சனி, டிசம்பர் 28, 2013

மார்கழிப் பனியில் - 13

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் 
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை.
திருப்பாசுரம் - 13.


புள்ளின் வாய்க்கீண்டானைப் பொல்லா அரக்கனைக் 
கிள்ளிக் களைந்தானக் கீர்த்திமை பாடிப்போய்ப் 
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார் 
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று 
புள்ளும் சிலம்பின காண் பாதரிக் கண்ணினாய் 
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே 
பள்ளிக் கிடத்தியோ.. பாவாய்.. நீ நன் நாளால் 
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்!.. 

ஆலய தரிசனம்

திருக்கண்ணபுரம்


மூலவர் - ஸ்ரீநீலமேகப்பெருமாள்.
உற்சவர் - ஸ்ரீ செளரிராஜப்பெருமாள்.
தாயார் - கண்ணபுர நாயகி (ஸ்ரீ தேவி, பூதேவி, ஆண்டாள், பத்மினி நாச்சியார்)
நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம்.

தீர்த்தம் - நித்ய புஷ்கரணி
விமானம் - உத்பலாவதகம்
ப்ரத்யக்ஷம் - கண்வ மஹரிஷி, கருடன், தண்டக மஹரிஷி.

மங்களாசாசனம் - பெரியாழ்வார், சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள். திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார்.

ஸ்வாமி வரத திருக்கரத்துடன் - ப்ரயோக சக்ர திருக்கோலம்.

பெருமானின் இருபுறமும் ஸ்ரீ தேவி பூதேவியர். இவருடன் இடப் புறம் ஆண்டாள். வலப்புறம் மீனவ குல இளவரசி பத்மினி நாச்சியார் - என, விளங்குகின்றனர்.

உற்சவ மூர்த்தி  - கன்யாதானம் பெறும் நிலையில் திருக்கோலம். திருமங்கை ஆழ்வாருக்கு திருமந்த்ர உபதேசம் செய்யப்பட்ட திருத்தலம்.

ஒருமுறை ஆலய தரிசனம் செய்ய வந்த அரசனுக்கு அளிக்கப்பட்ட மலர் மாலையில் நீண்ட மயிரிழை.  அரசன் அதைக் கண்டு திடுக்கிட்டான்.

தவறு  - திருக்கோயில் அர்ச்சகருடையது.  பெரும் சிக்கலில் சிக்கிக் கொண்ட அர்ச்சகர் - தன் பிழையைப் பொறுத்து அருளுமாறு பகவானை மனதார வேண்டிக் கொண்டார்.

அரசனிடம் பெருமாளுக்குக் கேசம் வளர்ந்திருப்பதை  - நாளைக்குக் காட்டுவதாக வாக்களித்தார்.

தன் பிழையை உணர்ந்த அர்ச்சகரைக் காப்பாற்ற எண்ணிய பெருமாள் - நீண்டு வளர்ந்திருக்கும் தன் கேசத்தைக் காட்டியருளினார்.

அதனால் - செளரிராஜன் எனத் திருப்பெயர்.

ஸ்ரீ ரங்கத்தில் வேண்டிக் கொண்ட விபீஷணனுக்கு - பெருமாள் தனது நடையழகை இத்திருத்தலத்தில் காட்டியருளியதாக ஐதீகம்.

மகரிஷிகளின் பிரார்த்தனைப்படி - பெருமாள் தன் சக்ராயுதத்துடன் - பிரயோக திருக்கோலத்தில் காட்சி நல்கும் திருத்தலம்.

ஸ்ரீசெளரிராஜப் பெருமாள் - மாசிமகத்தன்று தீர்த்தவாரிக்கென - 20 கி.மீ. தொலைவிலுள்ள திருமலை ராயன் பட்டினம் கடற்கரைக்கு எழுந்தருள்வார்.

ஏன் அவ்வளவு தூரம்?..

மாசி மகம் கொண்டாட -  மாமனார் வீட்டுக்கு அல்லவா செல்கின்றார்!..


முன்னொரு சமயம், தன்மீது பேரன்பு கொண்டு விளங்கிய பத்மினி எனும் மீனவகுலத் திருமகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டதால்!..

திருமருகல் ஸ்ரீ வரதராஜன் உடன் வர -
பல்லக்கில் புறப்படும் ஸ்ரீ செளரிராஜனை -

திருமலைராயன் பட்டினம் -
ஸ்ரீ வீழிவரதராஜன்ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசன், ஸ்ரீரகுநாதன்,

நிரவி ஸ்ரீகரிய மாணிக்கம்,
காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாணம் ,
கோவில்பத்து ஸ்ரீ கோதண்ட ராமன்

- ஆகிய அறுவரும் எதிர் கொண்டழைக்க,

Thanks - Dinamani
மீனவ கிராமமான பட்டினச்சேரி வழியே கடற்கரைக்குச் செல்கின்றனர்.

வழிநெடுக - மீனவ குல பெருமக்கள், மாப்பிள்ளை சாமி!.. மாப்பிள்ளை சாமி!.. என மகிழ்ந்து கொண்டாடி மகிழ்கின்றனர். பாரம்பரிய சம்பிரதாய முறைப்படி பட்டு வஸ்திரம் அணிவித்து தரிசனம் செய்கின்றனர்.

பின்னர் - அஷ்டாட்சரம் என - எட்டு பெருமாள் தரிசனத்துடன் கடற்கரையில் தீர்த்தவாரி கோலாகலமாக நிகழ்கின்றது.

