வியாழன், பிப்ரவரி 28, 2013

பிள்ளைத் தமிழ்

பகழிக் கூத்தர் அருளிய 
திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ் 
அந்த அமுதத்தில் இருந்து சிறப்பு மிக்க ஒரு பாடல்.

- : முத்தப்பருவம் : -

thiruchendur

கத்துந் தரங்கம் எடுத்தெறியக் 
கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள் 
கரையில் தவழ்ந்து வாலுகத்திற் 
கான்ற மணிக்கு விலையுண்டு !...

தத்துங் கரட விகடதடத் 
தந்திப் பிறைக்கூன் மருப்பில் விளை
தரளந்தனக்கு விலையுண்டு
தழைத்துக் கழுத்து வளைந்த மணிக்

கொத்துஞ் சுமந்த பசுஞ்சாலிக்
குளிர் முத்தினுக்கு விலையுண்டு
கொண்டல் தரு நித்திலந்தனக்கு
கூறுந்தர முண்டு - உன் கனிவாய்

முத்தம் தனக்கு விலையில்லை
முருகா முத்தம் தருகவே!...
முத்தம் சொரியும் கடலலைவாய்
முதல்வா! முத்தம் தருகவே!...

கடுமையான கருவினைத் தாங்கி வருத்தமுற்று, அலை முழங்கும் கடலினுள் இருந்து வெளியேறி மணற்பரப்பில் தவழ்ந்து வலம்புரிச்சங்குகள் ஈன்றெடுத்த முத்துக்களுக்கு மதிப்பும் விலையும் உண்டு.

எந்நேரமும் விகடக்கூத்தினைப் போல தலையினை ஆட்டிக்கொண்டிருக்கும் மாமதயானையின் - பிறைச்சந்திரனைப் போல வளைந்த தந்தத்தினுள்ளிருந்து விளையும்  முத்தினுக்கும் மதிப்பும் விலையும் உண்டு.

பசுமையாய் வளர்ந்து, கொத்து கொத்தாக விளைந்து, அடர்ந்து வளைந்த செழுங்கதிர்களில் நிறைந்த நெல்மணிகளுக்கும் மதிப்பும் விலையும் உண்டு.

நீருண்டு வந்த கார்மேகங்கள் - ''...நிலம் செழிக்க என்று...'' பொழியும் மழை முத்துக்களுக்கும் மதிப்பும் விலையும் உண்டு.

ஆனால் - 

கனிந்த இதழ்களால் நீ தரும் முத்தத்தினை - மதிப்பிடமுடியுமோ!...
அதற்கு ஒரு விலையும் உண்டோ?...

முத்துக்களை வாரி இறைக்கும் அலைவாயில் அமர்ந்த முருகா!...
செங்கனி எனச் சிவந்த இதழ்களால் முத்தம் தருக!...

முருகா!... முத்தம் தருக!...
திருச்செந்தில் முதல்வா!... முத்தம் தருக!...

* * *
மகப்பேறின்றி மனம் வாடும் தம்பதியினர், சஷ்டி விரதமிருந்து ஒருமித்த சிந்தையராகி,  இத்திருப்பாடலை நாளும் பாராயணம் செய்வராயின் வேண்டிய நலம் எய்தப் பெறுவர் என்பது திருக்குறிப்பு!...

வேலும் மயிலும் துணை!..
* * *

திங்கள், பிப்ரவரி 25, 2013

குவைத்

பிப்ரவரி 25 - தேசிய தினம் (National Day)

குவைத் மிகச் சிறிய நாடு.

எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு நாடுகளுள் எண்ணெய் வளத்தை ஆதாரமாகக் கொண்ட செல்வச் செழிப்பான நாடு.

இதன் தெற்கில் சவூதி அரேபியாவும் வடக்கிலும் மேற்கிலும் ஈராக்கும் கிழக்கில் அரபு வளைகுடாவும்  - எல்லைகளாக அமைந்துள்ளன.


குவைத் நகரம்  நாட்டின் தலைநகரமாகும்.

அரபு வளைகுடாவின் கரையில் அமைந்துள்ள குவைத் நகரிலேயே பாராளுமன்றமும் பெரும்பாலான அரசு அலுவலகங்களும் தனியார் நிறுவனங்களின் தலைமையகங்களும் அமைந்துள்ளன.


