தை அமாவாசை
சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் துவக்கமான தை மாதம் மிகவும் புனிதமானது.
சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் துவக்கமான தை மாதம் மிகவும் புனிதமானது.
இறந்த பின்னும் - வாழ்வு தொடர்கிறது என்பது நமது சமய நம்பிக்கை.
எனவே - முன்னோர்கள் நற்கதி அடையவும், அவர்களின் நல்லாசி
வேண்டியும் சந்ததியினர் தர்ப்பணம் செய்கின்றனர்.
திதி நாட்களில் செய்யும் வழிபாட்டை - அவர்கள் ஏற்றுக் கொள்வதாக ஐதீகம்.
அமாவாசையில் - கடற்கரை, ஆறு, திருக்குளங்கள் இவற்றால் புகழ் பெற்ற திருத்தலங்களுக்குச் சென்று
முன்னோருக்குத் தர்ப்பணம் செய்வது வழக்கம்.
இறப்புக்கு பிறகும் வாழ்வு தொடர்கிறது என்பது நம்பிக்கையின் அடிப்படையில் - பிதுர் கடனை முறையாக சிரத்தையுடன் - அக்கறையுடன் செய்ய வேண்டும் என்பர்.
இதனை வைதீக முறைப்படி என்றில்லாமல் அவரவர் குல வழக்கப்படி செய்யலாம்.
முன்னோர்களுக்கு நாம் செய்யும் வழிபாட்டினை நம்மிடம் இருந்து பெற்று பிதுர்களிடம் வழங்குபவன் சூரியன். அதனால் தான் சூரியனுக்கு பிதுர்காரகன் என்று பெயர்.
பிற காக்கைகளையும் கரைந்து அழைத்த பின்னரே, காகம் உணவு உண்ணும். அப்படிப்பட்ட உயர்ந்த குணமுடைய காகத்திற்கு ஒருபிடி உணவிடுவதன் மூலம் தேவதைகளின் நல்லாசியைப் பெற முடியும்.
அமாவாசை நாட்களில் தீர்த்தக்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகனாகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீரை அள்ளி விடுவது) மிகுந்த நன்மை தரும்.
புண்ணிய தீர்த்தங்களில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் சூரியனின் அருளைப் பரிபூரணமாக பெறமுடியும்.
இக்கோயிலுக்குள் உள்ள மணிகர்ணிகை
தீர்த்தத்தில் நீராடினால் - கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவிரி -
புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம்.
இந்தக் கோவில் எதிரே உள்ள கடல், ஆதி சேது என்று அழைக்கப்படுகிறது.
ராமேஸ்வரத்துக்கு சமமானது இந்த கடல் தீர்த்தம். இதில் ஒரு முறை நீராடுவது
ராமேசுவரத்தில் நூறு தடவை நீராடுவதற்கு சமம் என்பர்.
தை அமாவாசை, ஆடி அமாவாசை , மகாளய அமாவாசைகளில் இங்கு நீராடுவர்.
வேதாரண்யத்திற்கு அருகில் உள்ள கோடியக்கரையும் சிறப்புடையது.
கன்னியாகுமரி, உவரி, ராமேஸ்வரம், தாமிரபரணிக் கரையில் பாபநாசம் மற்றும் காவிரியின் கரையில் - பவானி கூடுதுறை, ஸ்ரீரங்கம், திருவையாறு - இத்தலங்களில் எல்லாம் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
தை அமாவாசை தினத்தன்று - ராமேஸ்வரத்தில் ஸ்ரீதர்மசம்வர்த்தனி அம்பாள் சமேதரராக ஸ்ரீ ராமநாத ஸ்வாமி,
அக்னி தீர்த்தம் எனப்படும் கடற்கரைக்கு எழுந்தருளி புனித நீராடல்
நடைபெறும்.
திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதி அன்னை உடனுறை நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆண்டு தோறும் தை அமாவாசை தினத்தன்று
லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் திருக்கோயில் ஜோதி மயமாக விளங்கும்.
