நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை
திங்கட்கிழமை
கேழ்வரகு கூழ்
அற்புதமான உணவு.
பித்தத்தால் ஏற்படும் உடல் வெப்பத்தைக் கேழ்வரகு கட்டுப்படுத்தும். இதில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து இருப்பதால், ரத்தச் சோகையைக் கட்டுப் படுத்துகிறது.
கேழ்வரகு கஞ்சியினால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுகின்றது. உடலுக்கு ஊட்டம் கிடைக்கின்றது.
காய்ச்சலில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மூட்டுகளில் வலி ஏற்படலாம்.. இது குறைவதற்கு கேழ்வரகு கூழ் ஏற்றது.
சிறு குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்...
தெரு ஓரத்துத் தயாரிப்புகளை விட நாமே கூழ் செய்து கொள்வது முதன்மையாகும்..
செய்முறை
அரை டம்ளர் கேழ்வரகு மாவினை எடுத்து அளவாகத் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்...
உத்தேசமாக மூன்று குவளை (450 ml) தண்ணீரும்
சிறிது கல் உப்பும் சேர்த்து கொதிக்க வைத்து நன்றாக வெந்ததும் இறக்கி விடவும்.
இனிப்புக்கு, பனை வெல்லத்தைக் காய்ச்சி - வடிகட்டி ஊற்றி அதனுடன் சிறிதளவு தேங்காய்த் துருவலும் இரண்டு ஏலக்காயும் சேர்த்துக் கொள்ளலாம்..
உப்புக்கஞ்சி எனில் மோர், சின்ன வெங்காயம், உப்பு, சிறிது இஞ்சி , புதினா, கொத்த மல்லி தழை சேர்த்தும் தயாரிக்கலாம்..
கேழ்வரகு கூழ் ஓரளவுக்கு நீர்க்க இருப்பது சிறப்பு..
அவ்வப்போது கையளவு
முருங்கைக் கீரை சேர்த்தும் கூழ் தயாரிக்கலாம்..
நமது நலம்
நமது கையில்..
***



சிறப்பான தயாரிப்பு, உடலுக்கு நல்லது. வீட்டிலேயே தயாரித்துக் கொண்டால் இன்னும் சிறப்பு.
பதிலளிநீக்குஅதைத் தான் சொல்லி இருக்கின்றேன்...
நீக்குஏனோ இது மாதிரி ஆரோக்ய விஷயங்களில் நான் கவனம் செலுத்துவதில்லை. இத்தனை காலம் இப்படியே ஒட்டியாச்சு...
பதிலளிநீக்குசேலத்தில், நிறைய இடங்களில் மோர் விற்பார்கள். அங்கேயே இப்போது மாங்காய் சீசன் என்பதால், பக்கத்திலேயே புது பெரிய பெரிய ஊறுகாயும் வைத்திருப்பார்கள். மோர் வாங்கிக்கிட்டு, இரண்டு துண்டு மாங்காய் ஊறுகாயையும் கடிச்சுக்கலாம்.
நீக்குஇரண்டு பக்கமும் பாத்தால் இவையெல்லாம் கண்ணுக்குத் தெரியும்.
உடல் நலனுக்கு ஏற்ற நல்லதோர் கேழ்வரகு கூழ்.
பதிலளிநீக்குஉண்மை தான்
நீக்குமகிழ்ச்சி...
நன்றி
என்னமோ எனக்கு கூழ் பிடிப்பதில்லை.
பதிலளிநீக்குஎன் சகோதரன், நீர் விட்ட சாதத்தை நன்கு மோர் கலந்து, பச்சை மிளகாய் போன்ற சில சமாச்சாரங்கள் சேர்த்து கலந்து குடிப்பான். ரொம்ப நல்லது என்பான்.
இங்க மார்க்கெட்ல கூழ் விற்பவர்களைப் பார்ப்பேன். ஒரு கப் 30 ரூ. என்னவோ எனக்குப் பிடிப்பதில்லை (ஆரோக்கியம் என்று தெரிந்தாலும்)
மார்க்கெட்டில் விற்கின்ற கூழை எல்லாம் விரும்புவதில்லை
நீக்குஇந்தத் தடவை மதுரையில் பருத்திப்பால் சாப்பிட்டேன் (பாயசம்) சூப்பர். அதுபோல இனிப்பு சேர்த்தால் யம்மியா இருக்கும்.
பதிலளிநீக்குநெல்லை அவர்களது வருகைக்கும் கருத்த்துகளுக்கும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. கேழ்வரகு கூழ் சிறப்பான செய்முறையுடன் பகிர்ந்துள்ளீர்கள். இந்த கேப்பை கூழ் உடல்நலத்திற்கு ஏற்றது. ஒல்லியாக ஊட்டச்சத்து குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு இதை செய்து தரச் சொல்லி பரிந்துரைப்பார்கள். உங்கள் செய்முறைகள் நன்றாக உள்ளது. மோர், உப்பு சேர்த்து குடிக்கலாம். நல்ல மருத்துவ பயனும் கூட. அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி..
நம் வீட்டில் கேழ்வரகு கூழ் புளிக்க வைத்து அதாவது முந்தைய நாள் த்யாரித்து பழைய சாதம் நீர்க்கக் குடிப்பது போல காலையில் சாப்பிடுவதுண்டு. சின்ன வெ உண்டு.
பதிலளிநீக்குசெய்த உடன் சாப்பிடுவதை விட ஆடிக்கூழ் தயாரிப்பது போல முந்தை நாள் மாலை தயாரித்து மறுநாள் குடிப்பது நல்லது.
இங்கு கன்னடத்தில் அம்ப்லி என்று சொல்லப்படும். இங்கு இது ரொம்ப பிரபலம். நம்ம ஊரிலும்தான்.
கம்புக் கூழும் ரொம்ப நன்றாக இருக்கும். இதே போஅல்தான்
கீதா
மேலதிக விவரங்களுக்கு மகிழ்ச்சி..
நீக்குநன்றி சகோ
நல்ல சத்து மிகுந்த கேழ்வரகு கூழ்.
பதிலளிநீக்குநானும் அடிக்கடி செய்வேன்.
உண்மை தான்...
நீக்குமகிழ்ச்சி..
நன்றியம்மா