திங்கள், ஏப்ரல் 20, 2015

தேர் வெள்ளோட்டம்

தஞ்சையின் ராஜ வீதிகளில் -
நூறாண்டுகளுக்குப் பின் - தேரோட்டம் நடைபெற்றது.

தஞ்சை அருள்மிகு பெருவுடையார் திருக்கோயிலுக்காக உருவாக்கப்பட்ட புதிய திருத்தேர் இன்று (20/4) திங்கட்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்களின் ஆனந்த முழக்கத்துடன் கோலாகலமாக வெள்ளோட்டம் கண்டது.

Dr. B. ஜம்புலிங்கம் அவர்களுக்கு நன்றி
தேர் வெள்ளோட்டம் பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டதுமே - மா நகரின் மக்களும் சுற்றுப்புற மக்களும் ஆவலுடன் வந்து தேரினைக் கண்டு மகிழ கூடிய வண்ணம் இருந்தனர்.

இன்று அதிகாலையில் - மேலராஜவீதி ஸ்ரீவிஜயராமர் திருக்கோயிலின் எதிரில் - திருத்தேரில் எழுந்தருள பூரண கும்பம் ஸ்தாபனம் செய்யப்பட்டு யாக பூஜைகள் நடைபெற்றன.

யாக பூஜைகள் நிறைவு பெற்றதும் - மகா தீபாராதனை நிகழ்ந்தது.

காலை 6.30 மணியளவில் - அம்மையப்பனின் அம்சமாக - பூரணகும்பம் திருத்தேரில் எழுந்தருளப்பெற்றது.

மங்கல மேளங்களுடன் சிவகண வாத்தியங்கள் முழங்கின.

பறையொலியுடன் கூத்தொலியும் - அந்த விண்ணை எட்டியது

அலங்கரிக்கப்பட்ட யானை முன் செல்ல - திருத்தேரோட்டம் தொடங்கியது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆரவாரத்துடன் திருத்தேரின் வடம் பற்றி இழுத்தனர்.

Dr. B. ஜம்புலிங்கம் அவர்களுக்கு நன்றி



2013 செப்டம்பர் மாதம் - திருத்தேருக்கு அடி கோலியதுமே -
திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டுமென திட்டமிட்டிருந்தேன்..

இங்கிருக்கும் சூழ்நிலைகளினால் - அது கை கூடவில்லை.

வரும் காலம் அதற்கான வாய்ப்பினை நல்கும் என நம்புகின்றேன்..

நலம் விளைய நமசிவாயம் நல்லருள் பொழிவதாக!..

இன்றைய பதிவில் தொடரும் படங்களை வழங்கியோர் - தஞ்சாவூர் Fb..

அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.



ஸ்ரீ விஜயராமர் திருக்கோயிலின் முன்பாக திருத்தேர்













நன்றி - செந்தில்குமார்
நன்றி - செந்தில்குமார்

ராஜ வீதிகளில் - திரும்பிய பக்கமெல்லாம் மக்களின் மகிழ்ச்சி வெள்ளம்.


இளைய தலைமுறையினருக்கு இது ஒரு புதிய அனுபவம்.


ராஜ வீதிகளில் - மக்களின் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தி வந்த நெடுந்தேர் - 
புதுப்பிக்கப் பெற்ற தேர் நிலைக்கு மங்கலகரமாக - வந்து சேர்ந்தது. 

Dr. B. ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் தேரோட்டத்தினை தரிசனம் செய்து அழகிய படங்களுடன் பதிவிட்டுள்ளார்கள்..

இணைப்பின் வழியே >>>  அழகிய படங்களைக் காண வேண்டுகின்றேன்.

ஸ்ரீ விஜயராமர் - காமாக்ஷியம்மன் - கிருஷ்ணன் கோயில்கள்
இந்த இனிய தருணத்தில் புதிய தேர் அமைவதற்கு உறுதுணையாக இருந்த அன்றைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கும் 
மற்றும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்..

நிலை நிறுத்தப்பட்ட திருத்தேரில் - எதிர்வரும் ஏப்ரல்/29 புதன் கிழமை
சித்திரைத் திருநாளின் பதினைந்தாம் திருநாளன்று அதிகாலையில்
ஸ்ரீ பிரஹந்நாயகி அம்பிகையும் ஸ்ரீ பிரஹதீஸ்வர ஸ்வாமியும் எழுந்தருள - நூறாண்டுகளுக்குப் பின் மகத்தான திருத்தேரோட்டம் நிகழும்.