மேலும் மத்திய கிழக்கு நாடுகளின் கலாச்சார, பொருளாதார மையமாகவும்  குவைத் திகழ்கின்றது. நிறைய உயர் கல்விக்கூடங்கள் விளங்குகின்றன. 

2007 இல் இந்நாட்டின் மக்கள்தொகை 3.5 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் ஏறத்தாழ 2 மில்லியன் பேர் வெளிநாட்டினர்.

இஸ்லாம் தேசிய மதம். இந்நாட்டின்  குடிமக்கள், 75 - 80 சதவிகிதத்தினர் சன்னி பிரிவினர்.மற்றையோர் ஷியா பிரிவினர்.


இந்நாட்டில் வசிக்கும்  வெளிநாட்டினரில், 
கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை 3 - 4 லட்சம்.
இந்துக்கள் எண்ணிக்கை 3 லட்சம்.

பெளத்தர்கள் ஒருலட்சம் பேர்.
சீக்கியர்கள் பத்தாயிரம் பேர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

  
ஈத்-உல்-ஃபிதர் எனும் ரமலான் (நோன்புப் பெருநாள்) ஈத்-உல்-அத்ஹா எனும்  பக்ரீத் (தியாகப் பெருநாள்) ஆகியன பெருஞ்சிறப்புடன் அனுசரிக்கப்படுபவை.

தேசிய தினத்தையும் (National Day)
)தன்னாட்சியுரிமை நாளையும் ( Liberation Day ) 
கொண்டாடும் குவைத் வாழ்க!...


வாழும் மண்ணிற்கு நல்வாழ்த்துக்கள்!...

ஞாயிறு, பிப்ரவரி 24, 2013

மாசி மகம் - 02

மாசியில் சிறந்தது விளங்குவது மக நட்சத்திரம். அதன்படி மாசி மாத பௌர்ணமியில் மக நட்சத்தித்தில் மாசிமகம் எனும் புராதனமான திருவிழா கொண்டாடப்படுகின்றது.

திருக்கோயில்களில் திருவிழாக்களைத் கொண்டாடுவது முழுமதி திகழும் நன்னாளாகவே அமையும். மாசி மக நட்சத்திரத்தில் நடைபெறும் திருவிழா  மூர்த்தி, தலம், தீர்த்தம் என முக்கியத்துவம் அளிக்கப்படும் விழாவாக அமைந்துள்ளது. மனிதர்கள் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ளும் வழிகளில் மாசி மகப் புனித நீராடலும் ஒன்று.

தமிழகத்தில்  கும்பகோணம் எனப்படும் திருக்குடந்தையில் மகாமகத் திருக் குளத்தில் மாசி மகத்தன்று புனித நீராடுவது சிறப்பாகச் சொல்லப் பட்டிருக்கிறது.

பிரளய காலத்தில் இமயமலையிலிருந்து மிதந்து வந்த அமுத கும்பம்  இங்கே வந்து தங்கியது. நான்முகன் உயிர்களைப் படைக்க வேண்டி இறைவனைப் போற்றி வணங்கிய போது  -
தஞ்சையம்பதி
அருள்மிகு கும்பேஸ்வரன் திருக்கோயில்
சிவபெருமான் வேட வடிவம் தாங்கி வந்து, அமுதகும்பத்தை ஓர் அம்பினால் பிளந்தார். சிதைந்த கும்பத்திலிருந்த அமுதம் திரண்டு நின்ற இடமே "மகாமகத் திருக்குளம்''.

அதன் பின்னர் அமுதம் பரவிய மணலால் சிவலிங்கம் அமைத்து வணங்கிய நான்முகன் தன் படைப்பினைத் தொடங்கியதாவும்  குடந்தை தல புராணம் கூறுகின்றது.

அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயிலினுள் திருச்சுற்றில்  வேடவடிவம் தாங்கி ''கிராதமூர்த்தி'' எனத் திருப்பெயர் கொண்டு திகழும் சிவ மூர்த்தியைத் தரிசிக்கலாம். செவ்வாய்க்கிழமைகளில் மாலை வேளையில் கிராத மூர்த்தியைத் தொழுது வணங்க வல்வினை அகலும். பில்லி சூனிய தீவினைகள் தொலையும். ஆறாத கொடுநோய்கள் ஆறும்

பாரதத்தில் உள்ள அனைத்துப் புண்ணிய நதிகளும் தங்களுடைய பாவச் சுமைகளை இங்கு வந்து நீராடி போக்கிக்கொள்வதாக ஐதீகம். பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி முழுமதி நாளில் குரு சிம்மராசிக்குச் செல்லும் போது மகாமகப் பெருவிழாவாக கொண்டாடுகிறார்கள்.

