செவ்வாய், ஜனவரி 15, 2013

தஞ்சாவூர் நந்தி

தஞ்சை பெரியகோவிலில் 
மகர சங்கராந்திப் பெருவிழா. 


தஞ்சை பெரியகோவில் எனப்படும் அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயிலில்  மகர சங்கராந்திப் பெருவிழா நடைபெற்று வருகிறது.

இதையொட்டி 108 பசுக்களுக்கு கோ பூஜையும் திருக்கோயிலில் உள்ள நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.

தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் பெரியகோவிலுக்கு தமிழகத்தின் பிற பகுதிகளில் மட்டும் அல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த கோவிலில் உள்ள நந்தி மிகப்பெரிய வடிவில் உள்ளது. இந்த நந்தியம் பெருமானுக்கு மகர சங்கராந்திப் பெருவிழா ஆண்டு தோறும் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு 14.01.2013 திங்கள் மாலை 6 மணி அளவில் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் நிகழ்த்தப்பெற்று அதன்  பின்னர்  அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று (15.01.2013 - செவ்வாய்) மாட்டுப்பொங்கல் அன்று மாலையில் நந்திகேஸ்வரருக்கு பழங்கள், காய்கறிகள், மலர்கள் மற்றும் இனிப்பு வகைகளால் சிறப்பு அலங்காரம் செய்து சோடச உபசாரத்துடன் மகாதீபாராதனை நடைபெற்றது.

பின்னர் 108 பசு மாடுகளுக்கு கோபூஜைகளும் அதைத் தொடர்ந்து அன்னதானமும் சிறப்புற நடைபெற்றுள்ளது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்திருக்கின்றனர்.

திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..