ஏரல் ஸ்ரீ சேர்மன் அருணாசலம் ஸ்வாமிகள்
ஏரல் ஸ்ரீ சேர்மன் அருணாசலம் ஸ்வாமிகள்
திருச்செந்தூர் அருகில் மேலப்புதுக்குடி எனும் கிராமத்தில் ராமசாமி நாடார் அவர்களுக்கும் சிவனணைந்தாள் அம்மாளுக்கும் இளைய மகனாக, 1880 - அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் அன்று - தோன்றியவர் அருணாசலம்.
வளரும் பருவத்திலேயே யோகம் தியானம் மந்திரம் - இவைகளை அறிந்து ஞானம் கூடிவரப் பெற்றார்.
அது முதற்கொண்டு ஏழை எளியோர் தம் துயர் தீர்ப்பதிலேயே அருணாசலத்தின் நாட்டம் சென்றது.
அவரால் நலம் பெற்றவர்கள் அவரை அன்புடன் அருணாசலம் ஸ்வாமிகள் என்றழைத்தனர்.
அது முதற்கொண்டு ஏழை எளியோர் தம் துயர் தீர்ப்பதிலேயே அருணாசலத்தின் நாட்டம் சென்றது.
அவரால் நலம் பெற்றவர்கள் அவரை அன்புடன் அருணாசலம் ஸ்வாமிகள் என்றழைத்தனர்.
அவருடைய புகழ் எங்கும் பரவியது. ஸ்வாமிகளின் தன்னலமற்ற சேவையினைப் பாராட்டி - அன்றைய ஆங்கிலேய அரசு,
1906 செப்டம்பர் ஐந்தாம் நாள் - ஏரல் நகரத்தின் சேர்மன் பதவியைத் தாமகவே முன் வந்து வழங்கியது.
1906 செப்டம்பர் ஐந்தாம் நாள் - ஏரல் நகரத்தின் சேர்மன் பதவியைத் தாமகவே முன் வந்து வழங்கியது.
அது முதற்கொண்டு - ஏரல் சேர்மன் ஸ்வாமிகள் என வழங்கப் பெற்றார்.
மக்கள் பணியினை மகேசன் பணியாகச் செய்து வந்தார் ஸ்வாமிகள். தான் பெற்ற அற்புத சக்தியால் - அற்றார்க்கும் அலந்தார்க்கும் அளப்பரிய உதவிகளைச் செய்து வந்த ஸ்வாமிகள் பிரம்மசர்யம் கொண்டு விளங்கினார்.
தனது வாழ்வு பூரணமாகும் நாளையும் அதன்பிறகு செய்ய வேண்டியதையும் தனது சகோதரரிடம் முன்னதாகவே தெரிவித்தார்.
சேர்மன் பதவியினை 1908 ஜூலை 27 அன்று திரும்ப ஒப்படைத்தார். தான் முன்பே கூறியிருந்தபடி - ஆடி அமாவாசை (28 ஜூலை 1908) அன்று நடுப்பகல் பன்னிரண்டு மணிக்கு பூரணம் எய்தினார்.
ஸ்வாமிகள் கூறியபடியே ஏரல் நகரின் தென்மேற்கில் தாமிரபரணி ஆற்றின் வடகரையில் நிற்கும் ஆலமரத்தின் அருகில் சமாதி கோயில் எழுப்பப்பட்டு -இஷ்ட மூர்த்தியான முருகன் பிரதிஷ்டை நிகழ்ந்தது.
ஸ்வாமிகள் கூறியபடியே ஏரல் நகரின் தென்மேற்கில் தாமிரபரணி ஆற்றின் வடகரையில் நிற்கும் ஆலமரத்தின் அருகில் சமாதி கோயில் எழுப்பப்பட்டு -இஷ்ட மூர்த்தியான முருகன் பிரதிஷ்டை நிகழ்ந்தது.
ஸ்வாமிகள் சித்தியடைந்த பின்னும் இன்று வரை - நம்பிவரும் பக்தர்களுக்கு கலங்கரை விளக்கமாக நின்று கை கொடுத்து காப்பாற்றி வருகின்றார்.
ஒவ்வொரு அமாவாசை தினமும் இங்கு சிறப்பு வழிபாடுகள் நிகழ்கின்றன.