இந்த மாசிமகப் பெருவிழா கடற்கரையை ஒட்டியுள்ள திருக்கோயில்களில்  உற்சவ மூர்த்திகள் கடற்கரையில் எழுந்தருளச் செய்யப்பட்டு, "தீர்த்தவாரி' நடைபெறுவதைத் தரிசிக்கலாம்.

மகாமகச் சிறப்பு கும்பகோணத்திற்கு ஏற்படுவதற்கு முன்பே "மாசி மக தீர்த்தவாரி' நடைபெற்ற சிறப்புடையது "திருநல்லூர்" என்பர் . "மகம் பிறந்தது நல்லூரில்'' என்ற பழமொழி தஞ்சை மாவட்டத்தில் பேச்சு வழக்கில் சொல்லப் படுவது உண்டு.

மகாபாரதத்தில்,  குந்திதேவி - தன் குழந்தையை ஆற்றில் விட்ட பாவம் நீங்க பரிகாரம் தேடியபோது - மாசி மகத்தன்று ஏழு கடலில் நீராடினால் பாவம் விலகும் என்றறியப்பட்டது. ஒரே நாளில் எப்படி ஏழு கடல்களில் நீராட முடியும் எனத் திகைத்தாள் குந்திதேவி. அப்போது, இறைவன் -

திருநல்லூர் திருக்கோயிலில் "பிரம தீர்த்தம்'' என்று வழங்கப்பெற்ற தீர்த்தத்தில் உப்பு, கரும்பு, தேன், நெய், தயிர், பால், சுத்த நீரின் சுவைகளை உடைய ஏழு கடல் தீர்த்தங்களை  வரவழைத்து அருளினார்.

குந்தியும் அதன்படி நீராடி பாபவிமோசனம் பெற்றாள் - என்பது தலவரலாறு.

அந்த பிரம தீர்த்தமே - சப்த சாகர தீர்த்தம் என வழங்கப்படுகின்றது.

இறைவன் கல்யாணசுந்தரேசுவரர். இறைவி கல்யாணசுந்தரி. சிவலிங்கத் திருமேனி சமயங்களில் நிறமாறுபாடுடையது. எனவே பஞ்சவர்ணேஸ்வரர் எனவும் வழங்குவர். ''சப்தசாகர தீர்த்தம்'' கோயிலுக்கு எதிரில் உள்ளது. திருக்கோயில் மாடக்கோயில் ஆகும். தல விருட்சம் வில்வம்.

அகத்தியருக்குத் திருமணக் கோலங்காட்டியருளிய தலங்களுள் இதுவும் ஒன்று. இத்திருக்கோயிலினுள் குடிகொண்டுள்ள ''நல்லூர் காளி'' எனப்படும் மகாகாளியம்மன் மிகவும் வரப்பிரசாதியானவள்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் தரிசித்து, பதிகம் பாடி மகிழ்ந்த தலம்.  திருநாவுக்கரசருக்கு  இறைவன் திருவடி சூட்டியருளிய திருத்தலம்.

திருநல்லூர், தஞ்சை-கும்பகோணம் நெடுஞ்சாலையில், பாபநாசத்தை அடுத்து வலங்கைமான் செல்லும் வழித்தடத்தில் உள்ளது.

தஞ்சையிலிருந்து வலங்கைமான் செல்லும் பேருந்துகள் திருநல்லூர் வழியாகச் செல்கின்றன. கும்பகோணத்திலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

மாசி மகத்தன்று  புனித நீர் நிலைகளில் நீராடி, திருக்கோயில்களைத் தரிசித்து - இயன்றவரை ஏழை எளியோர்க்கு அன்னதானம், வஸ்திரதானம் அளித்து மகத்தான புண்ணியத்தைத் தேடிக் கொள்வோம்.

திருச்சிற்றம்பலம்!...

