வியாழன், செப்டம்பர் 05, 2013

ஆசிரியர் தினம்

எழுத்தறிவித்தவன் இறைவன் - என்பார் அதிவீரராம பாண்டியன்.



அத்தகைய ஆசிரியர்களால் அன்றோ - நாம் உயர்ந்தோம்!..

நம்மிடம் அவர்கள் எதிர்பார்த்தது எதுவும் இல்லை!..

நாம் கற்று விளங்க வேண்டும் என்பதே அவர்களின் சிந்தனையாக இருந்தது!..

நாம் தான் அவர்களை அண்டி நின்றோம்!..

நம்முள் அறிவெனும் தீபத்தை ஏற்றி வைத்தவர்கள் ஆசிரியர்களே!..

அந்த தீபத்தின் துணை கொண்டு தான்  நாம் பயணிக்கின்றோம்!..

என்நினைவில் நின்று ஒளிரும் என் ஆசான்கள் -

முதல் வகுப்பில்  -

 திரு. பட்டாபிராம ஐயர் அவர்கள்.

பின்னர் திரு. டேனியேல் அவர்கள். திரு.சந்தானகிருஷ்ண ஐயர் அவர்கள்.



ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை -

தலைமை ஆசிரியர் திரு. இரா. நாராயணஸ்வாமி அவர்கள்,
திரு. க. சின்னையன் அவர்கள், திரு. S.மணியன் அவர்கள் ,
திரு. ஜயராமன் அவர்கள், திரு. முத்துசாமி அவர்கள்,

உயர்நிலைப்பள்ளியில் -

திரு.R.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், திரு. A.சுப்ரமணியன் அவர்கள், திரு.K.T.பாலசுந்தரம் அவர்கள், திரு.S.R.கோவிந்தராஜூ அவர்கள்,
திரு.K.குஞ்சிதபாதம் அவர்கள், திரு. M.தங்கசாமி அவர்கள்,
திரு.S.பச்சைக்கனி அவர்கள், திரு.M.இன்பசேகரன் அவர்கள்,
திரு.V.சந்திரசேகரன் அவர்கள், திரு. தீனதயாளன் அவர்கள்,



கல்லூரியில் -

திரு. அருள் இளங்குமரன் அவர்கள்,  திரு.வின்சென்ட் அவர்கள் ,
திரு. விவேகானந்தன் அவர்கள், திரு. P.N.ராமசந்திரன் அவர்கள்,
திரு. சுகுமாரன் அவர்கள், திரு, M. பாலகிருஷ்ணன் அவர்கள்,

கிராம நிர்வாகம் பயின்றபோது - திரு.வை. முத்தையன் அவர்கள் ,

நில அளவை பயின்ற போது - திரு. சுப்ரமணியன் அவர்கள்,

ஐயப்ப தரிசனத்திற்கு வழிகாட்டிய திரு. சுப்ரமணிய குருசாமி  அவர்கள்,

டிரைவிங் பழகிய போது -
திரு. அடைக்கலம் அவர்கள், 
நைனா திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள்,

ஆகிய அனைவரையும் இந்த வேளையில் நினைவில் வைத்து போற்றுவதில் பெருமை கொள்கின்றேன்.


கணினி பழகியதில் - நண்பர் திரு. ஹரிதாஸ் அவர்களுக்கும், தமிழ் தட்டச்சு வரைவு வழங்கியதில் திரு. மார்ட்டின் அவர்களுக்கும், திரு. சரவணன் அவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு!..

கல்வி கரை இல!..


கற்றலும் கேட்டலும்  - இன்னும் தொடந்து கொண்டுதான் இருக்கின்றது!..

என்னை முதன் முதலாக பள்ளிக்கு அழைத்துச் சென்ற  அன்புக்குரிய சித்தப்பா திரு. ந. ஆறுமுகம், தாய் மாமன் திரு. சீ. தக்ஷிணாமூர்த்தி ஆகியோர் என் வணக்கத்துக்குரியவர்கள்!..

எல்லாவற்றுக்கும்  மேலாக -

பெற்று வளர்த்து பேணிக் காத்து, செந்தமிழ் கொண்டு பேசவும் 
சிறு விரல் பிடித்து எழுதவும் பழக்கிய என் பெற்றோர் - 

திரு.ந. துரைராஜன், திருமதி லீலாவதி -
அவர்களுடைய திருவடிகள் என் தலை மீது!..

குரு ப்ரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரஹ:
குரு சாட்ஷாத் பரப்ரம்மா தஸ்மை 
ஸ்ரீ குருவே நமஹ:

9 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருக.. தனபாலன்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  2. நம்முள் அறிவெனும் தீபத்தை ஏற்றிவைத்தவர்கள் ஆசிரியர்கள்.

    எத்துனை உண்மை ..

    குரு என்னும் சொல் சொல்வதும் அதுதான்.

    கு என்பதற்கு இருட்டு எனவும்
    ரு என்பதற்கு (அதை) நீக்குபவன் எனவும்

    பொருளாம்.

    ஆசிரியராக நானும் இருந்தேன் என்று நினைப்பதில் தான் எத்தனை பெருமை !!


    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.. உண்மை!..நம் வாழ்வின் அடித்தளம் ஆசிரியர்களே!.. தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!..ஐயா!..

      நீக்கு

  3. இந்த ஆசிரியர் தினத்தில், கற்பித்தோரை நினைவு கூறல் நன்று. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா!.. தங்களின் மேலான வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  4. தங்களின் அழைப்பிற்கு மிக்க நன்றி!..

    பதிலளிநீக்கு
  5. நம்முள் அறிவெனும் தீபத்தை ஏற்றி வைத்தவர்கள் ஆசிரியர்களே!..

    ஏற்றிவைத்த ஆசிரியர்களுக்கு
    ஏற்றமிகு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  6. நம்முடைய நல்வாழ்வின் அடித்தளம் ஆசிரியப் பெருமக்களால் அல்லவா அமைந்தது!. வருகை தந்து வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..