செவ்வாய், அக்டோபர் 01, 2013

வாழிய நின் புகழ்

இன்று நடிகர் திலகம் பத்மஸ்ரீ சிவாஜிகணேசன் அவர்களின் பிறந்தநாள்!..

தமிழ்த்தாய் உவகை கொண்ட நாட்களில்   - திரு. சிவாஜி கணேசன் அவர்கள் பிறந்த நாளும் ஒன்று!.. 


என் தந்தையின் பால்ய நண்பர் - திரு.சிவாஜி கணேசன் அவர்கள்!.. அதுவே எனக்குப் பெருமை!..

தஞ்சை ராமநாதன் செட்டியார் ஹாலில் நாடகங்கள் பலவற்றை நடத்திய பெருமை உடையவர் என் தந்தை. ஹார்மோனியம், தபேலா, சாக்ஸபோன், புல்புல் தாரா - முதலிய இசைக்கருவிகளை இசைப்பதில் வல்லவர் என் தந்தை. 


அவருக்கு -  திரு. சிவாஜி அவர்களுடனும் திரு. M.R.ராதா, திரு.T.R.மகாலிங்கம், திரு.சக்திகிருஷ்ணசாமி, நகைச்சுவை நடிகர் திரு. தங்கவேல் ஆகியோருடனும் நல்ல பழக்கம் இருந்திருக்கின்றது.  

திரு. M.R.ராதா அவர்கள் தஞ்சையில் ரத்தக்கண்ணீர் நாடகத்தை நடத்திய போது - அவருடன் பணியாற்றியதாக சொல்வார் என் தந்தை. 


அதைப் போலவே , நாடகக் கலைஞராக நடிகர் திலகம்  - தனித் தன்மையுடன் பிரகாசித்தபோது  அவருடன் நாடக அரங்குகளில் -

என் தந்தை இயங்கிய நாட்களை - சிறுபிள்ளைகளாகிய எங்களுடன் அடிக்கடி நினைவுகூரக் கேட்டிருக்கின்றோம்.


1955க்குப் பின் காலம் மாறிப்போக - காட்சிகளும் மாறி விட்டன. 

1994-ல் என் தந்தை கடைசியாக விரும்பி பார்த்த திரைப்படம்  - திருவிளையாடல்.



பழத்துக்காகக் கோபித்துக் கொண்டு நிற்கும் முருகனை - சாந்தப்படுத்தும் முயற்சியில் - ஒளவையார்,

ஆறுவது சினம் - கூறுவது தமிழ்
அறியாத சிறுவனா நீ!..

மாறுவது மனம் - சேருவது இனம்
தெரியாத முருகனா நீ!..

என்று கேட்கும் போது கண்களில் நீர் வழியக் கசிந்தவர் - என் தந்தை.

பின்  - அதே வருடம் அவரது மரணச் செய்தி அறிந்து - குவைத்தில் இருந்து தாயகம் திரும்பும் போது விமானத்தில் ஒளிபரப்பப்பட்ட திரைப்படம்  - தேவர் மகன்.

மழைச்சாரலில் நனைந்தபடி மகனுடன் கோபமும் ஆதங்கமுமாகப் பேசும் தந்தை!.. 
 

மகன் நடக்கும் போது சட்டென வழுக்கிவிட - பதறித் துடித்தபடி எழும் பாசமிகு தந்தை!..

அப்போது தாளாத சோகத்துடன் பீறிட்ட அழுகைக்கு - உரிய அன்பின் மகன் நான்!..


திரு. சிவாஜி அவர்களுடனாகிய நட்பினை - என்றும் பிள்ளைகளுடன் பேசிக் கொண்டிருப்பார் என் தந்தை!.. அவர் மூலமாகத்தான் நடிகர் திலகம் அவர்களின் நடிப்பில் ஈர்ப்பு ஏற்பட்டது எனக்கு!.. 


 

நடிகர் திலகம் அவர்கள் ஏற்று நடித்த பல்வேறு கதாபாத்திரங்களின் வாயிலாகத் தான் - அன்பு, பாசம், நட்பு,  தேசபக்தி, தெய்வபக்தி - என பல்வேறு பண்புகள் துளிர்த்தன.

ஹாலிவுட் நடிகர்களுடன்



மக்கள் திலகத்துடன்
சீர்காழி கோவிந்தராஜனுடன்
தஞ்சை கோயிலுக்கு யானை வழங்கிய போது
இந்தப் பதிவு ஒரு சிறு குறிப்புத்தான்!.. 

ஆயினும் சூட்சுமமாகத் திகழும் என் தந்தை மனம் மகிழ்வார்!..

நடிகர் திலகத்தின் பெயரும் புகழும் 
நிலைத்து வாழ்க!..

8 கருத்துகள்:

  1. மிகவும் அழகான நினைவலைகள். அற்புதமான படங்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. சூட்சுமமாகத் திகழும் தந்தை
    மனம் மகிழ மலரும் நினைவலைகள்..1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  3. ரசித்துக் கொண்டே இருக்கலாம்... சிறப்பித்தமைக்கு நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் திரு. தனபாலன்!.. நம்மையெல்லாம் அற்புதமான நடிப்பினால் வசப்படுத்திய நடிகர் திலகம் அவர்களை மறக்க முடியுமா!.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  4. வீரபாண்டியக் கட்டபொம்மனைப் பார்த்திருக்கிறீர்களா. ? கப்பலோட்டிய தமிழர் வ.உ. சி. யைப் பார்த்டிருக்கிறீர்களா.? பாதகமில்லை. அந்த பாத்திரங்களாக வளைய வந்த சிவாஜியின் படம் பாருங்கள். போதும். நடிப்பின் சிகரம் சிவாஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. சரித்திர நாயகர்களை - தம் நடிப்பினால் - நம் நெஞ்சில் பதிய வைத்தவர் நடிகர் திலகம் தானே!.. தங்களின் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..