மாசி மகம் - 01

பௌர்ணமி எனும் முழுமதி  நாள், இந்துக்களின் வாழ்வில் ஒரு முக்கியத் திருநாளாக மாதந்தோறும் கொண்டாடப்படுகின்றது. 

சித்திரை முதல் பங்குனி வரையில் பௌர்ணமி நாளும் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரமும் இணைந்து  பன்னிரண்டு விசேஷ நாட்களாக அமைந்துள்ளன.  இந்த நாட்களைத் திருக்கோயில்களில் விழாக்களாகச் சிறப்புடன் கொண்டாடி மகிழ்கின்றனர்.

மாசி முழுமதி நாளில் மக நட்சத்திரத்தில் நடைபெறும் திருவிழா  மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றினுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் விழாவாக அமைந்துள்ளது.

சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் முதலான நாட்கள் முருகனுக்குரிய சிறப்பான திருவிழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.

தட்சனின்  சாபத்தால் சந்திரனின் கலைகள் தேய்வுற்றன. இதனால் அழகிழந்த சந்திரன் சிவபெருமானிடம் அடைக்கலமானான். தேய்வுற்ற சந்திர கலையினைத் தன் தலையில் சூடி - சந்திரன் தேய்வதிலிருந்து காத்தருளினார். சிவபெருமானுக்கு - "சந்திரசேகரர்'' என்ற திருப்பெயரும் அமைந்தது.

சந்திரனே நமது மூளையையும் மனதையும் ஆட்சி செய்பவன். இதனாலேயே சந்திரன் "மதி''  எனப்படுகின்றான்

"முழுமதி நாளில் நமது மூளையின் இயக்கம் பூரண நிலையில் இருப்பதால் அன்றைய தினம் சந்திரனைப் போல சிவபெருமானை வழிபாடு செய்து  திருவருள் பெறலாம்...'' என்பதே இதன் அடிப்படை

மாசிமாத மகநட்சத்திர நன்னாளில் - திருத்தலங்களில், நீராடல் நிகழ்வதை திருஞானசம்பந்தர், தேவாரத்தில்  திருமயிலை - கபாலீச்சரத் திருப்பதிகத்தில் பாடியருளியுள்ளார்.


திருமயிலையில் சிவனடியாரான சிவநேசன் எனும் பெருவணிகரின் அன்பு மகள் பூம்பாவை நந்தவனத்தில் அரவு தீண்டி மாண்டு விடுகின்றாள். இவள் திருஞானசம்பந்தருக்கு மணம் முடித்துக் கொடுப்பது  என்று நிச்சயித்திருந்த சிவநேசப் பெருந்தகை நடந்ததை எண்ணி மனம் வருந்தினாலும்  எல்லாம் ஈசன் செயல் என -  திருஞானசம்பந்தப் பெருமானின் வரவை எதிர்நோக்கிக் கபாலீச்சரத்தில் கன்னி மாடத்தில்  - அப்பெண்ணின் அஸ்திக் கலசத்தைப் பாதுகாத்து வருகிறார்.

பின்னொரு நாளில் திருமயிலைக்கு வருகை தந்த சம்பந்தமூர்த்தி - இந்த விவரத்தினை  அறிந்து மனம் நெகிழ்ந்தார். 

பூம்பாவை உயிர் பெற்று எழ வேண்டி திருமயிலைக் கபாலீச்சரம் அமர்ந்த பெருமானிடம் முறையிட்டார். 

''மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம்  அமர்ந்தான்
அடலானேறு  ஊரும் அடிகள் அடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்...'' (2/47/6)

''பூம்பாவையே!... நிறைந்த மடல்களுடன் கூடிய செழுமையான தென்னை மரங்கள் மிகுந்து விளங்கும் மயிலையில், கபாலீச்சரம் என்னும் திருப் பெருங்கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், வலிமை நிறைந்த காளையின் மீது ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன்  - புகழ் மிக்க மாசிமக நாளில் கடலாட்டு கொள்வதையும்,  எம்பெருமான் ஆனந்த நடனம் ஆடுவதையும் கண்டு இன்புற்று அவனடி பரவிப் போற்றுதற்கு (மீண்டெழுந்து) வருவாயாக!..''

- என்று  திருப்பதிகம் பாடியருளினார். திருப்பதிகம் பாடுங்கால்,

மயிலை மாசிமக கடலாட்டுப் பெருவிழாவினையும் மற்ற திருநாட்களையும் சிறப்பித்துப் பாடினார் சம்பந்தர்.

