செவ்வாய், அக்டோபர் 06, 2026

அவனருள்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி
 செவ்வாய்க்கிழமை


புரட்டாசி வியாழன்று அதிகாலை தஞ்சையில் புறப்பட்ட நாங்கள் மூன்றாம் கிழமை காலையில்  ஸ்ரீ விட்டல் நாதனின் தரிசனம் இனிதே கண்டோம்..

அவனருளால் அவன் தாள் வணங்கி நின்றோம்... 

மதியத்தில்  அக்கல்கோட் மகானின் அதிஷ்டான தரிசனம்.. 

மூன்று மணியளவில் சோலாப்பூரில் இருந்து 46 கிமீ தொலைவில் உள்ள சத்ரபதி சிவாஜிக்கு வீரவாள் வழங்கிய துளஜாபூர் ஸ்ரீ பவானி அன்னை தரிசனம்...

இரவு ஏழு மணியளவில் சோலாப்பூர் ஸ்ரீ சித்தேஸ்வரர் தரிசனம்.. 

அங்கேயே அன்ன ப்ரசாதம்...

இரவு ஒன்பதரை மணியளவில் சோலாப்பூரில் புறப்பட்டு ஞாயிறு இரவு நல்லபடியாக இல்லம் வந்து சேர்ந்தோம்...

ஓம் ஹரி ஓம்

விட்டல விட்டல பாண்டுரங்க...
விட்டல விட்டல பாண்டுரங்க..
***

10 கருத்துகள்:

  1. பாண்டுரங்கன் தரிசனம் நல்லபடியாக கிடைத்து ஊர் வந்து சேர்ந்த விவரத்திற்கு மகிழ்ச்சி.
    விட்டல விட்டல பாண்டுரங்க
    விட்டல விட்டல பாண்டுரங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்தும் அவன் செயல்...

      விட்டல விட்டல
      விட்டல விட்டல

      நீக்கு
  2. இறைவன் அருளால் இனிதான தரிசனங்கள்.. வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்தும் அவன் அருள்.....

      விட்டல விட்டல
      விட்டல விட்டல

      நீக்கு
  3. விட்டல நாதனின் தரிசனம் நிறைவாக இருந்தது மன நிறைவாக இருக்கும். நாமும் வணங்கிக் கொண்டோம்.

    பவானி அன்னை, சித்தேஸ்வரர் தரிசன பாக்கியங்களும் கிடைத்துள்ளன மகிழ்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. மனம் நிறைவாக இருக்கும்...

      உண்மை தான்..

      அனைத்தும் அவன் அருள்.....
      விட்டல விட்டல
      விட்டல விட்டல

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    "அவன்" அருளால், தாங்கள் விட்டல நாராயணனின் அருமையான தரிசனம் கண்டு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. பிரயாணங்களை நல்லபடியாக நடத்தி தந்து அழைத்து சென்று விட்டு பத்திரமாக இல்லம் வந்து சேர்த்த அவனருளுக்கு மிக்க நன்றி.. நானும் விட்டலனை தரிசித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்தும் அவன் அருள்.....
      விட்டல விட்டல
      விட்டல விட்டல

      நீக்கு
  5. இன்னும் பண்டரீபுரம் போனதில்லை. போகணும் என சின்ன வயதிலிருந்தே ஆசை, ஶ்ரீமெஆ பக்த விஜயம் புத்தகம் படித்திருந்ததால்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் தரிசனம் கிடைக்கும்...

      அனைத்தும் அவன் அருள்.....
      விட்டல விட்டல
      விட்டல விட்டல

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..