வெள்ளி, அக்டோபர் 16, 2026

தமிழமுது


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி
 வெள்ளிக்கிழமை

திருநாவுக்கரசர் அருளிச்செய்த தேவாரம்


தலம் மேற்றளி
காஞ்சிபுரம்

செல்வியைப் பாகங் கொண்டார் 
  சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணி யோடு 
  மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரையி லாத 
  காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார் 
  இலங்குமேற் றளிய னாரே.. 4/43/8


பார்வதி பங்கராய் , முருகனை மகனாகக் கொண்டவராய் மல்லிகை மாலைகளுடன் கொன்றை மலர்களையும் முடி  சூடி
 
சூரியன் விளக்கமுற அவனொளிக்கு உள்ளொளியாய் - கல்வியில் சிறந்த  காஞ்சி மாநகரிலே , மேற்றளியனாராக பெருமான்  விளங்குகின்றார்...

ஓம் நம சிவாய
***

4 கருத்துகள்:

  1. காஞ்சி ஏகாம்பரேஸ்வரா..  எமை யாவரையும் காப்பாய்.  ஓம் நமச்சிவாய.

    பதிலளிநீக்கு
  2. ஓம் சிவாய நமக.

    மேற்றளி இறைவா போற்றி. வணங்கி நிற்கின்றோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..