற்றன.
ஆயிரக்கணக்கான பக்த ஜனங்கள் அலைகடலெனத் திரண்டு வந்து திருத்தேரின் வடம் பற்றி இழுத்தனர்.
மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்த நெடுந்தேர்கள் மங்கலகரமாக தேரடியில் நிலைபெற்றன.
மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மடமானி
பங்கயச்செல்வி பாண்டி மாதேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநாயகனால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே!.. (3/120)
-: திருஞான சம்பந்தர் :-
* * *
தொடர்ந்து பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் திருநாட்களின் படங்களை -
பதினொன்றாம் திருநாள் (1/5) வைபவம்
மாசி வீதிகளில் நிகழ்ந்த திருவீதி உலா!..
-: இரவு :-
அருள் தரும் ஐயன் சுந்தரேசப்பெருமானும்
அன்னை மீனாக்ஷி அம்பிகையும்
சப்தாவர்ண சப்பரத்தில் எழுந்தருளி
மாசி வீதிகளில் வலம் வந்தருளினர்.
உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர்மதிச் செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கென்னை இனிப் படையாளை உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே!.. (84)
-: அபிராமி பட்டர் :-
ஸ்வாமியும் அம்பாளும் திருக்கோயிலுக்குத் திரும்பியதும் -
சித்திரைத் திருவிழாவிற்காக ஏற்றப்பட்ட ரிஷபக்கொடி இறக்கப்பட்டது.
* * *
பன்னிரண்டாம் திருநாள் (2/5) வைபவம்
மாசி வீதிகளில் நிகழ்ந்த திருவீதி உலா!..
-: காலை :-
பொற்றாமரைத் திருக்குளத்தில் தீர்த்தம் அளித்தல்.
தொடர்ந்து தேவேந்திர பூஜை நிகழ்ந்தது.
-: இரவு :-
பதினாறு கால் மண்டபத்தில்
திருப்பரங்குன்றம் ஸ்ரீபவளக்கனிவாய்ப் பெருமானும்
ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமியும் விடை பெற்றுக் கொண்டனர்.
வெள்ளி விடை வாகனங்களில் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேசரும்
அங்கயற்கண் அம்பிகையும் திருவீதி வலம் வந்தருளினர்.
பன்னிரண்டாம் திருநாளுடன் மதுரையம்பதியில் சித்திரைத் திருவிழா மங்கலகரமாக நிறைவு பெற்றது.
மாமதுரையில் சீர்மிகு சித்திரைத் திருவிழா
நிறைவுபெற்ற அதேவேளையில் -
தலைமுடித்துக் கொண்டையிட்டு கண்டாங்கிப் பட்டுடுத்தி
கையில் நேரியல் கம்புடன் - அதிர்வேட்டுகள் முழங்க
வாண வேடிக்கையுடன் மதுரையம்பதியை நோக்கிப் புறப்பட்டார் -
கள்ளழகர்.. கள்ளழகர்.. கள்ளழகர்!..
வளந்தரும் வைகையில் - நாளை காலையில்
திருவடித் தாமரைகளைப் பதிப்பதற்கு
வள்ளல் பெருமான் வருகின்றார்!..
அழகர் பெருமானுக்கு நல்வரவு!..
* * *
வளந்தரும் வைகையில் - நாளை காலையில்
திருவடித் தாமரைகளைப் பதிப்பதற்கு
வள்ளல் பெருமான் வருகின்றார்!..
அழகர் பெருமானுக்கு நல்வரவு!..
* * *
அப்பன்நீ அம்மைநீ ஐயனும்நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய்நீ
துணையாய் என்நெஞ்சஞ் துறப்பிப்பாய்நீ
இப்பொன் நீ இம்மணிநீ இம்முத்தும் நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே!.. (6/95)
-: திருநாவுக்கரசர் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
திருச்சிற்றம்பலம்
* * *
சித்திரைத் திருவிழா புகைப்படங்களும் விளக்கவுரைகளும் அருமை நண்பரே வாழ்க நலம்.
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..
வாழ்க நலம்!..
சித்திரைத் திருவிழா கண்டு மகிழ்ந்தேன் ஐயா
பதிலளிநீக்குநன்றி
அன்புடையீர்..
நீக்குதங்களின் வருகைக்கு மகிழ்ச்சி..கருத்துரைக்கு நன்றி..
அருமை ஐயா...
பதிலளிநீக்குதிரு.அருண், திரு. குணா அமுதன், திரு. ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றிகள்...
அன்பின் தனபாலன்..
நீக்குஅனைவருக்கும் அன்பின் நன்றி..
தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி..
சித்திரைத் திருவிழா படங்கள் அனைத்துமே அருமை.
பதிலளிநீக்குகள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவங்கள் பற்றிய படங்களைக் காண ஆவலுடன்.....
அன்பின் வெங்கட்..
நீக்குகள்ளழகர் ஆற்றில் இறங்கிய படங்கள் அடுத்த பதிவில்!..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
சித்திரை திருவிழாவைக் கண்டு களித்தோம் ஐயா
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி..நன்றி..
தொடர்ந்து உங்களுடன் சித்திரைத் திருவிழா பார்த்துவருகிறோம். காண்பதற்கரியன, கிடைத்தற்கரியனவற்றைப் பகிர்ந்துகொள்வதற்கு நன்றி.
பதிலளிநீக்குஆய்வு தொடர்பான எனது அண்மைப்பதிவைக் காண வருக http://ponnibuddha.blogspot.com/2015/05/blog-post_3.html
அன்புடையீர்..
நீக்குதங்களின் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..
படங்களுடன் வழக்கம் போல பதிவு அழகு/ பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதங்களின் வருகைக்கும் பாராட்டுரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..