சனி, டிசம்பர் 01, 2012

மகமாயி

ஆயி...மகமாயி...ஆயிரம் கண்ணுடையாள்!...
நீலி...திரிசூலி... நீங்காத பொட்டுடையாள்!...
சமயபுரத்தாளே!... சாம்பிராணி வாசகியே!...
சமயபுரத்தை விட்டு சடுதியிலே வாருமம்மா!...

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன்
மாயி... மகமாயி!...
மணி மந்திர சேகரியே!...
எங்க ஆயி... உமையானவளே!...
ஆத்தான மாரிமுத்தே!...
புன்னைநல்லூர் அருள்மிகு மாரியம்மன்
சிலம்பு பிறந்தம்மா சிவலிங்கப் பாறையிலே
பிரம்பு பிறந்தம்மா பிச்சாண்டி சன்னதியில்
உடுக்கை பிறந்தம்மா உத்திராட்ச பூமியிலே
பம்பை பிறந்தம்மா பளிங்கு மாமண்டபத்தினில்...

குழந்தை வருந்துவது கோயிலுக்குக் கேக்கலையோ!...
மைந்தன் வருந்துவது மாளிகைக்குக் கேக்கலையோ!...
ஏழைக் குழந்தையம்மா... எடுப்போர்க்குப் பாலனம்மா!...
உன் தாளைப் பணிந்து விட்டான்... தயவுடனே காருமம்மா!...

கத்தி போல் வேப்பிலையாம்...
காளியம்மன் மருத்துவமாம்...
ஈட்டி போல் வேப்பிலையாம்...
ஈஸ்வரியின் அருமருந்தாம்...
வேப்பிலையின் உள்ளிருக்கும்
வெற்றிதனை யாரறிவார்!...

ஆயா... மனமிரங்கு....என் ஆத்தா...மனமிரங்கு....
அம்மையே... நீ இரங்கு!....என்... அன்னையே... நீ இரங்கு!....

பாடல் இடம் பெற்ற திரைப்படம் - ஆதிபராசக்தி.

2 கருத்துகள்:

  1. அருமையான பாடல் பகிர்வு,

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..