திருப்பதிகத்தின் நிறைவில் உயிர்த்தெழுந்த பூம்பாவையைத் தன் மகளாக வாழ்த்தியருளினார் திருஞானசம்பந்தப் பெருமான்.


கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் மக்களின் பாவங்களைச் சுமக்கும் புண்ணியநதிகள் நீராடி - தங்கள் பாவங்களைத் தீர்த்துக்கொள்வதாக ஐதீகம். மகாமகக் குளத்தில் -  பித்ரு கடன் தீர்க்க எள்ளும் நீரும் வழங்குவதை மாசி மகத்தன்று  காணலாம்.

கும்பகோணத்தில் உள்ள சைவ - வைணவ ஆலயங்களிலிருந்து உற்சவத் திருமேனிகள் வீதியுலா எழுந்தருளி மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி நிகழும்.

சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் மாசி மகத்தன்று தீர்த்தவாரி உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.

திருச்செந்தூர், திருமறைக்காடு, நாகப்பட்டினம் - ஆகிய தலங்களிலும்  மாசிமகப் பெருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. 

இறைவனுக்கு மாசிமக விழாவில் "பெருந்திருஅமுது' செய்ய நிலம் அளித்த செய்திகள்  ராஜராஜசோழ மாமன்னனின் கல்வெட்டுகளில்  காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மக்கள் தமக்கும் தமது சந்ததியருக்கும் - நன்மைகளைப் பெருக்கிக் கொள்ளும் வழிகளில் மாசி மகப் புனித நீராடலும் ஒன்று. 

திருச்சிற்றம்பலம்!...

சனி, பிப்ரவரி 23, 2013

பிரதோஷம்

இந்த மாசி மாதத்தின் வளர்பிறை திரயோதசியும் தேய்பிறை திரயோதசியும்  முறையே - பிப்ரவரி-23 மற்றும் மார்ச்-9 ஆகிய நாட்களில் சனிக்கிழமையில் நிகழ்வுறுகின்றன.

பிரதோஷ வழிபாடு செய்யும் அன்பர்கள் இதனை மகாபிரதோஷம் என சிறப்பிக்கின்றனர்.


பிரதோஷ வேளை -  ஐந்து வகையாக குறிப்பிடப்படுகின்றது..

தினமும் மாலை வேளை -  நித்ய பிரதோஷம்.
வளர்பிறை (சுக்லபட்சம்) - பக்ஷ பிரதோஷம்.
தேய்பிறை (கிருஷ்ண பட்சம்)- மாத பிரதோஷம்.
தேய்பிறை திரயோதசி சனிக்கிழமை - மகா பிரதோஷம்.
சர்வமும் ஈசனிடம் ஒடுங்கும் காலம் - பிரளயப் பிரதோஷம்.

ிர்காகியாம் - நம் வாழ்வில் எத்ை எத்ையுற்றங்ைச் செய்ொண்டிருக்ின்றோம்.ே சம் ெரிந்ெரியாமோ சில ன்மைகையும் செய்ிடின்றோம். நன்மைகுக்குப் பன் கிடைப்பு ஒருபுறம் இருந்ாலும் -

இலுவானுற்றங்கள்  இறைவன் ன்னிியில் மன்னிக்கப்பும்  ேரம்ான் பிரதோஷை. பிரதோஷம் என்றால் ுற்றற்று என்பாகும். (ம்  - ுற்றம்). அதால்ன் - ு ச ஆசாரங்கில், ாலை நேரத்ில் கோயிலுக்குச் சென்று விபுவு என்பு வியுறத்ப் புகின்று. 

ிர ையில் முப்பத்ு முக்கோடி ேவர்கும் , பிரம்மா, விஷ்ணஆகியோரும் ெருமானை வங்குவாக ீகம். பிரதோஷேளையில் ிவெருமானுக்கும் அவு வாகாகிய நந்திம் பெருமானக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின். 


எண்ணெய், ிரியம், பால், தேன், தயிர், பன்னீர், இளநீர், திருநீறு, பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம்  இவைகால் அபிஷேகம் செய்தின் வில்வம்ற்றும் நறுமிக்க மலர்கள் மற்றும் வில்வ தளங்களால் அர்ச்சனை செய்வர். 

