வலைப்பதிவர்கள் ஆவலுடன் காத்துக் கிடந்த நாள் - 26.10.2014.
மதுரை மாநகர் - மாரியம்மன் தெப்பக்குளத்தின் மேல்கரையில் அமைந்துள்ள கீதா நடன கோபால நாயகி மந்திர் அரங்கத்தின் முன் -
சந்தோஷத் தோரணங்கள் செந்தமிழ்த்தென்றலில் ஆடிக் கொண்டிருக்கின்றன.
அவற்றின் ஊடாக - ஆதவனும் ஆவலுடன் எழுந்து வருகின்றான்.
என்ன காரணம்!..
பைந்தமிழ் வளர்த்த மதுரையம்பதியில் - வலைப் பதிவர் திருவிழா(2014)!..
தமிழ்த்தாயை வாழ்த்தி அவளுடைய நல்லாசிகளுடன்,
மூன்றாவது வலைப் பதிவர் சந்திப்பு திருவிழாவின் முற்பகல் நிகழ்ச்சிகள் அனைத்தும் காலை ஒன்பது மணியளவில் தொடங்குகின்றன.
அன்பின் திரு சங்கரலிங்கம் (உணவு உலகம்) அவர்கள் வரவேற்று உரை நிகழ்த்துகின்றார்.
அன்பின் திரு சீனா ஐயா (வலைச்சரம்) அவர்கள் விழாவினுக்குத் தலைமை தாங்குகின்றார்.
அன்பின் திரு ரமணி (தீதும் நன்றும்) அவர்கள் துணைத்தலைவராக இலங்க அன்பின் திரு மதுரை சரவணன் அவர்கள் முன்னிலை வகிக்கின்றார்.
தொடக்கமாக தொழில் நுட்ப பதிவர்கள் சிறப்பிக்கப்படுகின்றனர்.
அதனைத் தொடர்ந்து - அன்பின் வலைப் பதிவர்களின் இனிய அறிமுகம்.
முற்பகல் நிகழ்ச்சிகளின் நிறைவாக -
பேராசிரியர் தா.கு. சுப்ரமணியன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்துகின்றார்.
அதன்பின் இடைவேளை.
மதிய வேளையில் சுவை மிகுந்த சைவ உணவு!..
சுவையான மதிய உணவிற்குப் பின் சற்றே ஓய்வு!..
பிற்பகல் நிகழ்ச்சிகளின் தொடக்கமாக -
பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் சிறப்புரை.
அதன்பின் -
குடந்தை ஆர்.வி சரவணன் அவர்கள் எழுதி இயக்கிய சிலநொடி சிநேகம்
- எனும் குறும்படம் வெளியிடப்படுகின்றது.
தொடர்ந்து -
சகோதர வலைப்பதிவாளர்களின் படைப்புகள் வெளியிடப்படுகின்றன.
அன்புக்குரிய கரந்தை ஜெயக்குமார் அவர்களின்
கரந்தை மாமனிதர்கள் - எனும் நூல் வெளியிடப்படுகின்றது.
தொடரும் நிகழ்ச்சியில்,
அன்புக்குரிய வி.கிரேஸ் பிரதிபா (தேன்மதுரத் தமிழ்) அவர்களின்
துளிர் விடும் விதைகள் - எனும் நூலும்,
அன்புக்குரிய மு.கீதா (வேலு நாச்சியார்) அவர்களின்
ஒரு கோப்பை மனிதம் - எனும் நூலும்,
அன்புக்குரிய P.R.ஜெயராஜன் (சட்டப் பார்வை) அவர்களின்
நல்லா எழுதுங்க.. நல்லதையே எழுதுங்க..
- எனும் நூலும் வெளியிடப்படுகின்றன.
நிகழ்ச்சிகளின் நிறைவாக -
அன்புக்குரிய திண்டுக்கல் தனபாலன் அவர்களின் நன்றியுரை.
தேசிய கீதத்துடன் விழா நிறைவுறும் வேளையில் -
கதிரவன் கையசைத்து விடை பெற்றுக் கொள்கின்றான்.
