ஞாயிறு, மே 17, 2026

சப்த ஸ்தானம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 ஞாயிற்றுக்கிழமை


இரு வாரங்களுக்கு முன்பு திரு ஐயாறு ஏழூர் பல்லக்கு விழா தொடர்பான பதிவில் ஏனைய தலங்களைப் பற்றி ஏதும் சொல்லவில்லை.. 

மனதிற்கு குறையாக இருந்தது...

அதற்கென இப்பதிவு... படங்கள் சென்ற ஆண்டில் எடுக்கப்பட்டவை...


திரு ஐயாற்றில் சித்திரைத் திருவிழா நிறைவு பெற்றதும்

சித்ரா பௌர்ணமிக்கு அடுத்த நாள் ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகி எழுந்தருளியுள்ள
கண்ணாடிப் பல்லக்கும்

நந்தீசன் சுயசாம்பிகை எழுந்தருளியுள்ள
வெட்டி வேர் பல்லக்கும் திருக்கோயிலில் இருந்து அதிகாலை ஆறு மணிக்குப் புறப்பட்டு நகர் வலம் வந்த பின் திருப்பழனம் செல்கின்றன...



அங்கே
ஆபத்சகாயேஸ்வரர்
பெரியநாயகி அம்பாள்  
எதிர்கொள்வர்.. வரவேற்பிற்குப் பிறகு மூன்று பல்லக்குகளும்  அங்கிருந்து காவிரி குடமுருட்டி  ஆறுகளைக் கடந்து திருச்சோற்றுத்துறைக்கு செல்கின்றன..

அங்கே
ஓதவனேசர் அன்னபூர்ணி எதிர் கொண்டு வரவேற்க நான்கு பல்லக்குகளும்  திரு வேதிகுடிக்குச் செல்லும்..

அங்கே
வேதபுரீஸ்வரர் மங்கையர்க்கரசி அம்பாள் எதிர் கொண்டு வரவேற்க ஐந்து பல்லக்குகளும் அங்கிருந்து
 திருக்கண்டியூருக்கு வருகின்றன

இங்கே
வீரட்டானேஸ்வரர்
மங்களநாயகி அம்பாள் எதிர் கொண்டு வரவேற்க ஆறு பல்லக்குகளும்  திருப்பூந்துருத்திக்கு வருகின்றன

இங்கு
புஷ்பவனேஸ்வரர்
சௌந்தரநாயகி அம்பாள் எதிர் கொண்டு வரவேற்க ஏழு பல்லக்குகளும்  அங்கிருந்து
திருநெய்த்தானம் எனப்படும் தில்லைஸ்தானத்திற்கு செல்கின்றன..

தில்லைஸ்தானத்தில்
நெய்யாடியப்பர் பாலாம்பிகை எதிர் கொண்டு வரவேற்க எட்டு பல்லக்குகளும்  குடமுருட்டி, காவிரி ஆறு களைக் கடந்து திரு ஐயாற்றுக்கு வருகின்றன..

திரு ஐயாற்றில் கோலாகல கொண்டாட்டம்...  பதுமை மாலையிட்ட பின் மகா ஆரத்திக்குப் பின் பல்லக்குகள் அந்தந்த கோயில்களுக்குத் திரும்புகின்றன...

திரு நெய்த்தானம் திரு ஐயாறு திருப்பழனம் மூன்று தலங்களும் காவிரியின்  வடகரை.. ஏனைய நான்கும் காவிரியின்  தென்கரைத் தலங்கள்...


ஒவ்வொரு ஊரிலும் வரவேற்பு நிகழ்வுக்கும் பல்லக்குகளை  ஏற்றி இறக்குவதற்கும் நேரம் ஆனாலும் ஈசன் அருளால்
இரண்டு நாட்களில்  ஏழு ஊர்களைச் சுற்றி விட்டு ( ஏறத்தாழ 21 கிமீ)
சப்த ஸ்தான விழா நிறைவிற்கு வருகின்றது..

ஓம் நம சிவாய
***

7 கருத்துகள்:

  1. சப்த ஸ்தான விழா ஒழுங்கு முறை ஏழூர் பல்லக்கு உலா வரும் காட்சிகளை படங்களுடன் விரிவாக விளக்கி தந்துள்ளீர்கள்.

    ஓம் ஐயாறப்பா சரணம்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. ஏழூர் பல்லக்குக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஊரிலிருக்கும் சிவாலயத்திற்கு முறைப்படி வரிசையாக வருவதும், அங்கிருக்கும் ஈசனும், அம்மையும் வரவேற்று, மற்ற இறை பல்லக்குகளுடன் ஒன்று சேர்ந்து திருவையாறு ஸ்தலத்தில் இவ்விழா முறைப்படி நினைவுறுத்தும், காண கண் கோடி வேண்டும். நீங்கள் விபரமாக சொன்னதிலேயே விழாவில் கலந்து கொண்ட நிறைவு ஏற்பட்டது. நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். முன்பு உங்கள் பதிவில்தான் இவ்விழாவின் சிறப்பையும் படித்துள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி. ஓம் சிவாய நமஃ. 🙏

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் இன்னும் வரவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்...

      மகிழ்ச்சி
      நன்றியம்மா...

      நீக்கு
    2. ஓரிரு நாட்கள் இப்படி தாமதமாகி விடுகிறது. மன்னிக்கவும். சில பதிவுகளுக்கு சூழ்நிலைகளினால் வராமலேயும் இருந்துள்ளேன். அதற்காகவும் மன்னிக்கவும். ஆனால் உங்கள் பதிவுகளை தவறாமல் படித்து விடுவேன். நிறைய நல்ல கருத்துள்ள பதிவுகள் தங்களுடையது. என்றும் விடாமல் எழுதி வாருங்கள். இறைவன் அருள் தங்களுக்கு எப்போதும் உண்டு. வாழ்த்துகள். நன்றி சகோதரரே. 🙏.

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..