வெள்ளி, மே 24, 2013

கந்தன் பிறந்தான்

வைகாசி விசாகம்



அருவமும் உருவமும் ஆகி அநாதியாய் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகி
கருணைகூர் முகங்கள் ஆறும்கரங்கள் பன்னிரண்டுங் கொண்டு
ஒருதிருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய!....
                                                                                                               - கந்தபுராணம்.

உலகம் உய்வடையும் பொருட்டு திருமுருகன் உதித்த நாள் இன்று.  


சேல்பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட்டழிந்தது பூங்கொடியார் மனம் - மாமயிலோன்
வேல்பட்டழிந்தது சூரனும் வேலையும் வெற்பும் அவன்
கால்பட்டழிந்தது இங்கு என்தலைமேல் அயன் கையெழுத்தே!...
                                                                                                             - கந்தர் அலங்காரம்.

சேல் பட்டு அழிந்த வயற்பொழில் திருச்செந்தூர் வேலனின் கால் நம் தலை மேல் பட்டால் -  

நம் தலைமேல் நான்முகன் இட்ட கையெழுத்து அழிந்து போகும் என்று நமக்கு நல்லவழி காட்டுகின்றார் அருணகிரிநாதர்.

விழிக்குத் துணை திருமென்மலர் பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி 
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!...
                                                                                                       - கந்தர் அலங்காரம்.

விழிக்குத் துணையாகும்  திருமென்மலர்ப் பாதங்கள் நாம் செல்லும் வழிக்கும் துணையாகும்!... 

முருகனின் திருப்பாதங்கள் - நம்முடன் வழித்துணையாக வருவதால் - நாம் நல்ல வழியினில் ''தான்'' செல்லமுடியும்!...

எனவே -

நம்முள் - நன்மைகள் பெருகவும், தீமைகள் விலகவும் திருமுருகனின் திருவடிகளில் தலை வைத்து வணங்குவோம்!...

வேதனை எல்லாம் தூளாகும்!...
வேலும் மயிலும் துணையாகும்!...

4 கருத்துகள்:

  1. வேலும் மயிலும் துணை...!

    ஓம் சரவணபவ...

    பதிலளிநீக்கு
  2. ஓம் சரவணபவ...சொல்லச் சொல்ல இனிக்கும் மகா மந்திரம்!...

    பதிலளிநீக்கு
  3. அவன் கால்பட்டழிந்தது இங்கு என்தலைமேல் அயன் கையெழுத்தே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      முதல் வருகை தங்களுடையது. மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..