மீண்டும் அடுத்த ஆண்டு பிறிதொரு இனிய வேளையில் சந்திப்போம்!.. - என ஆனந்த மிகுதியால் அன்புடன் கண்கள் கசிகின்றன.
வலைத்தள நட்புகளுடன் இணைந்திருக்கும் மனம் -

அந்தப் பொறுப்பினை -
அன்புக்குரிய சீனா ஐயா அவர்களுடன் திண்டுக்கல் தனபாலன், தமிழ்வாசி பிரகாஷ், தமிழன் கோவிந்தராஜ் ஆகியோர் இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டு முன்நிற்கின்றனர்.
பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் சிறப்புரை.
அதன்பின் -
குடந்தை ஆர்.வி சரவணன் அவர்கள் எழுதி இயக்கிய சிலநொடி சிநேகம்
- எனும் குறும்படம் வெளியிடப்படுகின்றது.
தொடர்ந்து -
சகோதர வலைப்பதிவாளர்களின் படைப்புகள் வெளியிடப்படுகின்றன.
அன்புக்குரிய கரந்தை ஜெயக்குமார் அவர்களின்
கரந்தை மாமனிதர்கள் - எனும் நூல் வெளியிடப்படுகின்றது.
தொடரும் நிகழ்ச்சியில்,
அன்புக்குரிய வி.கிரேஸ் பிரதிபா (தேன்மதுரத் தமிழ்) அவர்களின்
துளிர் விடும் விதைகள் - எனும் நூலும்,
அன்புக்குரிய மு.கீதா (வேலு நாச்சியார்) அவர்களின்
ஒரு கோப்பை மனிதம் - எனும் நூலும்,
அன்புக்குரிய P.R.ஜெயராஜன் (சட்டப் பார்வை) அவர்களின்
நல்லா எழுதுங்க.. நல்லதையே எழுதுங்க..
- எனும் நூலும் வெளியிடப்படுகின்றன.
நிகழ்ச்சிகளின் நிறைவாக -
அன்புக்குரிய திண்டுக்கல் தனபாலன் அவர்களின் நன்றியுரை.
தேசிய கீதத்துடன் விழா நிறைவுறும் வேளையில் -
கதிரவன் கையசைத்து விடை பெற்றுக் கொள்கின்றான்.
மீண்டும் அடுத்த ஆண்டு பிறிதொரு இனிய வேளையில் சந்திப்போம்!.. - என ஆனந்த மிகுதியால் அன்புடன் கண்கள் கசிகின்றன.
வலைப் பதிவர் சந்திப்பு நிகழும் நல்ல நாளில்
எனது அன்பு மகளுக்கு சிவகாசியில்
வளைகாப்பு வைபவம் நடக்கின்றது.
வளைகாப்பு வைபவம் நடக்கின்றது.
அங்கும் இங்குமாக சந்தோஷ அலைகள் கரை புரள்கின்றன.
வலைத்தள நட்புகளுடன் இணைந்திருக்கும் மனம் -
ஆனந்தத் தென்றல் தவழும் பூஞ்சோலை ஆகின்றது.
எங்கும் நலமே விளைய வேண்டுகின்றேன்!..
வலைப் பதிவர்கள் சந்திப்பு திருவிழா
இனிதே நிகழ நல்வாழ்த்துக்கள்!..
நட்பும் நலமும் வாழ்க!.. வளர்க!..
என அன்புடன் வாழ்த்துகின்றேன்!..
***
சகோதரருக்கு நன்றி! உங்கள் குடும்ப வைபவத்திற்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅன்பின் சகோதரருக்கு,
நீக்குதங்களின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
பைந்தமிழ் வளர்த்த மதுரையம்பதியில் - வலைப் பதிவர் திருவிழா(2014)!../
பதிலளிநீக்குவலைப் பதிவர் சந்திப்பு நிகழும் நல்ல நாளில்
தங்கள் அன்பு மகளுக்கு சிவகாசியில்
நடைபெறும் வளைகாப்பு வைபவம் சிறக்க
மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்..
