ஞாயிறு, டிசம்பர் 28, 2025

மார்கழி 13

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 13 

குறளமுதம்

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.. 13

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த 
திருப்பாவை


புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்... 13
**
நாச்சியார் கோயிலில்
கல் கருடன் புறப்பாடு


காணொளிக்கு நன்றி
**

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை


முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன்என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.. 3

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிச்செய்த 
தேவாரம்

திருமறைக்காடு

தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
    தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
காண்டற் கரிய கடவுள் கண்டாய்
    கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
    மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் தானே.. 6/23/1

நன்றி
பன்னிரு திருமுறை
**
ஓம் ஹரி ஓம்
சிவாய நம ஓம்
**

6 கருத்துகள்:

  1. காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.....

    கல் கருட சேவை...... பார்த்து ரசித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி
      நன்றி வெங்கட்

      நீக்கு
  2. மார்கழி 13  ஆம் நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. தேவாரமும் பன்னிரு திருமுறையும் பாடிப் பழகிப் பார்த்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செந்தமிழும் நாப்பழக்கம்...

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..