மதுரையம்பதியில் நிகழ்வுறும் சித்திரைத் திருவிழாவின் -
தொடர்ந்து -
பத்தாம் திருநாள் மற்றும் பதினொன்றாம் திருநாளின் படங்களை -
இன்றைய பதிவில் வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன்..
பத்தாம் திருநாளாகிய நேற்று (30/4) காலை 9.20 மணியளவில்
ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேசர் திருமணம் கோலாகலமாக நிகழ்ந்தது.
தொடர்ந்து -
பத்தாம் திருநாள் மற்றும் பதினொன்றாம் திருநாளின் படங்களை -
இன்றைய பதிவில் வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன்..
என்ன ஒரு ஆக்ரோஷம்!.. |
இன்றைய பதிவின் படங்களை வழங்கியோர் :-
திரு. குணா அமுதன், திரு. ஸ்டாலின், திரு.அருண்.,
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..
* * *
ஸ்ரீ மீனாக்ஷி திருக்கல்யாணம்
நேற்று காலை மங்கலகரமாக நிகழ்ந்தது.
பத்தாம் திருநாள் (30/4) வைபவம்
மாசி வீதிகளில் நிகழ்ந்த திருவீதி உலா!..
-: காலை :-
அதிகாலை 4.00 மணியளவில் புறப்பாடாகிய இளங்கிளி மீனாள்
சித்திரை வீதிகளில் வலம் வந்தருளி - முத்துராமையர் மண்டபத்தில்
கன்னி ஊஞ்சலாடி அருளினாள்.
அதன் பின் - திருமண மண்டபத்திற்கு எழுந்தருள,
அதிகாலை 4.00 மணியளவில் புறப்பாடாகிய இளங்கிளி மீனாள்
சித்திரை வீதிகளில் வலம் வந்தருளி - முத்துராமையர் மண்டபத்தில்
கன்னி ஊஞ்சலாடி அருளினாள்.
அதன் பின் - திருமண மண்டபத்திற்கு எழுந்தருள,
திருக்கல்யாணம் கோலாகலமாக நிகழ்ந்தது.
-: இரவு :-
அருள் தரும் சுந்தரேசர் யானை வாகனத்திலும்
அங்கயற்கண் அம்பிகை பூப்பல்லக்கிலும்
எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர்.
அம்மையப்பனுக்காகக் காத்திருக்கும் திருத்தேர் |
ஸ்ரீ மீனாக்ஷி திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து
இன்று காலை திருத்தேரோட்டம் நிகழ்ந்தது.
பதினொன்றாம் திருநாள் (1/5) வைபவம்
மாசி வீதிகளில் நிகழ்ந்த திருவீதி உலா!..
-: இரவு :-
ஸ்ரீசுந்தரேசப்பெருமானும் அங்கயற்கண் அம்பிகையும்
சப்தாவர்ண சப்பரத்தில் ஆரோகணித்து
மாசி வீதிகளில் வலம் வந்தருள்வர்.
நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!.. (50)
-: அபிராமி அந்தாதி :-
திருச்சிற்றம்பலம்
* * *
மதுரையே விழாக்கோலத்தில்தானே. அடுத்த விழா கள்ளழகர் ஆற்றில் இறங்குவதுதானே அருமையான படங்களுடனும் விளக்கங்களுடனும் பதிவு ரசிக்க வைக்கிறது.
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி ..
புகைப்படங்கள் அனைத்தும் அருமை நண்பரே கீழிருந்து மேல் நாலாவது படத்தில் நான்கு பேர் அந்தரத்தில் எப்படி ? நண்பரே
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குஉற்சாகம் பீறிட்டது என்பார்களே.. அதுதான் போல!..
தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
படங்களும் விளக்கங்களும் மிகவும் அருமை ஐயா... நன்றி...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
பல நாட்களாக இணையம் வரவில்லி ஆதலால் உங்களுடைய திருவிழாக்கள் பலவற்றை தவற விட்டு விட்டேன். ஒவ்வொன்றாகப் படித்துக் கருத்திடுகிறேன். துரை சார்.
பதிலளிநீக்குமீனாக்ஷி திருக்கல்யாணத்திற்கு வந்து விட்ட திருப்தி வந்து விட்டது உங்கள் பதவியும் படங்களையும் பார்க்கும் போது.
நன்றி துரை சார்.
அன்புடையீர்..
நீக்குவெகு நாட்களுக்குப் பின் தங்கள் வருகை!..
மிக்க மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
அருமையான விளக்கமும் அதற்கேற்ற படங்களும் பகிர்வுக்கு நன்றி ஐயா!
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
சித்திரைத் திருவிழா காட்சிகளை உங்கள் தளத்தில் கண்டு மகிழ்ந்தேன். நன்றி.
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்..
நீக்குதங்களின் வருகைக்கு மகிழ்ச்சி..நன்றி..