வெள்ளி, மே 08, 2026

திருப்புகழ்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
 வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
கதிர்காமம்


தனதனா தத்த தனதனா தத்த
     தனதனா தத்த ... தனதான 

மருவறா வெற்றி மலர்தொடா விற்கை
     வலிசெயா நிற்கு ... மதனாலும்

மதில்கள்தா வுற்ற கலைபடா வட்ட
     மதிசுடா நிற்கு ... மதனாலும்

இருகணால் முத்த முதிரயா மத்தி
     னிரவினால் நித்த ... மெலியாதே

இடருறா மெத்த மயல்கொளா நிற்கு
     மிவளைவாழ் விக்க ... வரவேணும்

கரிகள்சேர் வெற்பி லரியவே டிச்சி
     கலவிகூர் சித்ர ... மணிமார்பா

கனகமா ணிக்க வடிவனே மிக்க
     கதிரகா மத்தி ... லுறைவோனே

முருகனே பத்த ரருகனே முத்தி
     முதல்வனே பச்சை ... மயில்வீரா

முடுகிமே லிட்ட கொடியசூர் கெட்டு
     முறியவேல் தொட்ட ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-

 நன்றி
கௌமாரம்

இரண்டு, மூன்று நாட்களாக வெளியூர் அலைச்சல்.

மற்றபடி பூரண நலமே..

முருகா முருகா
முருகா முருகா
***

10 கருத்துகள்:

  1. ஓம் முருகா...    வெளியூர்ப் பயணங்கள், அலைச்சல்கள் நிறைவடைந்தனவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணங்கள் முடிவதில்லை...

      மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.

    இன்றைய நாள் திருப்புகழுடன் தொடங்கி இருக்கிறது. அனைவருக்கும் முருகப் பெருமானின் பூரண அருள் கிடைத்திட எனது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதே நடக்கட்டும்..

      மகிழ்ச்சி
      நன்றி வெங்கட்

      நீக்கு
  3. திருப்புகழ் பாடி வணங்கினோம். கதிர்காமக் கந்தன் பாடல் பகிர்வு அருமை.

    அனைவர் நலனையும் கந்தன் காக்கட்டும் .

    ஓம் முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
  4. திருப்புகழ் பாடி முருகனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  5. திருப்புகழ் நன்று. சண்முகனை வணங்கிக்கொண்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..