எனினும் ஆடி மற்றும் தை மாத அமாவாசை தினங்களை அனுசரித்து பன்னிரண்டு நாட்கள் விசேஷ வைபவங்கள் நிகழ்கின்றன. சாதி சமயபேதம் இல்லாமல் லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து தரிசனம் செய்கின்றனர்.
இந்த ஆண்டு தை அமாவாசை தினத்தை ஒட்டி - ஜனவரி 21 அன்று திருக் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா இனிதே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
பத்தாம் நாளாகிய இன்று - மதியம் ஒரு மணிக்கு சிறப்பு அபிஷேகங்களும் மாலை விலாமிச்சை வேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலமும் இரவு சிவப்பு சாத்தி - கற்பகப் பொன் சப்பரத்தில் தரிசனம்.
பதினோராம் திருவிழா நாளை - வெள்ளிக்கிழமை (ஜன. 31)
அதிகாலை 5 மணிக்கு வெள்ளைசாத்தி தரிசனம். காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம் பிற்பகல் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம்.
மாலையில் ஏரல் முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாகசாந்தி. இரவு 10.30 மணிக்கு திருக்கோயில் மூலஸ்தானம் சேர்தல்.
பன்னிரண்டாம் நாள் திருவிழாவாக சனிக்கிழமை (பிப்.1) காலையில் தாமிர வருணி நதியில் சகல நோய் தீர்க்கும் திருத்துறை நீராடலும்,
பிற்பகல் 12.30 மணிக்கு மகாஅன்னதானமும் நிகழும்.
இரவில் ஆலிலை சயன மங்கள தரிசனம் நடக்கிறது.
திருவிழாவினை முன்னிட்டு தென் மாவட்டத்தின் முக்கிய நகரங்களிலிருந்து பேருந்துகள் இயங்குகின்றன.
திருவிழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் அ.ரா.க.கருத்தப்பாண்டியன் நாடார் அவர்கள் செய்து வருகின்றார்.

குருவே சரணம்.
சிவாய திருச்சிற்றம்பலம்
சிவாய திருச்சிற்றம்பலம்
ஏரல் ஸ்ரீ சேர்மன் அருணாசலம் ஸ்வாமிகள் பற்றிய தகவல் எல்லாம் அறியாதவை ஐயா... நன்றி...
பதிலளிநீக்குவிசேசமான நாளில் சிறப்பான பகிர்வு ஐயா...
வாழ்த்துக்கள்...
அன்பின் தனபாலன்..
நீக்குதங்களின் வரவும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...
அன்பின் தனபாலன்..
நீக்குஅனைத்தும் குருநாதர் திருவருள்.
அறிமுகம் செய்த அன்பின் மணிமாறன் அவர்களுக்கு நன்றி!..
தகவல் பகிர்ந்தளித்த தங்களுக்கும் நன்றி..
வாழ்வில் பொருள் காணவும் வாழ்வின் பொருள் காணவும்..............வாழ்வது மிகவும் அவசியம். சேர்மன் ஸ்வாமிகள் பற்றிய தகவல்கள் எல்லாம் தெரியாதவை. பகிர்வுக்குப் பாராட்டுக்கள். ;
பதிலளிநீக்குஅன்பின் ஐயா.. வணக்கம்.
பதிலளிநீக்குதங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன்..
வேதாரண்யம் கண்டிப்பாக ஒரு முறை சென்று வர வேண்டும் என்று நிச்சயத்துக் கொண்டேன். சேர்மன் சுவாமிகள் செய்தி அறியாதது.அறிய வைத்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்களின் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மிக்க நன்றி..
தை அமாவாசை தினத்தன்று சிறப்புப் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதாங்கள் வருகையும் இனிய கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி!..
சிறப்பான பகிர்வு. சேர்மன் ஸ்வாமிகள் பற்றிய தகவல்கள் நன்று.
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்
நீக்குதங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..
நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் மூலமாக தஞ்சையில் புத்தகத்திருவிழாவில் தங்களின் அறிமுகம் கிடைத்ததும், தொடர்ந்து, அவர் தந்த பகிர்வின் மூலமாகத் தங்களின் வலைப்பூவினைக் கண்டதும் மகிழ்ச்சியைத்தருகிறது. தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள். நட்பு தொடரட்டும்.
பதிலளிநீக்கு