அந்தத் திருக்காட்சியினையும் - 
கண் கொண்ட பயனாகக் கண்டு மகிழ 
நல்லருளை வேண்டுகின்றேன்..

நமசிவாயவே ஞானமும் கல்வியும்
நமசிவாயவே நானறி இச்சையும்
நமசிவாயவே நாநவின் றேத்துமே
நமசிவாயவே நன்னெறி காட்டுமே!..
-: திருநாவுக்கரசர் :-

திருச்சிற்றம்பலம்
* * *

18 கருத்துகள்:

  1. அபுதாபியில் இருந்து கொண்டே தஞ்சை தேரோட்டம் கண்டு களித்தேன் புகைப்படங்கள் அழகு நண்பரே காணொளியும் கண்டேன் வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தாங்களும் தேரோட்டத்தில் கலந்து கொண்டதற்கு மகிழ்ச்சி..

      நீக்கு
  2. தேர் வெள்ளோட்டத்தைப் பதிவினில் கண்டு மகிழ்ந்தேன் 29 ம் தேதி நேரடி ஒளிபரப்பில் காண விருப்பம் ஒளிபரப்புவார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      நேரடி ஒளிபரப்பு பற்றி ஏதும் அறிய முடியவில்லை..
      தாங்களும் தேரோட்டத்தில் கலந்து கொண்டதற்கு மகிழ்ச்சி.

      நீக்கு
  3. அருகில் இருந்தும் சென்று பார்க்க இயலவில்லை. தங்கள் பதிவின் வழி தான் பார்க்க வெண்டும் என்று இருந்துள்ளது. புகைப்படம், தங்கள் எழத்தின் நடை அத்துனையும் அருமை. வாழ்த்துக்கள்.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்களும் தேரோட்டத்தில் கலந்து கொண்டதற்கு மகிழ்ச்சி.

      நீக்கு
  4. உங்கள் பதிவின் மூலம் தேரோட்டத்தை நேரில் பார்த்த மாதிரி இருந்தது. படங்கள் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்களும் தேரோட்டத்தில் கலந்து கொண்டதற்கு மகிழ்ச்சி.

      நீக்கு
  5. தஞ்சையில் இருந்தும் பார்க்காத காட்சிகளை
    குவைத்தில் இருந்து காண வைத்துள்ளீர்கள்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்களும் தேரோட்டத்தில் கலந்து கொண்டதற்கு மகிழ்ச்சி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தாங்களும் தேரோட்டத்தில் கலந்து கொண்டதற்கு மகிழ்ச்சி.

      நீக்கு
  7. தங்கள் பதிவைப் படித்ததும் மறுபடியும் ஒரு சுற்று நான்கு வீதிகள் வழியாக தேருடன் சென்றுவந்ததுபோல இருந்தது. காலை 5.30 மணிக்குத் தேரடியில் அதிகக் கூட்டமில்லை. ஆனால் நேரம் ஆக ஆக கூட்டம் அதிகமாகிவிட்டது. பக்தர்களே தேரை இழுத்தனர். எவ்வித இயந்திரமும் பின்னிருந்து தள்ளவில்லை. வடத்தில் கயிறுக்கு பதிலாக நைலான் பயன்படுத்தப்பட்டிருந்தது. தேரில் இருந்த சிற்பங்கள் மனதில் நன்கு பதிந்துவிட்டன. எனது பதிவை இணைப்பாகத் தந்தமையறிந்து எனது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். தேரோட்டத்தில் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தாங்கள் வழங்கிய செய்திகளும் பயனுள்ளதாக இருந்தன.
      தேரோட்டத்தில் கலந்து கொண்டதற்கு மகிழ்ச்சி.

      நீக்கு
  8. திருத் தேரோட்டம் பற்றி காலையில் தான் டாக்டர் ஜம்புலிங்கம் ஐயாவின் பக்கத்தில் படித்தேன். இங்கேயும் மேலதிகத் தகவல்கள் படித்ததில் மகிழ்ச்சி....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தஞ்சை தேரோட்டத்தில் கலந்து கொண்டதற்கு மகிழ்ச்சி.

      நீக்கு
  9. இதைப் பற்றி இன்றுதான் திரு ஜம்புலிங்க ஐயா அவர்களின் தளத்தில் வாசித்துவிட்டு வந்தோம்....தாங்களும் பல தகவல்கள் கொடுத்துள்ளீர்கள். அறிந்து கொள்ள உதவியது. மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்களும் தேரோட்டத்தில் கலந்து கொண்டதற்கு மகிழ்ச்சி.

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..