நந்திம்பெருமானக்கு விசேஷமாக அருகம்புல் மால சாற்றி அர்ச்சனை செய்வது வழக்கம். ிறைவாக -

நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின்ே  மூலவரான சிவலிங்கத்திற்கு  மதீபாராதனை நடக்கும்  அப்ப நந்தியின் இ கொம்புகளுக்கிடையே தீபாராதனைத் தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும்.

அனைத்தையும் கற்றிந்தவர் நந்தீஸ்வரர். எல்லாம் அறிந்திருந்தாலும் நந்தியம்பெருமான் மிகவும் அடக்கமானவர். சிவபெருமானின் எதிரில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும். பிரதோஷ வழிபாட்டில் உணர்த்தப்படுவது அன்பும் அடக்கமும் ஆகும். 


ந்ியம்பெருமான் ான் ைவ சத்ில் ற்குருவாக உணர்த்ப் ுபர். எம்பெருமான் அம்பிகையுடன் வீற்றிுந்ு உபேசிக்கும் அருட் கத்ுக் அவுடைய அனுமியுடன் - உல நலுக்காக ற்றுனிவர்குக்கும் சித்ர்குக்கும் உபேசித்ுள்பர்.

இந்த பிரதோஷ நாட்களில்  விரதம் அனுசரிப்பவர்களும் உள்ளனர்.

அதிகாலையில் எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட்டு, பகல் முழுவதும் உபவாசம் இருந்து  இயன்றவரை - தேவார திருமுறைகளைப் பயின்று பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று  வழிபடுதல் மரபாக உள்ளது.

பற்பல நன்மைகளை அளிப்பதால் பிரதோஷ வழிபாடுகளில் மக்கள் மிகுந்த நாட்டம் உடையவராக இருக்கின்றனர்.



சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருட காலம் இறைவழிபாடு செய்த ுண்ணியம், சனிப் பிரதோஷத்தன்று வழிபட்டால் ஐந்து வருட காலம் வழிபாடு செய்த புண்ணியமும் கிடைக்கும் என்பது காலங்காலமாக இருந்து வரும் நம்பிக்கை.


''சிவாய நம''  என்று சிந்தித்திருப்போர்க்கு 
அபாயம் ஒரு நாளும் இல்லை...''

திருச்சிற்றம்பலம்!..
* * * 

வெள்ளி, பிப்ரவரி 22, 2013

திருப்பதிகம் - 05

ஓம் நமசிவாய!..


திருநாவுக்கரசர் அருளிய தேவாரம்

திருத்தலம் 
திருஐயாறு 

இறைவன் - ஸ்ரீஐயாறப்பர்
அம்பிகை - ஸ்ரீஅறம் வளர்த்தநாயகி
தலவிருட்சம் - வில்வம்
தீர்த்தம் - காவிரி


-: தலப்பெருமை :-

வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி எனும் ஐந்து நதிகள் அணி செய்யும் திருத்தலம்.

நந்தியம்பெருமான் சிலாத முனிவருக்கு மகனாகப் பிறந்து திருமழபாடியில் திருமணம் கொள்ள  - மணமக்களை எதிர்கொண்டழைக்கும் சப்தஸ்தானம் எனும் ஏழூர் திருவிழா நடைபெறும் திருத்தலம்.

திருநாவுக்கரசருக்கு ஆடி அமாவாசை தினத்தன்று ஈசன் திருக்கயிலாயக் காட்சி நல்கிய திருத்தலம்.


திருநாவுக்கரசர் அருளிய தேவாரம்.
ஆறாம் திருமுறை - திருப்பதிக எண் - 38

ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம்  ஆனாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

நோக்கரிய திருமேனி உடையாய் நீயே
நோவாமே நோக்கருள வல்லாய் நீயே
காப்பரிய ஐம்புலனுங் காத்தாய் நீயே
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தாய் நீயே
ஆர்ப்பரிய மாநாக மார்த்தாய் நீயே
அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
தீர்ப்பரிய வல்வினைநோய் தீர்ப்பாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே
கடல்வரைவான் ஆகாயம் ஆனாய் நீயே
தனத்தகத்துக் தலைகலனாக் கொண்டாய் நீயே
சார்ந்தாரைத் தகைந்தாள வல்லாய் நீயே
மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே
மலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
சினத்திருந்த திருநீல கண்டன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

வானுற்ற மாமலைகள் ஆனாய் நீயே
வடகயிலை மன்னி யிருந்தாய் நீயே
ஊனுற்ற வொளிமழுவாட் படையாய் நீயே
ஒளிமதியோ டரவுபுனல் வைத்தாய் நீயே
ஆனுற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே
அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
தேனுற்ற சொல்மட வாள் பங்கன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.
 

