திங்கள், ஆகஸ்ட் 26, 2013

கண்ணன் பிறந்தான்


கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா!..
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறைந்ததம்மா!..

ஒருத்தி மகனாய் பிறந்தவனாம்!..
ஒருத்தி மகனாய் வளர்ந்தவனாம்!
உருவில் அழகாய் மலர்ந்தவனாம்!..
உயிரில் உயிராய் கலந்தவனாம்!.. 

ஆயர் பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப் போல்
மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ!..
மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ!..

குருவாயூருக்கு வாருங்கள்..
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்!..
ஒருவாய் சோறு ஊட்டும் தாய் முன்
உட்கார்ந்திருப்பதைப் பாருங்கள்!..


படிப்படியாய் மலையில் ஏறி
பக்தி செய்தால் துன்பம் எல்லாம்
பொடிப்பொடியாய் நொறுங்குதடி ராமாரி!..அட
படிப்பில்லாத ஆட்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்துக்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!..


பன்னீர் மலர் சொரியும் மேகங்களே
எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே!..
தென்கோடித் தென்றல் தரும் ராகங்களே
எங்கள் ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களே!.

ஏழைக் குசேலனுக்குத் தோழமை தாள் தந்து
வாழவைப்பேன் என்று கண்ணன் வந்தான்!..
வாழிய பாடுங்கள்.. வலம் வந்து தேடுங்கள்..
வந்து நிற்பான் அந்தக் கண்ணன் என்பான்!..

கேட்டதும் கொடுப்பவனே.. கிருஷ்ணா.. கிருஷ்ணா!..
கீதையின் நாயகனே. கிருஷ்ணா.. கிருஷ்ணா!..
நீயுள்ள சந்நிதியே.. கிருஷ்ணா.. கிருஷ்ணா!..
நெஞ்சுக்கு நிம்மதியே.. கிருஷ்ணா.. கிருஷ்ணா!..
 
நம்பினார் கெடுவதில்லை - நான்கு மறை தீர்ப்பு..
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு..
பசிக்கு விருந்தாவான்.. நோய்க்கு மருந்தாவான்..
பரந்தாமன் சந்நிதிக்கு வாராய் நெஞ்சே!..

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்!..

12 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. திரு. தனபாலன் தங்களின் வருகைக்கு மிக்க நன்றி!..

      நீக்கு
  2. சர்வம் கிருஷ்ணன் மாயம் . என்ன விந்தை !மயம் என்று மூன்று முறை டைப் அடித்தும் மாயம் என்றே வந்தது. சிரமப்படாமல் விட்டு விட்டேன்.கிருஷ்ணன் மாயம் செய்கிறவன் தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாயக் கண்ணனின் லீலைகளை யார் அறியக்கூடும்!..தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!..

      நீக்கு

  3. கண்ணன் பிறந்ததாகச் சொல்லப்படும் மதுரா சிறைக் கூடம் பார்த்திருக்கிறேன். சுற்று முற்றில் வாழும் மக்களின் நிலை பரிதாபமாக இருக்கிறதுதங்களை “ ப்ரிஜ்வாசி”கள் என்று பெருமைப் படுகிறார்கள். பதிவைப் படித்ததும் நினைவு எங்கோ சென்றுவிட்டது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா!.. ஏழ்மை நிலையில் இருந்தாலும் தம்மை பெருமையுடன் நினைத்துக் கொள்வதற்கும் ஒரு மனம் வேண்டும்!.. நன்றி ஐயா.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்!..

      நீக்கு
  4. படிப்படியாய் மலையில் ஏறி
    பக்தி செய்தால் துன்பம் எல்லாம்
    பொடிப்பொடியாய் நொறுங்குதடி ராமாரி!..அட
    படிப்பில்லாத ஆட்கள் கூட
    பாதத்திலே போய் விழுந்தால்
    வேதத்துக்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!..

    எத்தனை ஆழ்ந்த உள்ளர்த்தங்கள் நிறைந்த பாடல்..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  5. கவியரசர் கண்ணதாசனின் அற்புத வரிகள் அல்லவா!..அர்த்தத்துக்குப் பஞ்சமா!.. தங்களின் வருகைக்கும் அன்பான பாராட்டுரைக்கும் மிக்க நன்றி!..

    பதிலளிநீக்கு
  6. கண்ணனை நினைத்தவர் சொன்னது பலிக்கும் என்றார் கவியரசர்!!
    கவியரசைப் படிப்பவர் நினைத்தது நடக்கும் என்கிறேன் நான்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் முதல் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  7. கண்ணனை நினைத்தவர் சொன்னது பலிக்கும் என்றார் கவியரசர்!!
    கவியரசைப் படிப்பவர் நினைத்தது நடக்கும் என்கிறேன் நான்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் கூறுவது உண்மையே!..
      இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..