மன்னுபுகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ!..


- என்று, குலசேகர ஆழ்வார் தாலாட்டு பாடி மகிழ்ந்தது  -
கண்ணபுரத்துக் கருமணியாகிய  - ஸ்ரீசெளரிராஜனுக்குத் தான்!..

ஸ்ரீசெளரிராஜனைத் தரிசிப்பதற்கு என்று - திருக்கண்ணபுரத்தைத் தேடி வரும் எவர்க்கும் வைகுந்தம் நிச்சயம் என்பதால் - இத் திருக்கோயிலில் சொர்க்க வாசல் கிடையாது.

திருக்கோயிலே சொர்க்கம்!..

அதனால் தானே - ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்,

டாக்டர் சீர்காழி S.கோவிந்தராஜன் அவர்கள் ஒரு பக்திப் பாடலை வழங்கினார்.


கண்ணபுரம் செல்வேன்.. கவலையெல்லாம் மறப்பேன்!.. 
கண்ணனின் சந்நிதியில் எந்நேரமும் இருப்பேன்!.. 

எட்டெழுத்தைச் சொல்லி கிட்ட நெருங்கிடுவேன்.. 
என்னைத் தெரிகின்றதா.. என்றே கேட்டிடுவேன்!.. 
கட்டி அணைத்தெனக்கு கை கொடுப்பான் கண்ணன்.. 
கற்பூரம் மணக்கின்ற கால் பிடித்தே உய்வேன்!.. 

கண்ணபுரம் செல்வேன்.. கவலையெல்லாம் மறப்பேன்!.. 
கண்ணனின் சந்நிதியில் எந்நேரமும் இருப்பேன்!..

கிருஷ்ணாரண்யம், கிருஷ்ணக்ஷேத்ரம் - எனப் பலவாறான திருப்பெயர்களை உடைய திருத்தலம்.

நாகப்பட்டினத்திலிருந்து  நன்னிலம் செல்லும் வழித்தடத்தில் - திருப்புகலூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவு!..

ஒரே நாளில் திருப்புகலூர் ஸ்ரீ அக்னீஸ்வர ஸ்வாமியையும் திருக்கண்ணபுரம் ஸ்ரீ செளரிராஜப்பெருமானையும் தரிசனம் செய்யலாம்.

திருப்புகலூரும் திருக்கண்ணபுரமும் - இன்னும் எளிமை மாறாத, பசுமை நிறைந்த இனிய கிராமங்கள்.

ஆங்கே - வீற்றிருந்து அருள் புரியும் இறைவனும் அப்படியே!.. 
என்றும் - என்றென்றும் மாறாதவராக!.. 

ஓம் ஹரி ஓம்!..



24 கருத்துகள்:

  1. திருப்புகலூர், திருக்கண்ணபுரம் பெருமை உணர்ந்தேன் ஐயா நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..

      நீக்கு
  2. சீர்காழி S.கோவிந்தராஜன் அவர்களின் பக்திப் பாடலோடு பகிர்வு மிகவும் அருமை ஐயா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      இனிய வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி..

      நீக்கு
  3. அருமையான பகிர்வு ஐயா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  4. ஸௌறி ராஜப் பெருமாள் தரிசனம் கிடைக்கப்பெற்றேன். தெரியாத தகவல்கள் பல தெரிந்தது.நன்றி பகிர்விற்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  5. சௌரி ராஜன் திருக்கதையும், சீர்காழி கோவிந்த ராஜன் பாடலும் அறிந்தேன் மிக அருமை.....! தொடர வாழ்த்துக்கள்......!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      இனிய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  6. பிறக்கப் போகும் புத்தாண்டில் எல்லா நலனும் வளமும் பெற்று
    வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றேன் ஐயா சிறப்பான இப்
    பகிர்வுக்கும் சேர்த்து !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
      இனிய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  7. அருமையான தலம் பற்றி இங்கே பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  8. ஆண்டாள் பாசுரமும், ஆலய தரிஸனமும் வழக்கம் போல அருமையோ அருமை. பாராட்டுக்கள். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      இனிய வருகையும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. மார்கழிப் பனியில் - 13
    திரு துரை செல்வ ராஜு அவர்களின் அருமையான பதிவு.
    எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி திரு துரை செல்வ ராஜு

    Feed Burner - பகுதி இல்லை உங்கள் பதிவில். எனது மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் பதிவு வெளியாகும் போது link அனுப்புங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. மிக அருமையான பாசுரத்துடன் சிறந்த தல வரலாறு!

    வழமைபோல் படங்களும் அருமை!
    சீர்காழி கோவிந்த ராஜன் பாடல் பதிவு மிகச் சிறப்பு ஐயா!

    வாழ்த்துக்கள்!

    * தங்களுக்கு மெயில் அனுப்பியுள்ளேன் ஐயா! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      இனிய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. திருக் கண்ணபுரம் என்றாலே எனக்கு மூத்த வலைப்பதிவர் சகோதரி ரஞ்சனி நாராயணன் எழுதிய பதிவுதான் முதலில் ஞாபகம் வரும். ஆழ்வார்களும் தமிழும் – இலக்கிய வரலாற்றில் மன்னுபுகழ் கோசலை போன்ற குலசேகர ஆழ்வார் பாடல்களை மறக்க முடியுமா? பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. நல்ல தகவல். காலையில் இனிய அருள்மழை.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்.
      தங்களுக்கு நல்வரவு..
      இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..