அன்புடையீர்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
தங்களின் வாழ்த்துரைக்கு நன்றி..
ஓ! அதே நாளில் தங்கள் மகளுக்கு வளைகாப்பு வைபவமா!! வைபவம் சிறக்க எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! இறைவனிடம் பிரார்த்தனைகளுடன்!
பதிலளிநீக்குஅன்பின் துளசிதரன்..
நீக்குதங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
மனம் நிறைந்த வாழ்த்துரைக்கு மிக்க நன்றி..
தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து!
பதிலளிநீக்குhttp://eluththugal.blogspot.com/2014/10/blog-post_97.html
அன்புடையீர்..
நீக்குதங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
தங்கள் வாழ்த்துரைக்கு மிக்க நன்றி..
மகள் வளைக்காப்பு இனிதாக நடைபெற வாழ்த்துக்கள். உங்கள் அன்பு மகளுக்கு எங்கள் ஆசிகள்.
பதிலளிநீக்குவலைப்பதிவர் விழா நிகழ்ச்சி குறிப்புகளுக்கு நன்றி.
பதிவர் சந்திப்பு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
அன்புடையீர்..
நீக்குதங்களின் நல்லாசிகளுக்கு நன்றி.. மிக்க மகிழ்ச்சி..
வணக்கம் ஐயா!
பதிலளிநீக்குவலைப் பதிவர்கள் திருவிழா மிக விமரிசையாக நடக்கவுள்ளது - இத்தருணம் நடந்து கொண்டிருக்கும் என நினைக்கவே மகிழ்வாக இருக்கிறது!
மகளின் வளைக்காப்பும் இன்றா!-- மிக அருமை! ஐயா!
ஒன்றையும் காணக்கிட்டவில்லையே என எனக்கு
ஆதங்கம் மேலிடுகிறது....
அன்பு மகளுக்கும் வலைச்சர விழாவின் சிறப்பிற்கும்
என் இனிய நல் வாழ்த்துக்கள்!
அன்பின் சகோதரி..
நீக்குதங்களின் நல்வாழ்த்துக்களுக்கு நன்றி.. மிக்க மகிழ்ச்சி..
மகளின் வளைகாப்பு - மிகவும் சந்தோஷம். வாழ்த்துகள் உங்கள் மகளுக்கும்.
பதிலளிநீக்குசந்திப்பி சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கும் இந்நேரம்...... சென்ற முறை கலந்து கொண்டேன். இம்முறை முடியவில்லை - அடுத்த சந்திப்பிற்குக் காத்திருக்க வேண்டும்!
அன்பின் வெங்கட்..
நீக்குதங்களின் வாழ்த்துரைக்கு நன்றி.. மிக்க மகிழ்ச்சி..
அன்புள்ள
பதிலளிநீக்குவணக்கம். இரு மகிழ்வான நிகழ்வுகள்.
மதுரையில் வலைப்பதிவு (பதிவர்) விழா
சிவகாசியில் வளைப் பதிவு (வளைகாப்பு விழா)
வாழ்துக்கள்.
அன்புடையீர்..
நீக்குதங்களின் சொல்நயம் மனம் கவர்கின்றது.
தங்களின் வாழ்த்துரைக்கு நன்றி.. மிக்க மகிழ்ச்சி..
நீங்கள் சொல்லி இருப்பது போல் பதிவர் விழா சிறப்பாக நடைபெற்றது என்றாலும் இரண்டு நிகழ்ச்சி எதிர்பாராமல் நடந்தது...ஒன்று ,திரு தா .கு .சுப்ரமணியம் வர முடியாததால் திரு .முத்து நிலவன் சிறப்புரை அவர்களின் சிறப்புரை ஆற்றினார் .இரண்டு ,விழா நடைபெற நான் செய்த சேவைக்கு பொன்னாடை போர்த்தப் பட்டு கௌரவிக்கப் பட்டேன் !
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
தாங்கள் கௌரவிக்கப்பட்டதை அறிந்து மிகவும் சந்தோஷம்..
வாழ்க நலம்..