எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்!..
அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!..
இன்று குடியரசு தினம்..
சாரட்வண்டியில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் (26/1/1950) |
விழுது விட்டுப் பரந்து படர்ந்திருக்கும் ஆலமரத்திற்கு நிகரானது - பாரதம்!..
மிருதுவான இளந்தளிர்களையும் உலர்ந்த சுள்ளிகளையும்
வறண்ட பட்டைகளையும் உடைய ஆலமரத்தைப் போலவே - பாரதமும்!..
ஆல மரத்தின் நிழலில் தான் எத்தனை எத்தனை அற்புதங்கள்!..
பசுந்தளிர்களின் ஊடாக பறந்து திரியும்
வண்ணத்துப் பூச்சிகளும் உண்டு!..
இருட்டுப் பொந்துகளுக்குள் பதுங்கிக் கிடந்து
விஷத்தினைக் கக்கும் கருநாகங்களும் உண்டு!..
கதிகலங்கக் கர்ஜிக்கும் சிங்கங்களுக்கிடையே தான்
கலைமான் மகிழ்ந்து - கன்றினை ஈன்று பிழைக்கின்றது!..
சுழித்தோடும் நீர்ப்பெருக்கின் ஊடாக - தானும் மிதந்து
கரை சேர்கின்ற சிற்றெறும்புகளைக் கண்டதில்லையா நீங்கள்!..
சோழ வளநாட்டின் கோழி - மதங்கொண்ட யானையின்
மத்தகத்தின் மீதேறி கொத்திக் குதறி விரட்டியடித்ததைப் போல,
தென்பாண்டிச் சீமையின் முயல் -
வெறி கொண்ட வேட்டை நாய்களை விரட்டியடித்ததைப் போல -
எளியோரும் வெற்றிக்கொடியினை ஏற்றிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்..
ஆனால், அது வெற்றிக் களிப்பில் இல்லை.வேதனையில்!. - என்பது நிதர்சனம்.
சர்வ நிச்சயமாக - வேதனைகள் தீரும் காலம் வந்து கொண்டிருக்கின்றது.
கௌதமபுத்தர் அன்பைப் போதித்த சாரநாத் நகரில் - மாமன்னர் அசோகர் அறத் தூண் ஒன்றை நாட்டினார்.
அதில் - நேர் பார்வைக்கு மூன்று சிங்கங்களும்
இருபத்து நான்கு ஆரக்கால்களை உடைய தர்ம சக்கரமும்
குதிரையும் காளையும் தெரிகின்றன.
இருந்தாலும் - திசைக்கு ஒன்றாக நான்கு சிங்கங்கள் விளங்குகின்றன.
அவற்றின் கீழ் - மேலும் மூன்று சக்கரங்களும் அவற்றின் ஊடாக யானையும் சிங்கமும்!..
குதிரை, காளை , சிங்கம், யானை - இந்தக் குறியீடுகள் எதைக் குறிக்கின்றன?..
குதிரை உற்சாகத்தையும்
காளை உழைப்பையும்
சிங்கம் தைரியத்தையும் பிரதிபலிக்கின்றன.
இவை மூன்றும் சேரும்போது விளைவதே மகத்துவம். மகோன்னதம்!..
அதுவே ராஜகம்பீரம் எனும் - யானை!..
தர்மத்தின் அடிப்படையில் இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகளாகி சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றன!..
இதுவே நமது தேசிய சின்னம். அரச முத்திரை.
இந்த அரச முத்திரையின் கீழ் விளங்கும் வாசகமே - வெற்றி முழக்கம்!..
சத்ய மேவ ஜயதே!..
வாய்மையே வெல்லும்!..
(முண்டக உபநிஷத்)
இது தான் ஆதார சுருதி!..
நமது தேசத்தின் சுவாசமே இதுதான்!.. அதனால் தான்,
வெளியிலிருந்து வந்த விஷக்கிருமிகள் வெருண்டோடிப் போயின!..
உடன் பிறந்த நோய்கள் உருக்குலைந்து ஒழிய இருக்கின்றன!..
நின்று விளங்கும்
பாரதம் என்றும் விளங்கும்!..
ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
களி படைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல நடையினாய் வா வா வா!..
இளைய பாரதத்தினாய் வா வா வா
எதிரிலா வலத்தினாய் வா வா வா
ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
உதய ஞாயிறொப்பவே வா வா வா
களையிழந்த நாட்டிலே முன்போலே
களைசிறக்க வந்தனை வா வா வா
விளையு மாண்பு யாவையும் பார்த்தன்போலே
விழியினால் விளக்குவாய் வா வா வா!..
வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
விநயம் நின்ற நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழுமை சேர்மு கத்தினாய் வா வா வா
கற்றலொன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதிய தியற்றுவாய் வா வா வா
ஒற்றுமைக்குள் உய்யவே வா வா வா
ஒருபெருஞ் செயல் செய்வாய் வா வா வா!..
இளைய பாரதத்தினாய் வா வா வா!..
எதிரிலா வலத்தினாய் வா வா வா!..
வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம் - அடி
மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்!..
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் -எங்கள்
பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்!..
மகாகவி பாரதியார்.
ஜய் ஹிந்த்!..
* * *
குடியரசுதின பதிவு மிக அருமை. பாரதியார் பாடல்களுடன் அருமை.
பதிலளிநீக்குபடங்கள் மிக அழகு.
அனைவருக்கும் குடியரசுதின நல் வாழ்த்துக்கள்.
ஜெய்ஹிந்த்!
அன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!..
இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் ஐயா...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!..
குடியரசுத் தினப் பகிர்வு தங்களின் நாட்டுப்பற்றைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு சுதந்திர நாளன்றும், குடியரசு தினத்தன்றும் எங்கள் வீட்டில் இந்திய தேசியக்கொடியைப் பறக்கவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
கருத்துரைக்கு மிக்க நன்றி..
இனிய குடியரசு நாள் நல்வாழ்த்துக்கள்!..
வெல்க பாரதம்! எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம். எனது இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
அன்பின் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்..
படிக்கப்படிக்க சிலிர்க்கிறது!! குடியரசுதின வாழ்த்துகள் அய்யா!
பதிலளிநீக்குஅன்பின் சகோதரி..
நீக்குதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!..
குடியரசுத் தினப் பகிர்வு அருமை ஐயா...
பதிலளிநீக்குபடங்கள் அழகு.
தங்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்கள்.
அன்பின் குமார்..
நீக்குதங்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்!..
தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..
நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குதங்களுக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்.
அன்பின் வெங்கட்..
நீக்குதங்களுக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
குடியரசு தின கவிதை பாலமகி பக்கங்களிலும் உண்டு. நேரம் கிடைக்கும் போது பார்ப்பது. நன்றி. நல்ல பகிர்வு. வாருங்கள்.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் முதல் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி..
கருத்துரைக்கு நன்றி..