அவள் நிதர்சனமானவள். நித்ய சுமங்கலி
அண்ட ப்ரபஞ்சம் எங்கிலும் வியாபித்திருப்பவள். அப்படி இருந்தும் மக்களின் நல்வாழ்வுக்கென - மண்ணுலகில் மங்கலமாக மக்களுடன் கலந்திருப்பவள்.
இந்த பூமியே அவள் தான்!. ஒவ்வொரு மனிதனிடமும் கல்வியாக, பொன் பொருள் என வளர் செல்வமாக, நெஞ்சுரமாக, நல்வாழ்வில் விளையும் மகிழ்ச்சியாக, கூடிவாழ்வதில் மலரும் அன்பாக, நிறை வாழ்வில் புகழாக, இறை வாழ்வில் நித்ய சாந்தியாக - பொலிபவள் அவளே!..
அவள் - ஸ்ரீ மஹாலக்ஷ்மி.
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை.
வள்ளுவப் பெருமான் கூறுகின்றாரே - ஆக்கம் என்று!.. அதன் மறு பெயர் மஹாலக்ஷ்மி!.. ஊக்கமுடன் உழைப்பவர் தமக்கு உதவிக் கரம் நீட்டுபவள்.
மஹாலக்ஷ்மியை - பசுக்களுடன் வசிப்பவள் என்பர். உண்மைதான்!..
பசுக்களால் - இயற்கை மேலும் வளம் அடைகின்றது. அந்தப் பசுக்களை, தனதாக, உடையவனும் வளம் எய்துகின்றான்.
எனில், பசு மஹாலக்ஷ்மியின் மறு வடிவம் தானே!..
வீடும் நாடும் குறைபட்டுப் போனதற்கு மிக முக்கிய காரணம் - பசு வளர்ப்பு குன்றியது தான்!.. காலத்தின் கோலம் என்று சொல்லிக் கொண்டே, நாம் - நம் கண்களை விற்றுக் கொண்டிருக்கின்றோம்.
இனியாவது - மீண்டும் விழிப்பு வர வேண்டும். அதற்கு அவளையே சரணடைவோம்.
சர்வ மங்கலங்களையும் அள்ளித் தரும் அன்னை அவளின் விருப்பத்துக்குரிய எதுவுமே நம்மிடம் இல்லாமல் - நாம் அவளுடைய அருளைப் பெற்று உய்வது எவ்வாறு?..
இன்று நவராத்திரியின் ஆறாம் நாள்!..
மங்கல தீபமேற்றி அவளை வேண்டுவோம்!..
காஞ்சி பரமாச்சார்ய ஸ்வாமிகளின் அருள் வாக்கு!..
வாஸ்தவத்தில் இருக்கிறது ஒரு பராசக்திதான்!.. அவள்தான் எந்தெந்த சமயத்தில் எந்தெந்த விதமாக அநுக்ரஹம் செய்து பக்குவத்தைத் தரவேண்டுமோ - அப்படிச் செய்வதற்காக மஹாலக்ஷ்மியாக ஸ்ரஸ்வதியாக ஞானாம்பிகையாக வருகின்றாள். ஏதோ ஒரு ரூபத்தில் பக்தி என்று வத்து விட்டால் போதும். அப்புறம் நடக்க வேண்டியதை அவளே பார்த்துக் கொள்வாள்.
இந்தப் பக்திதான் நமக்குப் பெரிய செல்வம்.
அதுவே மஹாலக்ஷ்மி!
ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்துதி.
நிலைத்த செல்வங்களை பெறவும்
பெற்ற செல்வங்கள் நிலைக்கவும்
ஆதிலக்ஷ்மி நமஸ்தேஸ்து பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
யசோ தேஹி தனம் தேஹி ஸர்வகாமாம் ச தேஹிமே
சந்தானலக்ஷ்மி நமஸ்தேஸ்து புத்ர பெளத்ர ப்ரதாயினி
புத்ராந் தேஹி தனம் தேஹி ஸர்வகாமாம் ச தேஹிமே
வித்யாலக்ஷ்மி நமஸ்தேஸ்து ப்ரம்ஹ வித்யா ஸ்வரூபிணி
வித்யாம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வகாமாம் ச தேஹிமே
தனலக்ஷ்மி நமஸ்தேஸ்து சர்வ தாரித்ரிய நாசினி
தனம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வகாமாம் ச தேஹிமே
தான்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வாபரண பூஷிதே
தான்யம் தேஹி தனம் தேஹி ஸர்வகாமாம் ச தேஹிமே
மேதாலக்ஷ்மி நமஸ்தேஸ்து கலி கல்மஷ நாசினி
பிரஜ்ஞாம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வகாமாம் ச தேஹிமே
கஜலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வதேவ ஸ்வரூபிணி
அஸ்வாம் ச கோகுலம் தேஹி ஸர்வகாமாம் ச தேஹிமே
வீரலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வகார்ய ஜயப்ரதே
வீர்யம் தேஹி பலம் தேஹி ஸர்வகாமாம் ச தேஹிமே
மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே சதா
ஸர்வமங்கல மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே
சுபம் பவது கல்யாணி ஆயுராரோக்ய சம்பதாம்
மம சத்ரு விநாசாய தீபஜ்யோதி நமோஸ்துதே
அனைத்து மங்களங்களையும் மாங்கல்யத்தையும் அருள்பவளே! மங்கலியே! எல்லா செல்வங்களையும் அளிப்பவளே!
த்ரயம்பகியே .. நாராயணியே.. உன்னைச் சரணடைகின்றேன்!..
கல்யாணியே!.. சுபம் வழங்கியருள்க!..
ஆயுள் ஆரோக்கியத்துடன் குன்றாத
செல்வங்களை அருள்வாயாக!..
ஆயுள் ஆரோக்கியத்துடன் குன்றாத
செல்வங்களை அருள்வாயாக!..
என்னுள் இருக்கும் எதிரிகளை மாய்ப்பவளே!..
திருவே.. திருவிளக்கே!..
தீபஜோதியே.. தீபலக்ஷ்மியே!.. நல்வழிகாட்டுக..
உன்னைப் போற்றி வணங்குகின்றேன்!..
ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ..
ஆறாம் நாள் சிறப்புகள் அனைத்தும் அருமை ஐயா... நன்றிகள்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஅன்பின் திரு. தனபாலன்.. தங்களின் மேலான வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..
பதிலளிநீக்குஅழகான லக்ஷ்மிகரமான பதிவு. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்கு//செந்தாமரைச் செல்வி - அவள் நிதர்சனமானவள். நித்ய சுமங்கலி//
சந்தோஷம். வந்தனங்கள் !
அன்புடையீர்!.. தங்களின் வருகையும் அன்பின் கருத்துரையும் கண்டு சந்தோஷம்!.. மிக்க நன்றி!..
நீக்குசர்வ மங்கலங்களையும் அள்ளித் தரும் அன்னை அவளின் விருப்பத்துக்குரிய எதுவுமே நம்மிடம் இல்லாமல் - நாம் அவளுடைய அருளைப் பெற்று உய்யும் வழிவகைகளை காடியமைக்கு இனிய நன்றிகள்..!
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி!.. அன்னை மஹாலக்ஷ்மி அருள் பொழிய வேண்டுவோம்!..
பதிலளிநீக்கு