நாடும் வீடும் நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
***
இன்று
எவராலும் தவிர்க்க முடியாத
ஒன்றாகியிருப்பது
முக கவசம்..
Face Mask
என்பதற்குச் சரியான
பொருள் அதுதானா!..
தெரியாது..
ஆனாலும் அனைவருக்கும்
இன்றியமையாத
பொருளாகி விட்டது..
இன்றைய நாளில்
எல்லா இடங்களிலும்
பலதரப்பட்ட முக கவசங்கள்
கிடைக்கின்றன..
அதிலும் மாறுபட்டதாக
நவீன தொழில் நுட்பத்துடன்
வடிவமைக்கப்பட்டுள்ள
முக கவசத்தைப் பற்றிய செய்தி..
( இந்த நவீன முக கவசம்
எப்போது பயன்பாட்டிற்கு
வரும் என்பது தெரியவில்லை)
இது தினமலர் நாளிதழின்
இணையப் பதிப்பில்
வெளியானதாகும்..
தினமலருக்கு நன்றி..
காற்றில் மிதக்கும் கொரோனா நுண்துகள்களைக் கண்டறியும் மாஸ்க்..
பாரிஸ்: நேச்சர் பயோடெக்னாலஜி என்கிற பிரபல விஞ்ஞான இதழில் வெளிவந்த ஒரு கட்டுரை தற்போது வைரலாகி வருகிறது.
பிரெஞ்சு விஞ்ஞானிகள் வித்தியாசமான தொழில் நுட்ப அம்சங்கள் நிறைந்த அதிநவீன முகக் கவசம் ஒன்றைத் தயாரித்துள்ளனர்.
தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அனைவரும் முகக்கவசம் அணிகின்றனர். துணியால் ஆன முகக் கவசங்கள் முதல் பிளாஸ்டிக் ஷீல்டு வரை பலவகையான முகக் கவசங்கள் தற்போது கிடைக்கின்றன.
வைபை, ப்ளூடூத், ஸ்மார்ட்போன் ஆகியவற்றை இணைக்கும்படியான தொழில் நுட்பத்துடன் கூடிய முகக் கவசங்களும் ஜப்பான் முதலான ஆசிய நாடுகளில் விற்பனையாகின்றன.
தற்போது பிரெஞ்சு விஞ்ஞானிகள் ஒருபடி மேலே போய் நோய்களைக் கண்டறியும் அதிநவீன கவசங்களை உருவாக்கியுள்ளனர். காற்றில் கொரோனா வைரஸ் உட்பட வேறு ஏதாவது வைரஸ் இருந்தால் அதனை இந்த முகக் கவசத்துடன் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார்கள் கண்டறிந்து உடனடியாக முகக் கவசத்தை அணிந்து இருப்பவருக்கு தகவல் அளிக்கின்றன..
இதனால் அவர்கள் அந்த இடத்தை விட்டு விரைவில் நகர்ந்து தப்பித்துக் கொள்ளலாம் என, - விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்..
பொதுவாக நாம் சுவாசிக்கும் காற்றில் பலவித வைரஸ்கள், பாக்டீரியாக்கள் உள்ளன.
நமது நாசி துவாரத்தில் உள்ள மியூகோஸ் மற்றும் ரோமங்கள் ஆகியன மூக்கின் வழியாக இக்கிருமிகள்
நுரையீரலுக்குள் நுழைவதைத் தடுக்கின்றன.
கொரோனா நுண்துகள்கள் வேகமாகப் பரவும் என்பதால் மக்கள் அணியும் முகக்கவசத்தில் சென்சார் பொருத்த பிரெஞ்சு விஞ்ஞானிகள் திட்டமிட்டு இதனை உருவாக்கியுள்ளனர்.
காற்றில் மிதக்கும் வைரஸ் துகள்கள் சென்சாரில் பட்டதுமே சென்சார் அந்த வைரஸ்களின் தன்மையை கண்டறிந்து விடும். இதற்கு பேட்டரி தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வாமையை ஏற்படுத்தும் ஏதாவதொன்று நமது சருமத்தின் மீது பட்டால் உடனே அந்த இடத்தில் எரிச்சல் , அரிப்பு ஏற்படுவதைப் போல இந்த சென்சார்கள் வேலை செய்யும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்..
புதிய உருவாக்கத்தினை
வாழ்த்தி வரவேற்போம்..
தயங்காமல்
தடுப்பு ஊசி எடுத்துக்
கொள்வதுடன்
இனி வரும் நாட்களிலும்
சமூக இடைவெளியுடன்
சுகாதார வழிமுறைகளைப் பேணி
இப்பூவுலகம் மீண்டும் தழைப்பதற்கு உறுதுணையாய்
இருப்போம்...
***
வையகம் வாழ்க
வாழ்க நலமுடன்..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***