பெண்ணாண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே
பெரியார்கட் கெல்லாம் பெரியாய் நீயே
உண்ணா வருநஞ்சம்  உண்டாய் நீயே
ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே
கண்ணா யுலகெலாங் காத்தாய் நீயே
கழற்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்ணார் மழுவாட் படையாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.
 

உற்றிருந்த உணர்வெலாம் ஆனாய் நீயே
உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே
கற்றிருந்த கலைஞான மானாய் நீயே
கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயே
பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
செற்றிருந்த திருநீல கண்டன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.
 

எல்லா உலகமும் ஆனாய் நீயே
ஏகம்ப மேவி யிருந்தாய் நீயே
நல்லாரை நன்மை அறிவாய் நீயே
ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே
புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வந் தருவாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.
 

ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய் நீயே
அளவில் பெருமை உடையாய் நீயே
பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே
போர்க்கோலங் கொண்டெயி லெய்தாய் நீயே
நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே
நண்ணி யடியென்மேல் வைத்தாய் நீயே
தேவ ரறியாத தேவன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

எண்டிசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே
ஏகம்ப மேய இறைவன் நீயே
வண்டிசைக்கும் நறுங்கொன்றைத் தாராய் நீயே
வாரா உலகருள வல்லாய் நீயே
தொண்டிசைத்துன் அடிபரவ நின்றாய் நீயே
தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்சிலைக்கோர் சரங்கூட்ட வல்லாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

விண்டார் புரமூன்று மெய்தாய் நீயே
விண்ணவர்க்கு மேலாகி நின்றாய் நீயே
கண்டாரைக் கொல்லுநஞ் சுண்டாய் நீயே
காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே
தொண்டா அடியேனை ஆண்டாய் நீயே
தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்டோள்விட் டெரியாடல் உகந்தாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

ஆரு மறியா இடத்தாய் நீயே
ஆகாயந் தேரூர வல்லாய் நீயே
பேரும் பெரிய இலங்கை வேந்தன்
பெரிய முடிபத் திறுத்தாய் நீயே
ஊரும் புரமூன்றும் அட்டாய் நீயே
ஒண்டா மரையானும் மாலுந் கூடித்
தேரும் அடியென்மேல் வைத்தாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.
 
  
திருச்சிற்றம்பம்!..
* * *

வியாழன், பிப்ரவரி 21, 2013

திருப்பதிகம் - 04

ஓம் நமசிவாய!..


திருத்தலம்
திருஅண்ணாமலை 

இறைவன்  - ஸ்ரீஅண்ணாமலையார்
அம்பிகை - ஸ்ரீஉண்ணாமுலையாள்
தலவிருட்சம் - மகிழ மரம்
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம் 

-: தலப்பெருமை :-

நினைக்க முக்தி தரும் திருத்தலம் - அண்ணாமலை.

பிரம்மனும் மஹாவிஷ்ணுவும் தம்முள் யார் பெரியவர் என தர்க்கம் செய்து நின்றபோது அவர்கள் நடுவில் ஈசன் அனல் உருவாக மூண்டெழுந்தான். 

அப்போது அந்த ஜோதியின் முடியினைக் காண்பதற்கு அன்ன வடிவாக பிரம்மனும் அடியினைக் காண்பதற்கு வராக வடிவாக ஹரியும் தேடித் திரிந்த திருத்தலம். 

அவர்கள் அறியும் பொருட்டே - அடிமுடி அறிய முடியாதபடி லிங்கோத்பவராக ஈசன் தோன்றியருளினன். 

இறைவன் மலை வடிவாக விளங்கும் திருத்தலம்.


திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
முதல் திருமுறை - திருப்பதிக எண் - 10

உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.

தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுகன்மிசை சிறுநுண்டுளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழி லண்ணாமலை யண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.

பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம்
சூலிம்மணி தரைமேனிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழி லண்ணாமலை யண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே.

உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்
எதிரும்பலி யுணலாகவு மெருதேறுவ தல்லால்
முதிருஞ்சடை யிளவெண்பிறை முடிமேல்கொள வடிமேல்
அதிருங்கழ லடிகட்கிடம் அண்ணாமலை யதுவே.

மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்
உரவஞ்சடை யுலவும்புன லுடனாவது மோரார்
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே.  

பெருகும்புன லண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார்பொடி யணிவாரது பருகிக்
கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி
உருகும்மன முடையார்தமக் குறுநோயடை யாவே.


கரிகாலன குடர்கொள்வன கழுதாடிய காட்டில்
நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள
எரியாடிய விறைவர்க்கிட மினவண்டிசை முரல
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே.


ஒளிறூபுலி யதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரன் மதவாரண வதனம்பிடித் துரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
அளறூபட வடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே.


விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவாவண மழலாகிய அண்ணாமலை யண்ணல்
தளராமுலை முறுவல்லுமை தலைவன்னடி சரணே.


வேர்வந்துற மாசூர்தர வெயினின்றுழல் வாரும்
மார்பம்புதை மலிசீவர மறையாவரு வாரும்
ஆரம்பர்த முரைகொள்ளன்மின் அண்ணாமலை யண்ணல்
கூர்வெண்மழுப் படையானல்ல கழல்சேர்வது குணமே.


வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்
அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுண் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே.
 
 
   
திருச்சிற்றம்பலம்
* * *

திருப்பதிகம் - 03

ஓம் நமசிவாய!..

 
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய தேவாரம்
(திருப்பாட்டு)
 
திருத்தலம்
திருவெண்ணெய்நல்லூர்

இறைவன் -  ஸ்ரீகிருபாபுரீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீமங்களாம்பிகை
தலவிருட்சம் - புன்னை
தீர்த்தம் - பெண்ணை நதி 
-: தலப்பெருமை :-

அம்பிகை வெண்ணெயினால் சிவலிங்கம் அமைத்து வழிபட்டதிருத்தலம்
அதனாலேயே  திருவெண்ணெய் நல்லூர் எனப் பெயர் பெற்றது.

திருமண பந்தத்தில் இருந்து - சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளை - இறைவன் தடுத்தாட்கொண்டு  - எம்மை பித்தனென்று பாடுவாய்!..  - என, அடியெடுத்துக் கொடுத்தருளினான்.

அதன்படி சுந்தரமூர்த்தி சுவாமிகள் - பித்தா பிறைசூடீ!.. எனத் திருப்பதிகம் பாடிய திருத்தலம்.

ஏழாம் திருமுறை - முதல் திருப்பதிகம்.

பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாய்இனி அல்லேனென லாமே. 1


நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப்
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன்
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆயாஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே. 2


மன்னேமற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைப்
பொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்தி
மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அன்னேஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே. 3


முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீ
கொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீ
செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அடிகேள்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே. 4


பாதம்பணி வார்கள்பெறு பண்டம்மது பணியா
யாதன்பொரு ளானேன்அறி வில்லேன்அரு ளாளா
தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆதீஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே. 5


தண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ
எண்ணார்புர மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய்
மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அண்ணாஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே. 6


ஊனாய்உயி ரானாய்உட லானாய்உல கானாய்
வானாய்நில னானாய்கட லானாய்மலை யானாய்
தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆனாய்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே. 7


ஏற்றார்புரம் மூன்றும்மெரி யுண்ணச்சிலை தொட்டாய்
தேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வான்நீர்
ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆற்றாய்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே. 8


மழுவாள்வலன் ஏந்தீமறை யோதீமங்கை பங்கா
தொழுவாரவர் துயராயின தீர்த்தல்லுன தொழிலே
செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அழகாஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே. 9


காரூர்புன லெய்திக்கரை கல்லித்திரைக் கையால்
பாரூர்புக ழெய்தித்திகழ் பன்மாமணி யுந்திச்
சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆரூரன்எம் பெருமாற்காள் அல்லேன்என லாமே. 10


திருச்சிற்றம்பலம்.
* * *